ஒரே ஆண்டில் 20,450 போராட்டங்கள்.... போராடுவதில் தமிழகம் முதலிடம்..!

ஒரே ஆண்டில் 20,450 போராட்டங்கள்.... போராடுவதில் தமிழகம் முதலிடம்..!
ஒரே ஆண்டில் 20,450 போராட்டங்கள்.... போராடுவதில் தமிழகம் முதலிடம்..!

நாட்டிலேயே தமிழ‌கத்தில்தான் அதிக அளவில் போராட்டங்கள் நடைபெறுவதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2‌015 ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்களின்படி தமிழகத்தில் 20 ஆயிரத்து 450 போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள பஞ்சாபில் 13 ஆயிரத்து 89 போராட்டங்களும், உத்தராகண்ட்டில் 10 ஆயிரத்து 477 போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. அதிகளவு போராட்டங்கள் நடத்தியோர் பட்டியலில் முதலிடத்தில் அரசியல் கட்சிகளும், இரண்டாவது இடத்தில் அரசு ஊழியர் அமைப்புகளும் உள்ளன. அதற்கடுத்த இடங்களில் தொழிற்சங்கத்தினர், மாணவர்கள், சமூக அமைப்பினர் உள்ளனர். அரசு சேவைகள் குறித்து மக்களின் அதிருப்தி, மக்கள் தேவைகளை அரசு நிர்வாகம் புறக்கணிப்பது போன்றவை தமிழகத்தில் அதிக அளவில் போராட்டங்கள் நடப்பதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதே நேரம் தமிழக மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதே, போராட்டங்கள் அதிகரிக்க காரணம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் அதிகம் இருப்பதும், போராட்டம் நடத்த அனுமதி பெறுவது சுலபம் என்பதும் அதிக போராட்டங்கள் நடக்க காரணம் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com