முதல்ல ஸ்பெயின், இரண்டாவது பிரான்ஸ்! அப்ப இந்தியா?

முதல்ல ஸ்பெயின், இரண்டாவது பிரான்ஸ்! அப்ப இந்தியா?

முதல்ல ஸ்பெயின், இரண்டாவது பிரான்ஸ்! அப்ப இந்தியா?
Published on

சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லும் நாடுகளின் பட்டியலை உலக பொருளாதார அமைப்பு, ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது. 136 நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

2016 ஆம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலே காரணம் என கூறப்படுகிறது. ஜெர்மனி மூன்றாவது இடத்திற்கும், கடந்தாண்டில் 9 வது இடத்தில் இருந்த ஜப்பான், இம்முறை நான்காவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40 வது இடத்தில் உள்ளது.

டாப் 10 நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினை தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com