ஆயுளை குறைக்கும் மனநோய் - பெண்களைவிட ஆண்களுக்கு அதிக பாதிப்பா?
தற்போதுள்ள பிஸி சூழ்நிலையில் உடலளவில் பாதிக்கப்பட்டவர்களைவிட மனதளவில் பாதிக்கப்பட்டவர்களே அதிகம். அளவுக்கதிகமான தொழில்நுட்ப வளர்ச்சியும், உடலுழைப்பு குறைந்தது மற்றும் சமூகத் தொடர்பு குறைந்து போனதுதான். இதனால் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி, மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் நிறையப்பேர் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் பெரும்பாலான இளைஞர்கள்தான் இதுபோன்ற மனநோய்களின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். ஆய்வாளர்கள் மனநோய்களை வகைப்படுத்தி, அதனால் மரணத்திற்கு தள்ளப்பட்டவர்களையும் வகைப்படுத்தியுள்ளனர். ஆண், பெண் மற்றும் வயது போன்றவற்றை அடிப்படையாக வைத்து இந்த வகைகளை தீர்மானித்துள்ளனர்.
மேலும், கேன்சர், நீரிழிவு மற்றும் பிற வியாதிகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையைப் போன்றே மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே உள்ளது. அதிலும் குறிப்பாக, பெண்களை விட ஆண்களே அதிகப்பேர் இந்த பிரச்னையால் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகிறது. இதனால் வாழ்நாளும் குறைவதாகவும் கூறுகிறது. சராசரியாக ஆண்களின் வாழ்நாள் தனது வயதில் உள்ளவர்களை விட 10 வருடமும், பெண்களின் வாழ்நாள் 7 வருடமும் குறைகிறது. ஒவ்வொரு வகையான மனநோய்க்கும் அறிகுறிகள் வேறுபட்டாலும்
சில பொதுவான அறிகுறிகள்
- யோசிப்பதில் பிரச்னை இருத்தல் (குழப்பம், சந்தேகம், வழக்கத்திற்கு மாறான கோபம் மற்றும் சோகம்)
- தங்களுக்குள்ளேயே ஒளித்துவைத்தல்
- மனது மாறிக்கொண்டே இருத்தல்
- உறவுகளில் குழப்பம்
- இல்லாத ஒரு பொருளை அல்லது கேட்காத ஒரு விஷயத்தை பார்த்தது, கேட்டது போன்ற உணர்வு (Hallucinations)
- அளவுக்கதிகமான போதைப் பொருட்களை எடுத்துக்கொள்ளுதல்
- நம்பிக்கையற்ற தன்மை, பிடித்த விஷயங்களில்கூட மகிழ்ச்சியாக இருக்க முடியாமை
- தற்கொலை எண்ணம், தன்னைத்தானே வருத்திக்கொள்ளுதல் அல்லது பிறரைத் துன்புறுத்துதல்
- தூங்குவதில் சிரமம் (அளவுக்கதிகமாக தூங்குதல் அல்லது தூக்கமின்மை)
சிகிச்சைகள்
- தியானம் செய்தல் எல்லாவிதமான மனநோய்க்கும் ஒரு மருந்தாக அமையும். மனச் சோர்வு, பதட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து எடுத்துக்கொள்வதைக் காட்டிலும் தியானமே சிறந்தது.
- உடற்பயிற்சி செய்வது சில நேரங்களில் மன அழுத்தத்திற்கு தீர்வாக அமையும்.