எடைக்குறைப்புக்கு ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்துபவரா நீங்கள்? நிச்சயம் இதனை கவனிக்க ...

எடைக்குறைப்புக்கு ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்துபவரா நீங்கள்? நிச்சயம் இதனை கவனிக்க ...
எடைக்குறைப்புக்கு ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்துபவரா நீங்கள்? நிச்சயம் இதனை கவனிக்க ...

சமீபகாலமாக உடற்பயிற்சி இல்லாமல், பக்கவிளைவுகள் அதிகம் இல்லாமல் உடல் எடையை எளிதில் குறைக்க விரும்புபவர்கள் அதிகம் தேர்ந்தெடுப்பது ஆப்பிள் சீடர் வினிகர். இது எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன், முகப்பரு, காயம் போன்ற தொல்லைகளுக்கு தீர்வும் கொடுக்கிறது. அதேசமயம் இதை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் கட்டாயம் பக்கவிளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக்கொள்வதற்கு முன்பு கவனத்தில் கொள்ளவேண்டியவைக் குறித்தும் விளக்குகின்றனர்.

உணவுக்குப்பின் ஆப்பிள் சீடர் வினிகர்

சாப்பிட்ட உடனேயே இந்த வினிகரை குடித்தால் உடல் எடையை எளிதில் குறைத்துவிடலாம் என சிலர் நினைப்பார்கள். ஆனால், இது உணவு செரிப்பதை தாமதப்படுத்துகிறது. வெறும் வயிற்றில் குடிக்கும்போது உடல் ஆரோக்யத்தை மேம்படுத்துவதுடன், உணவு செரிக்கும் தன்மையையும் அதிகரிக்கிறது. உணவுக்குப் பிறகு குடிக்க விரும்புபவர்கள் சாப்பிட்டு முடித்து 20 நிமிடங்கள் கழித்தே குடிக்கவேண்டும்.

முகர்ந்து பார்ப்பதை தவிர்க்கவும்

சிலர் எந்த பொருளை வாங்கினாலும் அதன் வாசனையை நன்கு முகர்ந்து பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பர். ஆப்பிள் சீடர் வினிகரை முகர்ந்து பார்க்கும்போது அதன் நெடியானது நுரையீரலை பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இது நுரையீரலில் ஒருவித அலர்ஜி உணர்வை ஏற்படுத்தும்.

கலக்க மறவாதீர்கள்!

ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே குடித்தால் அது பற்களின் எனாமலை அரித்து சேதப்படுத்திவிடும். அதேபோல் வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் வரும் என்று நினைப்போம். ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே குடிக்காமல், மூன்று பங்கு நீரில் ஒரு பங்கு வினிகர் கலந்து குடிப்பதே நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

அதிக அளவில் குடிக்கிறீர்களா?

உடலுக்கு அதிக நன்மை பயக்கிறது என்று எண்ணி சிலர் அளவுக்கு அதிகமாக குடித்துவிடுவார்கள். இது கட்டாயம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மறக்கவேண்டாம். தாங்கமுடியாத வயிறு எரிச்சலை உண்டாக்குவதுடன், பலவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என எச்சரிக்கின்றனர். ஒரு நாளைக்கு 2 டேபிள்ஸ்பூன்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளவேண்டாம்.

தூக்கத்திற்கு முன்பு குடித்தல்

படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக்கொள்வது என்பது நல்லதல்ல. படுப்பதற்கு முன்பு இதை குடித்தால் உணவுக்குழாயில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பு குடிப்பதே சிறந்தது.

சருமத்தில் நேரடியாக தடவுதல்

ஆப்பிள் சீடர் வினிகரை சருமத்தின்மீது நேரடியாக தடவுவது கண்டிப்பாக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சரும வீக்கம் மற்றும் தொற்றுகளின்மீது பயன்படுத்த நினைப்பவர்கள் ஏதாவது ஒன்றுடன் கலந்து பின்னர் பயன்படுத்தவேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com