முதலீடு குறித்து A to Z.. அடிப்படை விளக்கங்கள் - பொருளாதார நிபுணர் வ.நாகப்பன் நேர்காணல்

முதலீடு குறித்து A to Z.. அடிப்படை விளக்கங்கள் - பொருளாதார நிபுணர் வ.நாகப்பன் நேர்காணல்
முதலீடு குறித்து A to Z.. அடிப்படை விளக்கங்கள் -  பொருளாதார நிபுணர் வ.நாகப்பன் நேர்காணல்

வரவு பத்தணா, செலவு எட்டணா பகுதியில் சேமிப்பு மற்றும் முதலீடு குறித்து, வ.நாகப்பன் அவர்களுடன் ஒரு நேர்காணால்.

சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

வருமானத்தில் ஒரு பங்கை எடுத்து பாதுகாத்து வைத்துக்கொண்டு வருவது சேமிப்பு, ஆனால் அந்தப்பணம் பெருகாது. அதேசமயம் முதலீட்டில் பணம் பல மடங்காக பெருக வாய்ப்பு உள்ளது. சேமிப்பில் நாம் கெட்டிகாரர்கள். ஆனால் முதலீடு செய்வதில் நாம் கோட்டைவிட்டு விடுகிறோம்.

சேமிப்பின் வகைகள் போன்று, முதலீட்டிலும்  வகைகள் உண்டா?

சேமிப்பில் வங்கி சேமிப்பு, தபால்துறை சேமிப்பு ஆகியன உள்ளது. ஆனால், முதலீட்டில் பலதரப்பட்ட முதலீடுகள் உள்ளன. பாதுகாப்பான முதலீடு மற்றும் பாதுகாப்பற்ற முதலீடு, இரண்டிற்கும் இடைப்பட்ட முதலீடு ஆகியன உள்ளது. வருவாய் அதிகமாக இல்லவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், முதலீடு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என் நினைப்பவர்கள் அஞ்சலக சேமிப்பு, மற்றும் வங்கித்துறையில் தனது முதலீட்டை பாதுகாத்துக்கொள்ளலாம்.
பாதுகாப்பற்ற முதலீடு என்றால், பங்கு சந்தை சார்ந்த முதலீடு அதில் currency trading ரூபாயிக்கு நிகரான டாலர் அதில் வர்தகம் செய்வது அதில் லாபம் நட்டம் பார்ப்பது. commodity trading அதில் லாப, நட்டங்களை பார்கலாம். ஆனால் அதில் ஆபத்து அதிகம்.

எந்த வயதிலிருங்து முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்?

எத்தனை சீக்கரம் ஆரம்பிக்கமுடியுமோ அத்தனை சீக்கிரம் ஆரம்பிக்கலாம். அதாவது எப்பொழுது வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறோமோ அப்பொழுதே சேமிக்க ஆரம்பித்து விடலாம்.

ஒருவர் வாங்கும் சம்பளத்தில் எத்தனை சதவீதம் முதலீட்டில் போட்டால் நன்றாக இருக்கும்?

ஒருவர் எத்தனை சம்பளம் வாங்குகிறார் என்பதை பொருத்து முதலீடு செய்யவேண்டும் என்றில்லை. எவ்வளவு சேமிப்பு செய்கிறார் என்பதை பொருத்து தான் முதலீட்டு செய்யவேண்டும்.

மாதவருமானம் பெரும் ஒருவர் மாதா மாதம் EMI கட்டும் பொறுப்பில் இருப்பதால், அவரால், முதலீடு செய்ய முடியுமா? எந்த செலவுக்காக கடன் வாங்குகிறார்கள் என்பது முக்கியம். அந்த கடனை திருப்பி அடைக்கமுடியும் கடனா என்றும் பார்க்கவேண்டும். வாங்குகின்ற கடன் லாபமானதாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு நாம் வாங்கும் கடனை, ஒன்றில் முதலீடு செய்து அதிலிருங்து வரும் லாபம் நாம் வாங்கிய கடனுக்கு கட்டும் வட்டியை விட அதிகமானதாக இருந்தால் அது லாபகரமான கடனாகும். முதலில் சேமிப்பைத் தொடங்கவேண்டும் பிறகு முதலீடு செய்யவேண்டும்.

growthorinded investment and fixed investment இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஒரு வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் போடப்படும் முதலீடுகளிலிருந்து பெறப்படும் குறிப்பிட்ட சதவிகித வட்டியானது, நிரந்தரமாகப் பெறப்பட்டு முதலீடு நிலயானதாக இருக்கும் நிலையில் அது நிரந்தர முதலீடு எனப்படும். அதே சமயம், தங்கம் மற்றும் நிலத்தின் மீது செய்யப்படும் முதலீடானது பின் நாளில் அதன் மதிப்பீடு அதிகரிக்கப்பட்டு திரும்ப பெறப்படுவது  முதலீடுவளர்ச்சி (growing investment) ஆகும்.

