இப்படியொரு அபாயமா!! சுகர் ஃப்ரீ பயன்படுத்துபவர்களுக்கு மருத்துவர் கொடுக்கும் எச்சரிக்கை!!

இப்படியொரு அபாயமா!! சுகர் ஃப்ரீ பயன்படுத்துபவர்களுக்கு மருத்துவர் கொடுக்கும் எச்சரிக்கை!!
இப்படியொரு அபாயமா!! சுகர் ஃப்ரீ பயன்படுத்துபவர்களுக்கு மருத்துவர் கொடுக்கும் எச்சரிக்கை!!

சுகர் ஃப்ரீ தீவிரமாக ரத்த க்ளூகோஸ் அளவுகளை உயர்த்துவதில்லை என்றாலும் நமது மூளையில் இனிப்புச் சுவை உருவாக்கும் போதை என்பது தொடர்ந்து சுகர் ஃப்ரீ உபயோகப்படுத்துபவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்களும், உடலை கட்டுக்கோப்போடு வைக்க நினைப்பவர்களும் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சர்க்கரைக்கு பதிலாக சேர்த்துக் கொள்வார்கள். இந்த சுகர் ஃப்ரீ மாத்திரை எடுத்து கொள்வது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து விளக்குகிறார் பொதுநல மருத்துவர் ப.ஃபரூக் அப்துல்லா.  

''நீரிழிவு நோயாளிகளைப் பொருத்தமட்டில் சீனி, நாட்டு சரக்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி, தேன், இனிப்பான பழங்கள் என்று அனைத்தும் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகமாக உயர்த்துபவையே. இதில் சீனியும் நாட்டு சர்க்கரையும் கரும்பில் இருந்து வருபவை. எனவே இரண்டும் நீரிழிவு நோயாளியின் ரத்த க்ளூகோஸ் அளவுகளை உயர்த்துவதில் ஒன்றுதான் என்று உணர வேண்டும். இதற்கடுத்தபடியாக சுகர் ஃப்ரீ எனும் மாத்திரையை  பொடியை பலர் பயன்படுத்தி வருகிறார்கள்
சுகர் ஃப்ரீ தீவிரமாக ரத்த க்ளூகோஸ் அளவுகளை உயர்த்துவதில்லை என்றாலும் நமது மூளையில் இனிப்புச் சுவை உருவாக்கும் போதை என்பது தொடர்ந்து சுகர் ஃப்ரீ உபயோகப்படுத்துபவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். ஆம், மூளையின் ஊக்கமளிக்கும் மண்டலம் தூண்டப்பட்டு மறுமுறை இனிப்பு சுவையை விரும்பி உண்ணச் செய்கிறது. இதனால் நாம் இனிப்பு சுவை தரும் போதைக்கு அடிமையாகிறோம்.

எப்படி  மது அருந்துபவர் கொகைன், கஞ்சா போன்றவற்றை எடுப்பவர் அந்த விஷயங்கள் தரும் போதைக்கு அடிமையாகிறாரோ அதேபோல் தான் இந்த இனிப்பும் செய்கிறது. இதனால்தான் சீனியை நிறுத்தச் சொன்னால் நம் மனம் நாட்டு சர்க்கரைக்குத் தாவுகிறது. நாட்டு சர்க்கரையை நிறுத்தச் சொன்னால் பனங்கருப்பட்டிக்குத் தாவுகிறது. அதையும் நிறுத்தச் சொன்னால் இறுதியில் சுகர் ஃப்ரீக்கு வருகிறது. இப்படி சுகர் ஃப்ரீ போட்டு பருகுபவர்களுக்கு இந்த இனிப்பு சுவை மீது மூளைக்கு போதையும் அடிமைத்தனமும் இருந்து கொண்டே இருக்கும். எனவே எப்போதெல்லாம் ஸ்வீட்,  சாக்லேட், ஐஸ்க்ரீம், அல்வா, போன்றவற்றைக் கண்டால் நாக்கு ஊறி மூளையில் உள்ள போதை மையம் தூண்டப்பட்டு அதை உண்பார்கள். கூடவே தேவைக்கு மீறியும் அரிசி, கோதுமை போன்ற தானியங்களினால் செய்யப்பட்ட உணவுகளைக் குறைத்து உண்டாலும் நொறுக்குத்தீனி விஷயத்தில் எல்லை மீறுபவர்களாக இருப்பார்கள். இவ்வாறு மாவுச்சத்து சார்ந்த இனிப்பு சார்ந்த விசயங்களை தொடர்ந்து அதிகமாக உண்ணச் சொல்லி மூளை உந்திக் கொண்டே இருப்பதை தான் 'க்ரேவிங்' (அடங்காத அவா) என்று அழைக்கிறோம். இத்தகைய க்ரேவிங்கை மனதால் கட்டுப்படுத்துவது கடினம். இந்த க்ரேவிங்கை வெகுவாகக் கட்டுப்படுத்திட முதன்முதலில் செய்ய வேண்டியது இனிப்பு சுவை கொண்ட அனைத்தையும் ஒதுக்குவதாகும்.

எனவே நீரிழிவு நோயாளிகள் தாங்கள் பருகும் டீ, காபி, சீனி, நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி, சுகர் ஃப்ரீ, தேன் என்று எதையும் கலக்காமல் பருகலாம். பாலில் கூட லாக்டோஸ் எனும் இயற்கையான இனிப்பு இருப்பதால் அடங்காத நீரிழிவு இருப்பவர்கள் பால் டீ, பால் காபி பருகுவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு இனிப்பு சேர்க்காத ப்ளாக் டீ, இனிப்பு சேர்க்காத ப்ளாக் காபி, இனிப்பு சேர்க்காத க்ரீன் டீ என்று பருகுவது அவர்கள் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கும் மந்திரமாகும்'' என்கிறார் அவர்.

இதையும் படிக்க: இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? சைலண்ட் ஹார்ட் அட்டாக்காக இருக்கலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com