அதிமுகவுக்கு அமமுக 'ஸ்பாய்லர்' ஆக இருந்த இடங்கள்... - நினைத்ததை சாதித்தாரா டிடிவி தினகரன்?

அதிமுகவுக்கு அமமுக 'ஸ்பாய்லர்' ஆக இருந்த இடங்கள்... - நினைத்ததை சாதித்தாரா டிடிவி தினகரன்?
அதிமுகவுக்கு அமமுக 'ஸ்பாய்லர்' ஆக இருந்த இடங்கள்... - நினைத்ததை சாதித்தாரா டிடிவி தினகரன்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணங்களை அரசியல் ரீதியில் அணுகும்போது, டிடிவி தினகரனின் அமமுக கூட்டணி போட்டியிட்ட பல இடங்களில் 'ஸ்பாய்லர்' ஆக இருந்திருப்பதையும் கவனிக்க முடிகிறது. அதுகுறித்த பார்வை... 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவால் விலக்கப்பட்ட டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அமமுகவும் அதிமுகவும் இணையும் என எதிர்பார்த்த நிலையில், அதற்கான வாய்ப்புகளே அமைய விடாமல் விடாப்பிடியாக இருந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதன்பின், சசிகலா பொதுவாழ்வில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தாலும், டிடிவி தினகரன் அதிமுகவை தோற்கடிப்பதே லட்சியம் என உறுதிபூண்டார்.

முக்கியமாக, அதிமுக வாக்குகளை அமமுக பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் கடைசி கட்டத்தில் அமமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. இதனால், அமமுகவிற்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என்றும், பல இடங்களில் அமமுக கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கு எதிராக டிடிவி தினகரன் களம் இறங்கினார். முதலில் முன்னிலை வகித்து வந்த டிடிவி தினகரன், பின்னர் பின்னடைவை சந்தித்து தோல்வியை தழுவினார். கடம்பூர் ராஜு வெற்றி பெற்றார். 234 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட அமமுக வெற்றி பெறவில்லை.

திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவவும், திமுக கூட்டணி வெற்றியடையவும் அமமுக வழிவகுத்துள்ளது என்பது ஒரு பார்வை. அதாவது, அதிமுக வாக்குகளை பிரித்து, அக்கட்சிக்கு மிகுந்த நெருக்கடி கொடுத்துள்ளார் டிடிவி தினகரன்.

திருவாடானை தொகுதி: காங்கிரஸ் சார்பில் கருமாணிக்கமும், அதிமுக சார்பில் அணிமுத்துவும் போட்டியிட்டனர். இதில் 13,852 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் கருமாணிக்கம் வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 32,074.

ஆண்டிப்பட்டி தொகுதி: திமுக சார்பில் மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனும் போட்டியிட்டனர். அதில் 8,538 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் மகாராஜன் வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 11,896.

பாபநாசம் தொகுதி: திமுக சார்பில் ஜவாஹிருல்லாவும், அதிமுக சார்பில் கோபிநாதனும் போட்டியிட்டனர். அதில் 16273 வாக்குகள் வித்தியாசத்தில் ஜவாஹிருல்லா வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 19,778.

தியாகராய நகர் தொகுதி: திமுக சார்பில் கருணாநிதியும், அதிமுக சார்பில் சத்யநாராயணனும் போட்டியிட்டனர். இதில் 137 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 782.

சாத்தூர் தொகுதி: திமுக சார்பில் ரகுராமனும், அதிமுக சார்பில் ரவிச்சந்திரனும் போட்டியிட்டனர். இதில் 11179 வாக்குகள் வித்தியாசத்தில் ரகுராமன் வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 32,916.

தென்காசி தொகுதி: காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும் அதிமுக சார்பில் செல்வ மொகன் தாஸும் போட்டியிட்டனர். இதில் 370 வாக்குகள் வித்தியாசத்தில் பழனிநாடார் வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 9,944.

உத்திர மேரூர் தொகுதி: திமுக சார்பில் சுந்தரும் அதிமுக சார்பில் சோமசுந்தரமும் போட்டியிடனர். இதில் 1,622 வித்தியாசத்தில் சுந்தர் வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 7,211.

ராஜபாளையம் தொகுதி: திமுக சார்பில் தங்க பாண்டியனும் அதிமுக சார்பில் ராஜேந்திரபாலாஜியும் போட்டியினர். இதில் 3898 வாக்குகள் வித்தியாசத்தில் தங்க பாண்டியன் வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 7,623.

காரைக்குடி தொகுதி: காங்கிரஸ் சார்பில் மாங்குடியும் பாஜக சார்பில் ஹெச்.ராஜாவும் களமிறங்கினர். இதில் 21589 வாக்குகள் வித்தியாசத்தில் மாங்குடி வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 44,864.

காட்பாடி தொகுதி: திமுக சார்பில் துரைமுருகனும் அதிமுக சார்பில் வி.ராமுவும் போட்டியிட்டனர். இதில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 1,040.

திருப்போரூர் தொகுதி: விசிக சார்பில் எஸ்.எஸ்.பாலாஜியும் பாமக சார்பி திருக்கச்சூர் கி.ஆறுமுகமும் போட்டியிட்டனர். இதில் 1947 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.எஸ். பாலாஜி வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 7,662.

நாங்குநேரி தொகுதி: காங்கிரஸ் சார்பில் மனோகரனும் அதிமுக சார்பில் கணேச ராஜாவும் போட்டியிட்டனர். இதில் 16486 வாக்குகள் வித்தியாசத்தில் மனோகரன் வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 31,870.

வாசுதேவநல்லூர் தொகுதி: மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமாரும் அதிமுக சார்பில் மனோகரனும் போட்டியிட்டனர். இதில் சதன் திருமலைக்குமார் 2367 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 13,376.

சங்கரன்கோவில் தொகுதி: திமுக சார்பில் ராஜாவும் அதிமுக சார்பில் ராஜலட்சுமியும் போட்டியிட்டனர். இதில் 5297 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜா வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 22,676.

மயிலாடுதுறை தொகுதி: காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜகுமாரும் பாமக சார்பில் சித்தமல்லி. ஆ.பழனிசாமியும் போட்டியிட்டனர். இதில் ராஜகுமார் 2742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு அமமுக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 7,282.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com