தமிழத்தின் கருத்துகளை புறக்கணித்து நியூட்ரினோவுக்கு ”ஓகே”

தமிழத்தின் கருத்துகளை புறக்கணித்து நியூட்ரினோவுக்கு ”ஓகே”

தமிழத்தின் கருத்துகளை புறக்கணித்து நியூட்ரினோவுக்கு ”ஓகே”
Published on

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பது குறித்த தமிழக மாசுக்கட்டுப்பாட்டு அறிக்கையினை கோரியிருந்தது. வாரியத்தின் அறிக்கையில் , மேற்கு தொடர்ச்சி மலை என்பது பல்லுயிர் பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், வன விலங்குகள், பறவைகள், புதிய உயிர்கள் உருவாகும் இடமாகவும் திகழ்வதாக கூறப்பட்டிருந்தது. அதோடு, 5 மாவட்ட மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஜீவாதாரமாக திகழ்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. திட்டம் நிறைவேற்றப்பட்டால் இவை அனைத்தும் அழிந்து விடுமோ என்ற பயத்தையும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. மேலும் மலையை குடைந்து இது போன்று திட்டத்தை நிறைவேற்றுவது என்பது எதிர்காலத்தில் பாறை வெடிப்பு , இடம் மாறுதல் போன்றவற்றை ஏற்படுத்தும் ; அதுவே மக்கள் வாழ்வதற்கான சூழலை இல்லாமல் செய்யும் என்பதால் திட்டம் வேண்டாம் என தெரிவித்தனர்.

ஆனால், மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு இவை எதையும் கண்டு கொள்ளவில்லை. தங்களது கூட்டத்தில் இதை நிராகரிப்பதற்கான காரணங்கள் என்னவென்று முழுமையாக விளக்காமல், அப்படியெல்லாம் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என கூறி, சுற்றுச்சூழல் அனுமதிக்கு பரிந்துரைத்து விட்டனர். இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால், சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய மதிப்பீட்டு குழு, திட்டத்தில் 100க்கு மேற்பட்ட விஞ்ஞானிகள், 25 ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதால், அறிவியல் ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கூறியுள்ளது. மேலும், புவியியல் ஆராய்ச்சி அமைப்பின் அறிக்கைம் நீதிமன்ற வழக்குகள், பொட்டிபுரம் மக்களின் கருத்துகள் ஆகியவ்ற்றை முழுமையாக ஆராய்ந்ததில் , அனுமதி வழங்குவதற்கு பரிந்துரைப்பதில் தவறில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மதிப்பீட்டு குழு தெரிவித்துள்ளது. திட்டம் குறித்து பொட்டிபுரம் மக்களிடன் கருத்துகள் கேட்கப்பட்டது 2010-ல் என்பது கூடுதல் தகவல்.

அதிகபட்சமாக சோலார் வழியாக நியூட்ரினோ ஆய்வு மையம் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், கழிவுகள் முறையாக கையாளப்பட்டு அகற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாழ்வதற்கான சூழல் இல்லாமல் போகும் என்ற வாதத்திற்கு வாய்பில்லை என கூறியுள்ள மதிப்பீட்டு குழு, ஒவ்வொரு 80 சதுர மீட்டருக்கும் ஒரு மரம் வைத்து வளர்க்க வேண்டுமென கூறியுள்ளது. ஏற்கனவே முல்லை பெரியாறில் தமிழகம் கேரளம் இடையே பிரச்னை நிலவும் சூழலில், தினசரி 340 கிலோ லிட்டர் தண்ணீர் தினமும் எடுத்துக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் தெரிவித்த கருத்துகளான கதிர்வீச்சு அபாயம் , நிலத்தடி நீர் பிரச்னை, வனவிலங்குகள் வாழும் சூழல், பல்லுயிர் பெருக்க பாதிப்பு என
அனைத்தையும் புறம் தள்ளி, தற்போது சுற்றுச் சூழல் அனுமதி கொடுக்க பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் கருத்துகள் தேவையில்லை ; சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையும் தேவையில்லை என்கிறது மதிப்பீட்டு குழு. தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் இதுவரை அனுமதி தராத சூழலில்,
சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கப்பட்டால், வேறு வழியின்றி இவர்களும் அனுமதிப்பார்கள். இதற்கிடையில் நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்போம், அது தேவையில்லை என அதிமுக எம்பி தம்பிதுரை பேட்டியளிக்க, நியூட்ரினோ திட்டத்தில் மக்களின் கருத்துகள் , உணர்வுகளை புரிந்து கொண்டு அவை மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும் என்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com