எந்த சமயத்தில் பங்கு சந்தை முதலீடு, தங்கத்தின் மீதான முதலீடு மற்றும், நிலத்தின் மீதான முதலீடு செய்யப்பட வேண்டும்?

2012 முதல் 2015 வரை தங்கம் வீழ்சியை சந்தித்தது. டாலரின் விலை உயர்ந்தபோதும் தங்கத்தின் விலை வீழ்ந்தது. 2009 லிருந்து 2020 வரைக்கும் ரியல் எஸ்டேட் விலை ஏறவே இல்லை. அதேபோல் பங்கு சந்தை 2020ல் மிகப்பெரிய வீழ்சியை சந்தித்தது. ஆனால் 2003 லிருந்து 2008 வரை பங்கு சந்தை மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது. அதே போல் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது. ஆக ஒவ்வொரு முதலீட்டிற்கும் ஒரு கால கட்டம் இருக்கிறது. ஒரு சுழற்சி இருக்கிறது. அந்த சுழற்சிக்கு தகுந்தாற்போல் சந்தை நிலவரம் ஏற்ற இறக்கம் இருக்கும். ஒரு சில கால கட்டத்தில் தான் அனைத்து சொத்துகளும் அதிகரித்தது. அப்பொழுது நமக்குள் ஒரு குழப்பம் ஏற்படும். ஆக இந்த முதலீடு தான் நமக்கு ஆதாயம் தரும் என்று ஒரே சொத்தின் மீது முதலீடு செய்வது  ஆதாயம் தரக்கூடிய செயல் அல்ல.. ஆக நமது முதலீட்டை எல்லாவற்றிலும் பிரித்து முதலீடு செய்யவேண்டும்.

அதே போல நம்முடைய இக்கட்டான நிலயில், பண வீககம் உள்ள சமயத்தில் எது நமக்கு கைகொடுக்கும்? நாம் சேமித்த பணாமா? அல்லது நாம் சேமித்த முதலீடா?

பண வீக்கமுள்ள சமயத்தில் நமக்கு உதவி செய்வது பங்கு சந்தை தான். இருப்பினும், பணத்தை பிரித்து அனைத்திலும் முதலீடு செய்வது தான் நாம் நட்டத்தை சந்திக்காமல் இருப்பதற்கு வழிவகை செய்யும்.

FB RD யில் முதலீடு செய்யும் பொழுது அதன் முதிர்சி காலம் அதிகம் இருக்கும். ஆகவே அதில் முதலீடு செய்வதில் மக்கள் சில மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதனால் முதலீட்டில் உள்ள ஆபத்துகளை கூறுங்கள் fixed deposit ல் மூன்று விதமான தயக்கங்கள் உண்டு. முதலீடு செய்யக்கூடிய வங்கி பாதுகாப்பானதா? அதிக வட்டி உள்ளதா? என்று பார்க்கவேண்டும், ஒரு நபர், ஒரு வங்கியில் 500000 வரைக்கும் முதலீடு செய்யலாம். அதற்கு காப்பீடு வசதியும் உண்டு. பங்கு சந்தையில் வாய்ப்பு வரும்பொழுது fixed deposit ஐ பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள்.

சிட்பண்டில் முதலீடூ செய்வது லாபம் தருமா?

சிட்பண்டில் பத்து பேர் அதை உபயோகப்படுத்துபவர்களாகவும் பத்து பேர் முதலீடு செய்பவர்களாகவும் இருப்பார்கள் இதில் அதை உபயோகப்படுத்துபவர்களுக்குதான் லாபம் அதிகம். ஏனெனில், பணம் உடனடியாக கையில் கிடைப்பதுடன் அதை தொழிலில் முதலீட்டாக போட்டு அதிக லாபத்தை பெருக்கலாம்.

எமெர்ஜென்ஸி பணம் தேவை எனும் சமயத்தில் எது நமக்கு நல்ல முதலீடாக இருக்கவேண்டும்?

எமெர்ஜென்ஸி பணம் இக்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்று. இக்கால இளைஞர்கள் வருமானத்திற்கு தகுந்தார்ப்போல் செலவு செய்யவும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் வேலை இழப்பு சமயத்தில் இப்பணம் அவர்களிக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஆகவே நிரந்தர வைப்பு நிதி அவர்களுக்கு அவசியமாகிறது. அதே போல் கையில் போதிய அளவு பணமும் வைத்திருக்கவேண்டும் அப்பொழுது தான் நிலமையை சமாளிக்க முடியும்

சேமிப்பு மற்றும் முதலீடு குறித்து திரு. வ. நாகப்பன் நம்முடன் உரையாடியது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் வீடியோ தொகுப்பை காணவும்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com