“ரஃபேல் வாட்ச் பில் எப்படி தயார் செய்தார்களோ, அப்படித்தான் இதுவும்...”- காயத்ரி ரகுராம் பேட்டி

#PTExlusive: சக்தி யாத்திரை தள்ளிபோனதன் பின்னணி குறித்து பேசியுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்PT Desk

நடிகை காயத்ரி ரகுராம் மீது சமீபத்தில் சென்னை சைபர் கிரைம் போலீஸில் பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டு, பின் மின்னல் வேகத்தில் அது திரும்பவும் பெறப்பட்டது. “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதன் பிறகு புகாரை திரும்பபெற்றுக் கொண்டோம்” என பாஜக மாநில துணை தலைவர் ஜி.எஸ்.மணி தெரிவித்திருந்தார். இதன் பின்னணி என்ன, சக்தி யாத்திரை எப்போது தொடங்கப்படும், வானதி சீனிவாசனின் கருத்து என பல்வேறு விஷயங்கள் குறித்து ‘புதிய தலைமுறை’க்கு காயத்ரி ரகுராம் பேட்டி கொடுத்துள்ளார்

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்PT Desk

கேள்வி:

தற்பொழுது ட்விட்டரில் கருத்து தெரிவிப்பது, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது என பரபரப்பான அரசியலில் இயங்குகிறீர்களே... என்ன காரணம்?

பதில்:

“ஆரம்ப நாட்கள் முதலே நான் அரசியல் தாண்டியும் நிறைய சேவைகள் செய்து வருகிறேன். அதிலும் கொரோனா நேரத்தில் நிறைய சேவைகள் செய்து வந்தேன். அப்படித்தான் இப்போதும் தீவிரமாக இயங்குகிறேன்”

கேள்வி:

கட்சியை விட்டு வெளியேவந்தபோது, சக்தி யாத்திரை தொடங்கப் போவதாக சொல்லி இருந்தீர்கள். முதலில் ஜனவரியில் செல்வதாகவும், பிறகு ஏப்ரலில் செல்வதாகவும் சொல்லி இருந்தீர்கள். இப்போது ஏப்ரலும் வந்துவிட்டது. தற்பொழுது யாத்திரை செல்ல திட்டம் உள்ளதா? அல்லது உங்களுக்கு மறைமுகமாக ஏதாவது அச்சுறுத்தல் அல்லது நெருக்கடிகள் வந்து, அதனால் யாத்திரையை நிறுத்தி இருக்கிறீர்களா?

பதில்:

“யாத்திரையை நிறைவேற்றுவதற்கான திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் அதை நிறுத்திவைத்துள்ளேன். என்னைவிட, என்னுடன் வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில்தான் யாத்திரையை நிறுத்தி வைத்துள்ளேன். இருந்தாலும் பாஜக-வில் இருந்தும் நெருக்கடிகள் வரக்கூடும். அதையும் தாண்டி தான் செல்லவேண்டும்”

கேள்வி:

“ ‘பிஜேபியில் பெண்களுக்கு மரியாதை இல்லை; பெண்கள்குறித்து புகார் எழுந்தால் அதை கண்டுக்கொள்வது இல்லை’ என்கிறீர்கள். ஆனால் ஒரு சிலர் அப்படி ஏதும் நடப்பதில்லை என்கிறார்கள். இது குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்ட பொழுது, ‘கட்சிக்குள் பல அடுக்குகள் உண்டு; அவர்கள் புகார் அளிக்க நினைத்தால் இங்கேயே அளித்திருக்கலாம்... ஏன் வெளியில் சென்று புகார் கூறி இருந்தார்கள் என்று தெரியவில்லை’ என்று கூறினார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?”

பதில்:

“கட்சியிலும் இது குறித்து புகார் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்களின் காதுக்கு இது சென்றிருந்திருக்காது. ஏனெனில் அவங்க நிரைய டிபார்ட்மெண்டில் இருக்கு... அதனால் முதல் ஸ்டெப்பிலேயே அந்த புகாரானது காணாமல் போய்விடுகிறது. ரஃபேல் வாட்ச் பில் எப்படி தயார் செய்தார்களோ, அதே போல் துபாய் லெட்டர் கூட தயாரிக்கப்பட்டது. அவர்களின் ஒரே நோக்கம் என்னை அசிங்கப்படுத்துவது தான்”

இன்னும் காயத்ரி ரகுராமிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. காரசாரமான அந்த முழு பேட்டியை, வீடியோவாக இங்கே காண்க...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com