அதிகாரம் படைத்தவராக வலம் வந்த துணைவேந்தர் மனைவி

அதிகாரம் படைத்தவராக வலம் வந்த துணைவேந்தர் மனைவி
அதிகாரம் படைத்தவராக வலம் வந்த துணைவேந்தர் மனைவி

பாரதியார் பலகலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்சப் புகாரில் கைதான நிலையில் அவரது மனைவியும் இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. 

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கிய புகாரில் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்காக சுரேஷ் என்பவரிடம் துணைவேந்தர் கணபதி 30 லட்சம் ரூபாய் பெற்றதாகப் புகார் எழுந்தது. இதற்காக சுரேஷிடம் துணைவேந்தர் கணபதி 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 29 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தப் புகாரில், துணைவேந்தரின் வீடு மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கணபதி, லஞ்சப் புகாரில் கைதான நிலையில் அவரது மனைவியும் இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. எம்.ஏ கிரிமினாலஜி படித்துள்ள கணபதியின் மனைவி சொர்ணலதாவும் இந்த வழக்கில் சேர்க்கப்படவுள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் உறுதி படத்தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சொர்ணலதா பல்கலைக்கழகத்தில் வானவளாவிய அதிகாரத்துடன் வலம் வந்துள்ளர். குறிப்பாக கணபதியிடம் நல்ல பெயர் எடுக்க சில பேராசிரியர்கள் சொர்ணலதா சொல்படி பணியாற்றியதெல்லாம் தெரிய வந்துள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் அவருக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை என்றாலும் பல்கலைக்கழக நிகழ்வுகளில் கலந்து கொள்வதையெல்லாம் சொர்ணலதா வழக்கமாக கொண்டிருக்கிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சிறப்பாக டிஜிட்டல் பணபரிமாற்றம் மேற்கொண்ட கல்லூரிக்கு விருது வழங்கும் விழாவில் கணபதியுடன் சேர்ந்து சொர்ணலதாவும் மேடையேறி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவுடேகரிடம் விருது பெற்று கொண்டார். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி நிர்வாகிகள் மேடையேறவில்லை என்பதுதான் இதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதேபோல் பலகலைக்கழகத்தில் சாதாரண பணியாட்கள் முதல் கணபதிக்கு நெருக்கமான பேராசிரியர்கள் வரை சொர்ணலதா சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்ததாக பல்கலைக்கழக வட்டார தகவல் தெரிவிக்கின்றன். மேலும் துணை வேந்தர் லஞ்சம் பெறும் பணத்தை கையாளுவதில் முக்கிய பங்காற்றுபவராக சொர்ணலதா இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com