அதிக சம்பளம் வழங்கும் 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்கள்; அப்போது முன்னணி நிறுவனங்களின் நிலை என்ன?

அதிக சம்பளம் வழங்கும் 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்கள்; அப்போது முன்னணி நிறுவனங்களின் நிலை என்ன?
அதிக சம்பளம் வழங்கும் 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்கள்; அப்போது முன்னணி நிறுவனங்களின் நிலை என்ன?

ஐடியில் வேலை செய்பவர்களின் சம்பள அளவு குறித்து பொதுமக்களிடம் என்றுமே ஒரு எண்ணவோட்டம் இருக்கும். இந்திய ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெரிய ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மென்பொறியாரகளின் சம்பளம் குறித்த விவாதங்கள் டிவிட்டரில் பேச்சு பொருளாகியுள்ளது.

ஐடி நிறுவனங்களை விட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தான் ஊதிய அளவு அதிகமாகியுள்ளது என அமித் சிங் என்ற நபர் நடத்திய ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. அமித் சிங், வீக்டே என்ற ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் நடத்திய ஆய்வு முடிவு தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.

அமித் சிங் தனது ஆய்வில், ‘’பெரிய பிரபல ஐடி நிறுவனங்களை விட தற்போது ஸ்டாடப் அப் நிறுவனங்கள் தான் பணியாளர்களுக்கு அதிகம் ஊதியம் வழங்கி வருகிறது’’ என்றுள்ளார்.

50,000 க்கும் மேற்பட்ட பொறியாளர்களின் விபரங்களின் அடிப்படையில் பெறப்பட்ட தகவலானது, தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களுடன் சம்பளத்தை விட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்களின் சம்பளம் உயர்ந்துள்ளது என்ற தகவல் ஒப்பிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமித் சிங் தெரிவித்த கருத்துக்கு ஒரு உதாரணத்தையும் கூறியுள்ளார். அதில் , 4 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பொறியாளர் ஒருவருக்கு சமூக ஊடகமான ஷேர்சாட்டில் ஆண்டுக்கு 47 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும் மென்பொறியாளர்களுக்கு இந்தியாவில் முக்கியமான 107 நிறுவனங்களை விட அதிக சம்பளத்தை வழங்குகிறது.

அமித் சிங் பதிவிட்டு இருக்கும் தரவுகளில், CRED, Fintech நிறுவனங்கள் அடுத்த இடத்தில் உள்ளது. இந்த நிறுவனங்கள் ஒரு மென்பொருள் பொறியாளருக்கு ஆண்டுக்கு ₹40 சம்பளம் கொடுக்கிறார்கள்.

Meesho, Swiggy, Deam11 மற்றும் InMobi போன்ற நிறுவனங்கள் தங்கள் மென்பொருள் பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு 35 முதல் 40 வரை வழங்குகிறார்கள். அடுத்தடுத்த வரிசையில் ஓயோ, பேடிஎம் மற்றும் பைஜூஸ் போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பெயர்கள் உள்ளது. இவர்கள் ஆண்டுக்கு 20 – 25 லட்சம் கொடுக்கிறார்கள். வளர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் 10% மட்டும் தான் சம்பள உயர்வு இருக்கிறது.

மேலும் தயாரிப்பு அடிப்படையிலான ஸ்டார்ட்அப்களில் நிறுவனங்கள் மற்றும் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற சேவை அடிப்படையிலான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வருவாய்க்கு இடையேயான வித்தியாசம் ஒப்பீடும் அமித் சிங் செய்துள்ளார்.

அதில் சேவை அடிப்படையிலான நிறுவனங்களில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்களை விட, தயாரிப்பு அடிப்படையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 160 சதவீதம் அதிக சம்பளம் பெறுகின்றனர் என்பதைத் தெரிவித்துள்ளார், பெரிய ஐடி நிறுவனங்களில் நான்கு வருட அனுபவமுள்ள ஒரு மென்பொருள் பொறியாளரின் சம்பளம் ஆண்டுக்கு 10 லட்சம் எனவும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆண்டுக்கு 26 லட்சம் வழங்குகிறது எனவும் அமித் சிங் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com