வங்கதேசத்திற்கு பாடம் கற்பித்த தோனி - மறக்க முடியாத அந்த நாள்

வங்கதேசத்திற்கு பாடம் கற்பித்த தோனி - மறக்க முடியாத அந்த நாள்

வங்கதேசத்திற்கு பாடம் கற்பித்த தோனி - மறக்க முடியாத அந்த நாள்
Published on

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் வங்கதேசத்தை இந்திய அணி வீழ்த்தியது. 18வது ஓவர் வரை வங்கதேச அணியின் வசம் வெற்றி இருந்தது. கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இதனால் இந்திய அணி தோல்வி என்றே எல்லோரும் உறுதி செய்துவிட்டார்கள். தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் மூன்று சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் விளாச இந்தியா வெற்றி பெற்றது. இதில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் அசத்தலாக தினேஷ் சிக்ஸர் அடித்தார். 

இந்தப் போட்டி, டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான அணி வங்கதேசத்தை கடைசி ஓவரில் தோற்கடித்ததை பலருக்கும் நினைவுபடுத்தியது. இந்திய ரசிகர்கள் இரண்டு போட்டிகளையும் ஒப்பிட்டு மீம்ஸ்களை பதிவிட்டனர். அதேபோல், தினேஷ் கார்த்திக்கையும், தோனியையும் ஒப்பிட்டும் கருத்து பதிவிட்டனர். இந்தியா, வங்கதேசத்திற்கு இடையிலான அந்தப் போட்டி நடைபெற்றது இதேநாளில் தான்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. 148 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இதனால், வெற்றி கிட்டத்தட்ட வங்கதேச அணியின் பக்கமே இருந்தது. அந்த ஓவரை பாண்ட்யா வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. இதனால், 3 பந்துகளில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வளவுதான், வங்கதேச அணி வெற்றி நிச்சயம் என எல்லோரும் முடிவு செய்துவிட்டார்கள். 

வங்கதேச ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்கள். அவர்கள் முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி. ஆனால், இந்திய ரசிகர்களோ திக்கென்று அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்கள். கடைசி ஓவரில் 11 ரன்கள் என்பதால், தோனி அணி எப்படியும் வெற்றி பெற வைத்துவிடும் என்று நினைத்தால் இப்படி ஆகிவிட்டதே என்று உறைந்து போய்விட்டார்கள். 4வது பந்தில் ஒரு விக்கெட் விழுந்தது. அப்பொழுதும் நிச்சயமற்ற நிலைதான் இருந்தது. இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே வேண்டும். ஒரு ரன் அடித்தாலும் டிரா ஆகிவிடும். இப்படி இருக்க 5 பந்திலும் ஒரு விக்கெட். ஜடேஜா அற்புதமாக கேச் பிடித்து அசத்தினார். 

இதனால், கடைசி பந்தில் இரண்டு ரன்கள் என்ற திக்..திக்..திக் நிலை ஆகிவிட்டது. இரு நாடுகளின் ரசிகர்கள் மத்தியில் பதற்றம். பாண்ட்யா ஆப் சைடில் அந்த பந்தை வீச, பேட்டில் படாமல் கீப்பர் தோனியிடம் பந்து சென்றது. பந்தை லாவகமாக பிடித்த தோனி நேரடியாக தூக்கிவீசி ஸ்டம்பிங் செய்யவில்லை. பந்தை எடுத்துக் கொண்டு ஸ்டம்ப் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக ஓடி ரன் அவுட் செய்தார். மூன்றாவது அம்பயரின் முடிவு கோரப்பட்டது. எல்லோருக்கும் திக் திக்கென இருந்தது. அவுட் என ஸ்கிரீனில் தெரிந்ததும் இந்திய வீரர்கள், ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர். தோனி அப்படி ஏன் செய்தார் என யாருக்கும் முதலில் புரியவில்லை. ரன் அவுட் செய்ய முயற்சித்து பந்து படாமல் சென்றிருந்தாலும் போட்டி டிரா ஆகியிருக்கும். தோனி ஸ்டம்பிற்கும் தனக்கும் இடையிலான தூரத்தை சரியாக கணித்து ரன் அவுட் செய்துவிட்டார். 

வங்கதேசத்தின் வசம் இருந்த வெற்றியை இந்திய அணி தட்டிப் பறித்துவிட்டது. வெற்றி உறுதி செய்யும் வரை கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதை வங்கதேசத்திற்கு தோனியின் அணி உணர்த்தியது. அதேபோல் தான், இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரிலும் இந்திய அணி செய்தது. பாம்பு டேன்ஸ் செய்த அணிக்கு பதிலடி கொடுத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com