இந்தியாவில் ஊடுருவியிருக்கும் SOVA வைரஸ்! பணத்தை பாதுக்காப்பது எப்படி?

இந்தியாவில் ஊடுருவியிருக்கும் SOVA வைரஸ்! பணத்தை பாதுக்காப்பது எப்படி?
இந்தியாவில் ஊடுருவியிருக்கும் SOVA வைரஸ்! பணத்தை பாதுக்காப்பது எப்படி?

மனிதனின் உடல் ஆரோக்கியத்தைச் சூறையாடப் பரவிய கொரோனா வைரஸை போலவே, நாம் பயன்படுத்தும் கைப்பேசியிலிருந்து நமது தகவலையும், பணத்தையும் சூறையாட பல்வேறு வகையான வைரஸ்கள், தொழில்நுட்பம் வளர்ந்த காலம்தொட்டே உருவாக்கப்பட்டு வருகிறன. நாளுக்கு நாள் தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுக் கொண்டுயிருந்தாலும் அவற்றை உடைத்து ஊடுருவப் பல வைரஸ்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது மொபைல் பேங்கிங்கை குறிவைத்து உருவாக்கப்பட்ட சோவா வைரஸ் குறித்து ’இந்தியக் கணினி அவசரக்கால மீட்பு குழு (Indian Computer Emergency Response Team) ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுயுள்ளது. சோவா, பழைய வைரஸ் தான் என்றாலும் கூட,  தற்போது அது ஹேக்கர்களால் கூடுதலாக வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் அச்சமாக உருவாகியுள்ளது. 

எதற்காக SOVA வைரஸ் மீது இத்தனை அச்சம்?

அமெரிக்க, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளை இலக்காகக் கொண்டு ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த சோவா வைரஸ். வளர்ந்த நாடுகளுக்கு இந்த ஹேக்கிங் பெரும் தலைவலியாக மாறி பலர் தங்களது பணத்தை இழந்ததைத் தொடர்ந்து, சோவா வைரஸுக்கு எதிராக வங்கி கணக்குகள், செயலிகள் என அனைத்திலும் பாதுகாப்பு விஷயங்கள் மேம்படுத்தப்பட்டது. பாதுகாப்பு வலுவடையும் போதெல்லாம், அதில் ஊடுருவும் வழியை ஹேக்கர்கள் உருவாகியே வந்துள்ளார்கள். இந்த வகையில், சோவா வைரஸை ஐந்தாவது தலைமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஹேக்கர்கள் தற்போது இந்திய வங்கிக் கணக்குகளைக் குறிவைத்துள்ளார்கள் என இந்தியக் கணினி அவசரக்கால குழு எச்சரிக்கை செய்துள்ளது.

எப்படி ஹேக்கிங் நடக்கும் ?

நமது போனிற்கு வரும் போலி ஹேக்கிங் லிங்க்கை நாம் கிளிக் செய்தவுடன் , நமது போனில் இருக்கும் மற்ற செயலிகளின் விபரம் அனைத்தும் ஹேக்கிங் சர்வரின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும். சர்வருக்கு உங்களது போன் மற்றும் அதிலிருக்கும் செயலிகள் குறித்த விபரங்கள் கிடைத்தவுடன், தகவல்களை XML என்னும் ஃபார்மெட்டில் ஆவணமாகச் சேமித்து வைத்துக்கொள்ளும். இதன் பின்னர், சோவா வைரஸ் ஊடுறுவி அனைத்து செயலிகளும் ஹேக்கர்களின் கட்டுப்பாடுக்குள் செல்லும். உடனே நமது மொபைல் பேங்கிங், பணம் பரிவர்த்தனை செய்யும் செயலிகள், குரோம் எல்லாம் ஹேக்கர்களால் கையாள முடியும். இப்படி தான் சோவா வைரஸ் செயல்படுத்தப்படுகிறது.

உடனே போன் செட்டிங்கை வலுப்படுத்துவது அல்லது ஆண்டி வைரஸ் போன்ற நடவடிக்கைகள் மூலம் இதிலிருந்து தப்பிக்கலாம் தானே என்று நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் சோவா வைரஸை பொருத்தவரை நீங்கள் நினைக்கும் வழிகளில் எளிதாக நீக்கிவிட முடியாது. காரணம் முன்னர் சொன்னது போல், சோவா வைரஸ் தற்போது ஜந்தாவது தலைமுறை வைரஸாக உருமாறிள்ளது என்பதால் மீண்டும் மீண்டும் உங்களது போன்களில் செயல்பட்டுக்கொண்டே தான் இருக்கும். இதனால் தான் தற்போது சோவா வைரஸ் குறித்த எச்சரிக்கைகள் அதிகரித்துள்ளது.

எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்?

- வாட்ஸ் அப் , மெசேஜ் , இமெயில் , ஃபேஸ்புக் , இஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற ஏதாவது ஒரு சேவை மூலமாக வரும் லிங்க்குகளை, என்னவென்று யோசிக்காமல் க்ளிக் செய்யக்கூடாது. வங்கிகள் அல்லது ஆன்லைன் டெலிவரி போன்று நமக்கு பரிட்சியமான நிறுவனங்களிலிருந்து வரும் லிங்க் போன்று தான் இந்த ஹேக்கிங் வைரஸ் லிங்க்கும் இருக்கும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.

- நீங்கள் பயன்படுத்தும் போனையும் அதிலிருக்கும் ஆப்களையும் அவ்வப்போது அப்டேட் செய்துவிட வேண்டும்.

- உங்களுக்கு தேவையான வங்கி தகவல்களை, டெலிவரி ட்ராக்கிங் அப்டேட்களை, ஆஃபர்களை என அனைத்து தகவல்களையும் அதற்குறிய அதிகாரப்பூர்வ தளத்திலும், செயலிலும் தான் சென்று பார்க்க வேண்டும்.

- எந்த ஒரு செயலியையும் பதிவிறக்கம் செய்யும் போதும், பிளே ஸ்டோரிலிருந்து மட்டும் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் அந்த செயலி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அங்கிகரீங்கப்பட்ட செயலி தானா அல்லது அதேபோல் இருக்கும் போலியா என உறுதிப்படுத்திகொள்வதும் அவசியம்.

- எந்த ஒரு செயலில் பதிவிறக்கம் செய்யும் போதும் அதுகுறித்த விபரங்களை சரி பார்க்க வேண்டும். அந்த செயலி கேட்கும் தேவையில்லா அனுமதிகளை கொடுக்கக்கூடாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com