சவுத் ஆப்பிரிக்காவில் ஷாப்பிங்கெல்லாம் கூட்டிப் போனேனே !! கலங்கும் ஷமி..

சவுத் ஆப்பிரிக்காவில் ஷாப்பிங்கெல்லாம் கூட்டிப் போனேனே !! கலங்கும் ஷமி..

சவுத் ஆப்பிரிக்காவில் ஷாப்பிங்கெல்லாம் கூட்டிப் போனேனே !! கலங்கும் ஷமி..
Published on

இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி மீது அவரது மனைவி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். பல்வேறு பெண்களை வெளிநாடு செல்லும் போது ஹோட்டலுக்கு வர சொல்லி அவர்களோடு ஷமி உறவில் இருந்ததாகவும் புயல் கிளப்பினார். இந்நிலையில் பிசிசிஐயும் அவரது பெயரை ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கியது.

இவையெல்லாம் உண்மையா என முகம்மது ஷமி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவ்வப்பொழுது எனக்கும், என் மனைவிக்கும் சில சண்டைகள் ஏற்படுவது உண்டு; ஆனால், அவளை விட்டு நான் பிரிந்ததே கிடையாது; அனைத்து தருணத்திலும் உடனிருந்திருக்கிறேன்; எனக்கெதிராக சொல்லப்படும் எந்த குற்றச்சாட்டிலும் உண்மையில்லை ; எல்லாமே ஆதராமற்றவை’ என்கிறார் ஷமி.

அதோடு “ 5 வருஷமாவே நானும், மற்ற பெண்களும் தொடர்பில் இருப்பதாக என் மனைவி கூறுகிறார். ஆனால் எங்களுக்கு திருமணமாகியே 4 வருடங்கள்தான் ஆகிறது; 5 வருஷமா இந்த பிரச்னை இருந்தா, ஏன் முன்னாடியே சொல்லல , இப்போது இதெல்லாம் சொல்றதுக்கு பின்னாடி ஏதோ சதி இருக்கிறது “ என்று கூறும் ஷமி , தன்னை சிறுமைப்படுத்தவே தனது மனைவி விரும்புகிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பேசிய ஷமி, ஒரு மொபைல் நம்பரையும், அதன் சாட்களையும் காட்டி நான் பெண்களோடு பேசியதாக எனது மனைவி கூறுகிறார், ஆனால் அந்த மொபைல் நம்பர் என்னோடதே கிடையாது; எனக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத, மொபைல் எண்ணை வைத்தும், அதிலிருந்து செய்யப்பட்ட மெசேஜ்களையும் வைத்து என்னை எப்படி குற்றவாளி ஆக்கலாம் எனவும் ஷமி கேள்வி எழுப்புகிறார்.

அதோடு, இது பற்றியெல்லாம் பேசி புரிய வைக்க எனது மனைவியை தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. எனது மாமனாரை தொடர்பு கொண்டபோது மிகுந்த அன்போடு அவர் பேசினார். அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும். என்னையும், எனது கிரிக்கெட்டையும் நாசமாக்க ஏதோ சதி நடக்கிறது, விரைவில் அனைத்தும் வெளிவரும் என சொல்லும் ஷமி, எல்லாமே நல்லாதான் போயிட்டு இருந்துச்சு, ரொம்ப அன்போடு இருந்தவ என் மனைவி, முக்கிய போட்டி ஒன்றுக்கு தேர்வுக் குழுவோடு இருக்க வேண்டிய சூழலில் கூட, எனது மனைவி ஆசைப்பட்டதால் அவரை சவுத் ஆப்பிரிக்கவில் ஷாப்பிங் எல்லாம் கூட்டிட்டு போனேன் தெரியுமா ? என புலம்புகிறார்.

பின்னணி:

முகமது ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.

பெண்களின் புகைப்படங்கள் மற்றும் மொபைல் எண்களை அவர் பதிவிட்டுள்ளார். இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களுடன் ஷமி இருக்கும் புகைப்படங்கள் உள்ளன. அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தில் இவர் பாகிஸ்தான் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண். இவருடனும் ஷமி தொடர்பில் உள்ளார் என தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில் ஷமியுடன் ஒரு இளம்பெண் உரையாடுவது போல் உள்ளது. அதில் நீ எங்கு இருக்கிறாய் உன்னை பார்க்க வேண்டும். நீ எப்போது பெங்களூரு வருவாய் என அந்த குறுஞ்செய்தி நீண்டுக்கொண்டே செல்கிறது.

முதலில் இந்தப் பதிவுகளை எல்லாம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சற்று அதிர்ச்சியுடனே பார்த்தனர். ஒருவேளை ஹசின் ஜகானின் முகநூல்பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணினர். ஷமிக்கு இருக்கும் நற்பெயரை கெடுக்கும் விதத்தில் இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் என்றே பேசப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஹசின் ஜகான், தனது கணவர் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவலை அளித்தார். அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவதூறாக பேசுவதாகும் கூறினார். மேலும் தன்னை அவர்கள் கொலை செய்ய முயற்சிக்கின்றனர் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

தென்னாப்பிரிக்கா தொடர் முடிந்து இந்தியா திரும்பிய ஷமி தன்னை தாக்கினார். அவரின் நடத்தையை மாற்றிக்கொள்ளுமாறு பல்வேறு முறை அவரிடம் தெரிவித்துள்ளேன். அவருக்கு அவகாசங்கள் அளிக்கப்பட்டுவிட்டன. ஷமி ஒவ்வொரு முறை என்னை துன்புறுத்தும்போது எனது குடும்பத்துக்காகவும் எனது குழந்தைக்காகவும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். ஆனால் இனியும் என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது. இதுதொடர்பாக சட்ட ரீதியாக புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

இவ்விவகாரத்தில் இதுவரை அமைதி காத்த வந்த ஷமி ட்விட்டரில் தனது மனைவியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் பதிவிட்டுள்ளார். அதில்  “இது என் தனிப்பட்ட வாழ்க்கை. என் சொந்த விஷயம். என் பெயரை கெடுக்க அனுமதிக்கமாட்டேன். இது எனக்குஎ திரான ஒரு சதி. இதில் எனக்கு உதவுங்கள். ” எனப் பதிவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com