முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் வீரக் கதை!

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் வீரக் கதை!
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் வீரக் கதை!

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான எஸ்டேட் பகுதியில் விபத்தில் சிக்கியது. இந்த ஹெலிகாப்டர் தரையிறங்க வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருக்க விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் ஹெலிகாப்டர் எரிந்து சாம்பலாகி உள்ளது. தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் இந்த ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர். 

இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்தவர்களில் தலைமைத் தளபதி பிபின் ராவத்தூம் ஒருவர். அவருடன் அவரது மனைவி Madhulika ராவத்தும் பயணம் செய்துள்ளார். இந்த துயரமான சூழலில் தலைமை தளபதி பிபின் ராவத் குறித்து தெரிந்து கொள்வோம். 

உத்தராகண்ட் மண்ணின் மைந்தர்!

தலைமை தளபதி பிபின் ராவத், கடந்த 1958 மார்ச், 16 அன்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள Pauri டவுனில் பிறந்தவர். அவருக்கு வயது 63. தலைமுறை தலைமுறையாக இந்திய ராணுவத்தில் அவரது குடும்பம் சேவையாற்றி வந்துள்ளது. பிபின் ராவத்தின் தந்தையார் லக்ஷ்மண் சிங் ராவத் ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் அதிகாரியாக பணியாற்றியவர். டேராடூன் மற்றும் ஷிம்லாவில் அவர் பள்ளிக் கல்வி பயின்றுள்ளார். பின்னர் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் மேற்படிப்பு பயின்றவர். குன்னூரில் உள்ள வெலிங்டனில் இந்தியாவின் முப்படை அதிகாரிகளின் கூட்டுப் பயிற்சி நிறுவனத்தில் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2011-இல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் அவர். அமெரிக்காவின் ராணுவ கமெண்ட் மற்றும் ஜெனரல் ஸ்டாப் கல்லூரியில் Higher Command கோர்ஸ் முடித்துள்ளார். 

இந்திய ராணுவத்தில் பணி!

43 ஆண்டுகளுக்கு முன்னர் இதே டிசம்பரில் இந்திய ராணுவத்தில் இணைந்த அவர் அப்போது முதலே நாட்டுக்காக சேவையாற்றுவதை தனது உயிர் மூச்சாக கொண்டிருந்துள்ளார். ராணுவத்தில் அவர் இணைந்த போது அவருக்கு வயது 20. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள 11-வது கோர்க்கா ரைபிள்ஸ் யூனிட்டில் அவர் சேர்ந்துள்ளார். அதே யூனிட்டில் தான் அவரது தந்தை லக்ஷமண் பணியாற்றி உள்ளார். ராணுவ மேஜராக ஜம்மு காஷ்மீரின் உரி (URI) டவுனில் ஒரு கம்பெனி (80 முதல் 250 வீரர்கள் அடங்கிய குழு) ராணுவத்தை கமெண்ட் செய்துள்ளார். கர்னலாக இந்திய - சீன எல்லையான Line of Actual Control-இல் பணியாற்றி உள்ளார். பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என பல்வேறு ராணுவ ரேங்குகளில் அவர் பணியாற்றியுள்ளார். சர்வதேச ராணுவ படைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.  

முப்படைகளின் தலைமைத் தளபதி!

ராணுவத் தளபதியாக பணியாற்றி வந்த பிபின் ராவத் கடந்த 2019 டிசம்பர், 30 அன்று முப்படைகளின் தலைமைத் தளபதியாக பணியமர்த்தப்பட்டார். இந்திய நாட்டின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதி அவர்தான். 1987-இல் ராவத்தின் பட்டாலியன் படையினர் McMahon Line-இல் சீனாவுக்கு எதிராக களமிறக்கப்பட்டனர். 2015-இல் இந்தியா-மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலை கமெண்ட் செய்ததும் அவர்தான். 

“இந்திய நாட்டுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக சீனா மாறியுள்ளது” என சீனா குறித்து கடந்த நவம்பரில் பிபின் ராவத் சொல்லி இருந்தார்.  

பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், யுத் சேவா பதக்கம், சேனா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம் என பல்வேறு பதக்கங்களை நாட்டுக்காக ராணுவத்தில் சேவையாற்றியதன் மூலம் பெற்றுள்ளார். 

கடந்த 2019-இல் அவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற வேண்டி இருந்தது. சரியாக ஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்னதாக அவர் முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதை ஏற்றுக் கொண்டு நாட்டுக்காக சேவையாற்றிய அவர் ராணுவம் சார்ந்த பணியில் இருந்த போதே மரணம் அடைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com