கீழடி அகழாய்வு குறித்த முழு அறிக்கையும் விரைவில் சமர்ப்பிக்கப்படும்: அமர்நாத் ராமகிருஷ்ணன்

கீழடி அகழாய்வு குறித்த முழு அறிக்கையும் விரைவில் சமர்ப்பிக்கப்படும்: அமர்நாத் ராமகிருஷ்ணன்
கீழடி அகழாய்வு குறித்த முழு அறிக்கையும் விரைவில் சமர்ப்பிக்கப்படும்: அமர்நாத் ராமகிருஷ்ணன்

மீண்டும் தமிழகத்தில் பொறுப்பு ஏற்றதால் கீழடி அகழாய்வு குறித்த முழு அறிக்கையும் விரைவில் இந்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தென்னிந்தியக் கோயில்கள் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இந்திய தொல்லியல் துறையில் முதன்முறையாக கீழடியில் ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன், 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் தென்னிந்தியக் கோயில்கள் தொல்லியல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அமர்நாத் ராமகிருஷ்ணன் புதிய தலைமுறைக்கு அளித்த நேர்காணலில், “கீழடி அகழாய்வு குறித்த தமது இடைக்கால அறிக்கை மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, விரைவில் முழு அறிக்கையும் இந்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும், மீண்டும் தமிழகத்தில் பொறுப்பு ஏற்றதால் இந்த பணிகள் விரைவில் முடிவடையும்.

பொருநை நதி நாகரிகம் மட்டுமல்ல,  காவிரி, தென்பெண்ணை ஆறு பாலாறு ஆகிய நதிக்கரைகளையும்  அகழாய்வு செய்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும், சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் பொருநை நதி நாகரிகம். கீழடியில் தான் பொறுப்பில் இருந்தபோது கண்டறியப்பட்ட பொருட்கள் சென்னையில் உள்ளன, இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளேன்.

தர்மபுரியில் பென்னாகரம் அருகே பெருங்கற்காலத்தில் தமிழர்கள் எவ்வாறு தங்களது முன்னோர்களை அடக்கம் செய்தார்கள் என்பது குறித்த அரிய கற்கள் கிடைத்துள்ளன, அது தற்போது தொல்லியால் துறை பழமையான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெருங்கற்காலத்தில் எவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் என்ற விவரம் இதுவரை கிடைக்காத நிலையில், இதுபோன்ற அரிய கற்கள் கிடைத்துள்ளது, ஆராய்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com