தமிழகத்தில் 21 ஆண்டில் 24 என்கவுண்ட்டர் ! ஒரு ரிப்போர்ட்

தமிழகத்தில் 21 ஆண்டில் 24 என்கவுண்ட்டர் ! ஒரு ரிப்போர்ட்
தமிழகத்தில் 21 ஆண்டில் 24 என்கவுண்ட்டர் ! ஒரு ரிப்போர்ட்

தமிழகத்தில் ரவுடிகளை என்கவுண்ட்டரில் சுட்டுகொல்லும் சம்பவம் எப்போதாவது நடக்கும். அப்போதெல்லாம் அந்த என்கவுண்ட்டர் நிகழ்வு பரபரப்பாக பேசப்படும். பின்பு காலப்போக்கில் மறைந்துவிடும், மீண்டும் ஒரு என்கவுண்ட்டர் நடக்கும். பொதுவாக அனைத்து என்கவுண்ட்டர்களுக்கும் போலீஸ் சொல்லும் காரணங்கள் பொதுவாகவே, குற்றவாளிகளையோ அல்லது குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களையோ அவர்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்துவார்கள். எனவே தங்களை தற்காத்துகொள்ளவே என்கவுண்ட்டர் செய்தோம் என்ற காரணத்தை முன் வைப்பார்கள் அதற்கேற்றது போலவே, போலீஸார் காயமடைந்து மருத்துவமனையில் சிசிக்கை பெறும் வீடியோவும், புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியிடப்படும். பின்பு, மனித உரிமை ஆணையம் சார்பில் விளக்கம் கேட்கப்படும். அரசும் துறைரீதியான நடவடிக்கைள் மேற்கொள்ளும், காவல் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படுவார்கள், இது வாடிக்கையான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

இப்போது கூட சேலம் மாவட்டம் காரிப்பட்டியில் வியாழக்கிழமை ரவுடி கதிர்வேலனை போலீஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். கதிர்வேலனை பிடிக்க முயன்றபோது அவர் போலீஸாரை தாக்கியதாகவும், அதனால் தற்காப்புக்காக சுட்டுக்கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் என்கவுண்ட்டர் சம்பவங்களை சற்று பின்னோக்கி பார்த்தால், இப்போது கொல்லப்பட்ட கதிர்வேலனையும் சேர்த்து 21 ஆண்டுகளில் 24 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடந்துள்ளது. அதன்படி கடந்த 1998-ம் ஆண்டு முதல் இதுவரை 24 என்கவுண்ட்டர்கள் நடந்து உள்ளன.

அதன் விவரம்:

1998-ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி அருகே நடந்த மோதலின் போது ரவுடி ஆசைத்தம்பியும், அவனது கூட்டாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2002-ம் ஆண்டு தமிழக போலீஸ் படை பெங்களூர் சென்று அங்கு பதுங்கி இருந்த இமாம் அலி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்றது. அப்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2003-ல் சென்னையில் வெங்கடேச பண்ணையார், மற்றும் கிழக்கு கடற்கரை பகுதியை தன் கட்டுக்குள் வைத்திருந்த அயோத்தி குப்பம் வீரமணி.

2004-ம் ஆண்டு பல ஆண்டுகளாக 3 மாநில அரசுக்கு சிம்ம சொப்பன மாக விளங்கிய சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொலை.

2007-ம் ரவுடி வெள்ளை ரவி. 

2010-ம் ஆண்டு நீலாங்கரையில் திண்டுக்கல் பாண்டியும், அவனது கூட்டாளியும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். 

2010-ம் ஆண்டு கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர் மோகன கிருஷ்ணன் என்கவுண்ட்டர்.

2012-ம் ஆண்டு சென்னையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் 5 பேர் ஒரே நேரத்தில் வேளச்சேரியில் என்கவுண்ட்டர். அதே ஆண்டு சிவகங்கையில் போலீஸ்காரர் ஒருவர் கொலையில் தொடர்புடைய பிரபு, பாரதி ஆகியோர் என்கவுண்ட்டர்  செய்யப்பட்டார்கள்.

2018- ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரையில் ரவுடிகள் இருளாண்டி, சகுனி கார்த்தி ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர். அதே ஆண்டு சென்னை தரமணியில் ரவுடி ஆனந்தனை போலீசார் என்கவுண்ட்டர் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com