லா நினாவால் 3டிகிரி குறையும் இந்திய வெப்பநிலை-அச்சுறுத்தவுள்ள மின் பற்றாக்குறை: ஓர் பார்வை

லா நினாவால் 3டிகிரி குறையும் இந்திய வெப்பநிலை-அச்சுறுத்தவுள்ள மின் பற்றாக்குறை: ஓர் பார்வை
லா நினாவால் 3டிகிரி குறையும் இந்திய வெப்பநிலை-அச்சுறுத்தவுள்ள மின் பற்றாக்குறை: ஓர் பார்வை

பசிபிக் பகுதியில் தோன்றும் லா நினா காரணமாக வட இந்தியாவில் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனவும், இதனால் இந்தியாவில் மின்சார பற்றாக்குறை அதிகரிக்கும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

பசிபிக் பகுதியில் கடலின் அடிப்பகுதியில் இருந்து குளிர்ச்சியான, ஆழமான நீரைக் கொண்டுவருவதற்காக பூமத்திய ரேகை காற்று வலுவடையும் போது லா நினா உருவாகிறது. "லா நினா காரணமாக வடகிழக்கு ஆசியா முழுவதும் இந்த குளிர்காலத்தில் வெப்பநிலை இயல்பை விட குளிர்ச்சியாக இருக்கும் " என்று DTN வானிலை நடவடிக்கைகளின் துணைத் தலைவர் ரென்னி வான்டேவேஜ் கூறினார். இந்த வானிலை முன்னறிவிப்பு தரவு என்பது எவ்வளவு மின்சார ஆற்றல் தேவைப்படும் என்பதைக் கணிப்பதில் ஒரு முக்கிய அங்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.

லா நினா விளைவுகளால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும் என்பது பற்றிய ஒரு முழுமையான பார்வை இங்கே…

இந்தியா:

லா நினா விளைவுகள் காரணமாக வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்தியாவில் வெப்பநிலை வடக்கு பகுதிகளில் 3 டிகிரி செல்சியஸ் (37 பாரன்ஹீட்) வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் குளிர்காலத்தில் மின்சாரத்தேவை அதிகரிக்கும் என்பதால் எரிபொருள் மற்றும்  மின்பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் முக்கிய நிலக்கரி சுரங்கப் பகுதிகள் கடந்த மாதங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன, இது நாட்டின் பல பகுதிகளில் நிலக்கரி மற்றும் மின்சார தட்டுப்பட்டை உருவாக்கியது. இந்த சூழலில் லா நினாவால் ஏற்படும் கடும் குளிர்காலமாக மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டால், மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த வளிமண்டல ஜி 2 வின் வானிலை இயக்குனர் டாட் க்ராஃபோர்டின், “லா நினாவால் துருவத்தில் குளிர்ச்சியை உருவாக்கும் காற்றின் துருவச்சுழல் குளிர்காலத்தின் தொடக்கத்தில் இயல்பை விட பலவீனமாக இருக்கலாம், இது குளிர்ந்த காற்று தெற்கே பரவ அனுமதிக்கும். இந்த குளிர்காலத்தில் வடகிழக்கு ஆசியாவில் அதிகளவில் குளிர் பதிவாகும் என்றும், நவம்பர் பிற்பகுதியிலிருந்து ஜனவரி நடுப்பகுதி வரை லா நினா விளைவுகள் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அங்குதான் மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்று நாங்கள் நினைக்கிறோம்" என தெரிவித்தார்.

சீனா:

மின்சாரம் மற்றும் எரிபொருள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நாடுகளில் சீனா முன்னணியில் உள்ளது. தற்போதே நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்சார உற்பத்தி பாதிப்பு மற்றும்  கனரக தொழில்துறைக்கு எரிபொருள் வழங்குவதி சிக்கல் உள்ளிட்ட பிரச்னைளில் சிக்கி தவிக்கிறது. சீனாவில் நிலக்கரி மற்றும் எரிவாயு விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளதால், லா நினாவால் உருவாகும்  மோசமான குளிர்காலம் மேலும் அதிக மின்சாரத் தேவையை உருவாக்கும்.

நாட்டின் தேசிய காலநிலை மையத்தின் தகவல்களின்படி, கிழக்கு சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த வார தொடக்கத்தில் வெப்பநிலை வெகுவாக குறைந்தது. சில வடக்குப் பகுதிகளில் ஏற்கனவே வழக்கத்தை விட அதிக குளிர் நிலவுகிறது. நான்ஜிங் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளிமண்டல அறிவியல் பேராசிரியரான ஷி ஸிஃபே, “புவி வெப்பமடைதலின் விளைவாக தீவிர வானிலை நிலைமைகள் இனி அடிக்கடி நிகழலாம். குளிர் அலைகள் அதிக வெப்பநிலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும், அத்துடன் அசாதாரண வெப்பமான நிகழ்வுகளும் தோன்றக்கூடும்" என்று கூறினார். இந்த மாதம் சீனாவில் லா நினா நிலை உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

ஜப்பான்:

ஜப்பானில் இலையுதிர் மற்றும் குளிர்கால காலத்தில் 60% லா நினா ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் அடுத்த மாதம் முதல் இயல்பை விட மிகக்குறைவான வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. லா நினா காரணமாக எரிசக்தி நெருக்கடி  ஏற்படாமல் இருக்க ஜப்பான் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துள்ளது. ஜப்பான் வர்த்தக அமைச்சகம், குளிர்கால மாதங்களுக்குத் தயாராவதற்காக மின்சாரம், எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

தென் கொரியா:

தென்கொரியாவின் குளிர்காலத்தின் முதல் பாதியில் மிகக் குளிர்ச்சியான காலநிலையைக் காணும், மேலும் லா நினாவின் விளைவுகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் வானிலை நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதனால் எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, எரிபொருள் வரிகள் மற்றும் எல்என்ஜி இறக்குமதி கட்டணங்கள் தற்காலிகமாக குறைக்கப்படும் என்று தென்கொரியாவின் துணை நிதி அமைச்சர் லீ ஈக் வென் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com