அம்மா ஸ்கூட்டர்: யாருக்கு அடிக்கிறது ஜாக்பாட் ?

அம்மா ஸ்கூட்டர்: யாருக்கு அடிக்கிறது ஜாக்பாட் ?

அம்மா ஸ்கூட்டர்: யாருக்கு அடிக்கிறது ஜாக்பாட் ?
Published on

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன மானிய திட்டத்தின் கீழ் , வேலைக்கு செல்லும் மகளிர், சுய தொழில் புரியும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர மோட்டார் வாகனம் வழங்கப்பட உள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். விடுமுறை தினத்திலும் கூட , பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து விண்ணப்பங்களை பெற்றும், விண்ணப்பித்தும் செல்கின்றனர்

சரி, அவங்க அப்ளை பண்ணிட்டு போகட்டும் ; நாம விஷயத்துக்கு வருவோம். அம்மா மானிய திட்டத்துல ஒரு வருஷத்துக்கு 1 லட்சம் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் அப்படினு சொல்லப்பட்டிருக்கு. இன்றைக்கு நிலைமையில எந்த கம்பெனில இருசக்கர கியர் இல்லாத மோட்டார் வாகனம் வாங்கினாலும் குறைந்தபட்சம் ரூ.45 ஆயிரத்துல இருந்து அதிகபட்சம் ரூ.65 ஆயிரம் வரைக்கு விற்கப்படுது. இன்னும் அதிக விலைக்கு கூட விற்குறாங்க. ஆனால் நடுத்தர வர்க்கம் இதை தாண்டி வாங்குறது இல்லை என்பதால் இப்படி வச்சுப்போம்.

ஒரு ஸ்கூட்டர் 45 ஆயிரம் ரூபாய். உங்க பணம் இதுல பாதி , அதாவது ரூ.22500 ; அரசு சார்பில இருந்து ஒரு ரூ.22500 ; எல்லாரும் ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கணும்னு விதி இருக்கா என்னா ? ரூ.50 ஆயிரமோ, ரூ60 ஆயிரத்துக்கோ நீங்க வண்டி வாங்குனா திட்டத்தின் அடிப்படையில் அதிகபட்ச மானியமான ரூ.25 ஆயிரம் அரசாங்கமும் , மிச்சத்த நீங்களும் கட்டணும். இப்போ ஒரு ஸ்கூட்டர் சராசரியா 50 ஆயிரம் ரூபாய்னு வச்சுப்போம். ஒரு ஸ்கூட்டம் 50 ஆயிரத்துக்கு வாங்குனா, ஒரு லட்சம் ஸ்கூட்டர் எவ்வளோ விலை ?

 எண்ணிக்கை  விலை
 1 * 50000 (அதிகபட்ச விலை) 50000
 100000 * 50000   500 கோடி  (வருசத்துக்கு)
 

 250 கோடி (அரசு மானியம்)

தமிழக அரசு சார்பில் இருசக்கர வாகன மானிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாளே அதிகமான இருசக்கர வாகன ஷோரூம்களில் காண கிடைத்த வாசகம் “அம்மா ஸ்கூட்டர் ஈசியா வாங்க , இங்க வாங்க” என தமிழக அரசின் விளம்பர வாசகமும் சேர்ந்தே இடம் பெற்றிருந்தது. பயனாளர்களின் முழு விபரமும் வரும் வர்ற 15-ம் தேதி வெளியாகிறது. இதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன ஷோரூம்கள். இப்போதே அந்தப் பட்டியலுக்காக வழி மேல விழி வைத்து இருக்கிறார்கள். சிறப்பு அதிகாரிகள், முகவர்கள் எல்லாம் போட்டிருக்காங்கலாம். ஒரு லட்சம் வண்டினா சும்மாவா என்ன ?.

எப்படி பார்த்தாலும் , ஒரு லட்சம் வண்டிகள் விற்க போகுது ; பெண்களும் தங்களுக்கு விருப்பமான வண்டிகள்னு சிலவற்றை செலக்ட் பண்ணி வச்சிருப்பாங்க. அது போன்ற வண்டிகளை இப்போது கேட்டுப் பெற்றிருக்கின்றன சில ஷோரூம்கள். இது ஒருபக்கம் இருக்க, ஸ்கூட்டர் மானிய திட்டத்துல விண்ணப்பித்தவர்களோட எண்ணிக்கை 2 லட்சத்த தாண்டியிருக்கு. ”செல்லாது செல்லாது” என்று ஸ்பாட்ல ரிஜக்ட் பண்ணப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியிருக்கு. முதல்நிலை சோதனையில் தேர்வானவர்கள் பட்டியல் இன்றைக்கு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்பட இருக்கு.

 ஆக, யாருக்கு ஜாக்பாட் – வேற யாருக்கு வாங்குறவர், கொடுக்குறவர், விற்கிறவர் மூணு பேருக்குந்தான்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com