அணி மாறும் கூட்டணி கட்சிகள்

அணி மாறும் கூட்டணி கட்சிகள்

அணி மாறும் கூட்டணி கட்சிகள்
Published on

இந்திய அரசியல்  வரலாற்றில் கூட்டணிகள் காலந்தோறும் உருவாவதும், அவற்றில் இடம்பெறும் கட்சிகள் அணிமாறுவதும் வாடிக்கையான ஒன்று. தற்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் வலுவான அணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி தீவிரமாக களமிறங்கியுள்ளார். இதன்கரணாமாக டில்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் தமிழகத்தில் இருந்து திமுகவிற்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணில் இடம்பெற்றிருந்த கட்சிகள் அணிமாறியது குறித்த செய்தி தொகுப்பு

கடந்த 1980 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி எதிரணியில் இருந்து தேர்தலை சந்தித்து வந்த திமுக 24 ஆண்டுகளுக்கு பின்பு  2004ம்  ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. குறிப்பாக, கடந்த 1999 நாடாளுமன்ற தேர்தலில்  பாஜக கூட்டணியில் இருந்த திமுக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் 2004 நாடாளுமன்ற தேர்தலில் அணிமாறின. தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, ஆகிய இணைந்து ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் இணைந்து செயல்பட்டது. இதே அணி  தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியில் இணைந்து தேர்தலை சந்தித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

2009ம் ஆண்டு  நடைபெற்ற  நாடாளுமன்ற  தேர்தலில் இந்த வெற்றிக்கூட்டணி  தொடரும்  என்று  பலர் எதிர்பார்த்த   நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த மதிமுக 2006ம் ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக அணிக்கு மாறியது. இருப்பினும், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில்  மதிமுக நீடித்து வந்தது, இதற்கு திமுக தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் 2007ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அமெரிக்காவுடன் செய்த  அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக 2008ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் வாபஸ் பெற்றது.

இந்நிலையில், 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விலகி அதிமுக அணிக்கு மாறியது.அதேபோல், அதிமுக கூட்டணியில் இருந்த  விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் அணிக்கு தாவியது. தேமுதிக முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து, அதிமுக அணி மூன்றாவது அணிக்கு சென்றதால், பாஜக தனித்து போட்டியிட்டது.

கடந்த 2004ம் ஆண்டில் இருந்து 2014 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை வரை  காங்கிரஸ் கட்சியுடன் திமுக சுமூக உறவுடன் தேர்தலை சந்தித்து வந்த நிலையில், ஈழத் தமிழர் பிரச்னையை முன்வைத்து 2013ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டது, இருப்பினும் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அணியில் தான் திமுக இருந்தது. இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்து.

கடந்த தேர்தலில் அதிமுக அணியில் இருந்த இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிட்டன. கடந்த முறை தனித்து களம் கண்ட பாஜக மோடி அலையின் காரணமாக பாஜக கூட்டணியில் மதிமுக, தேமுதிக, கொங்குநாடு தேசிய கட்சி உட்பட பல கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இருப்பினும் அதிமுக தனித்து போட்டியிட்டு 40 தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றி பெற்றது.

வரும் 2019ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அதே கூட்டணியில் தொடருமா அணி மாறுமா என்பதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com