இந்த ஸ்நாக்ஸ்களை டீயுடன் சேர்த்து சாப்பிடுபவரா? ஆபத்து உங்களுக்குத்தான்!

இந்த ஸ்நாக்ஸ்களை டீயுடன் சேர்த்து சாப்பிடுபவரா? ஆபத்து உங்களுக்குத்தான்!
இந்த ஸ்நாக்ஸ்களை டீயுடன் சேர்த்து சாப்பிடுபவரா? ஆபத்து உங்களுக்குத்தான்!

காலை எழுந்தவுடன் எத்தனை பேருக்கு ஒரு கப் டீ குடித்தால்தான் நாளே தொடங்குகிறது? சிலருக்கு மாலை நேரங்களில் சுடசுட ஒரு கப் டீயுடன் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது பிடித்தமானதாக இருக்கும். இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த பானங்களில் ஒன்று டீ. பெரும்பாலானோர் டீயுடன் பிஸ்கட் மற்றும் சாண்ட்விட்ச் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவர்.

சிலர் பக்கோடா, இனிப்புகள், சமோசா மற்றும் கச்சோரி போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதை விரும்புவர். தனது சிறந்த சுவையை தாண்டி, டீயில் நிறைய ஆரோக்கியங்களும் இருக்கிறது. ஆனால் அவற்றை சில ஸ்நாக்ஸ்களுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடாக அமையும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்

பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், பருப்புகள் மற்றும் கூழ்வகைகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. டீயில் டான்னின்ஸ் மற்றும் ஆக்சலேட்டுகள் நிறைந்திருப்பதால் இவை உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சுவதை தடுத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

எலுமிச்சை

சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. இருப்பினும் இதனை பால் டீயுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. உடல் எடையை குறைப்பதில் லெமன் டீ மிகவும் பிரபலமானதாக பார்க்கப்பட்டாலும், நேரடியாக டீ இலைகளை, எலுமிச்சையுடன் சேர்ப்பது அதீத அசிடிட்டி, ஏப்பம் மற்றும் எதுக்களித்தல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

எனவே காலை வெறும் வயிற்றில் லெமன் டீ குடிக்கவேண்டாம் எனவும் வலியுறுத்துகின்றனர். ஏற்கனவே அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள் இதனை அறவே தவிர்ப்பது நல்லது என்கின்றனர்.

கடலை மாவு

டீ - பக்கோடா காம்பினேஷன் எத்தனை பேருக்கு பிடிக்கும்? இந்த சுவையான மொறுமொறுப்பான ஸ்நாக்ஸை டீயுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கக்கூடியது. பெரும்பாலான இந்திய ஸ்நாக்ஸுகள் கடலை மாவை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. கடலை மாவானது ஊட்டச்சத்துகளை ரத்தம் உறிஞ்சுவதை தடுக்கின்றன. இதனால் வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

குளிர்ந்த உணவுகள்

ஐஸ்க்ரீம் போன்ற ஜில் உணவுகளை டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அது அறை வெப்பநிலையில் இருந்தாலும்கூட சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். இந்த தீங்கு விளைவிக்கக்கூடிய காம்பினேஷனானது செரிமான செயல்முறையை பெரிதளவில் பாதிக்கும் என்கின்றனர்.

வெவ்வேறு வெப்பநிலை உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது செரிமான மண்டலத்தை பலவீனமாக்குவதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே சூடான டீ அல்லது காபி குடிப்பதற்கு கிட்டத்தட்ட 30 - 45 நிமிட இடைவெளியில் குளிர்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்கின்றனர்.

மஞ்சள்

இந்தியாவில் சிறந்த மசாலா உணவுகளில் ஒன்று மஞ்சள். இது ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க உதவுகிறது. எனினும் இதனை டீயுடன் சேர்த்து சாப்பிடுவது என்பது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்னை போன்றவற்றை ஏற்படுத்தி வயிற்றின் உட்புறங்களை அரித்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

நட்ஸ்

உடலுக்கு பலத்தையும், ஊட்டச்சத்தையும் அளிப்பதில் நட்ஸ்களின் பங்கு அளப்பரியது. ஆனால் இதனை டீயுடன் சேர்ப்பது நல்லதல்ல. வறுத்த வேர்க்கடலை, மசாலா முந்திரி அல்லது சால்ட்டி பிஸ்தா போன்றவை சிறந்த நொறுக்குத்தீனிகளாக பார்க்கப்பட்டாலும், இவற்றில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் பால் மற்றும் டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com