இஸ்லாமிய பெண்களின் விடுதலைக் கனவு...! வைரலாகும் வீடியோ

இஸ்லாமிய பெண்களின் விடுதலைக் கனவு...! வைரலாகும் வீடியோ

இஸ்லாமிய பெண்களின் விடுதலைக் கனவு...! வைரலாகும் வீடியோ
Published on

சவூதி அரேபியாவில் ஆணாதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் விதத்தில் ஒரு பாப் வீடியோ பாடலை பெண்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

கவலைகள் (Hwages) என்ற தலைப்பில் வீடியோ உருவாக்கப்பட்டு டிசம்பர் மாதம் இறுதியில் யூ டியூபில் பதிவேற்றப்பட்டது. 8ies என்ற ஊடக தயாரிப்பு நிறுவனம் இந்த வீடியோவை தயாரித்துள்ளது. அட்டகாசமான இசையில் பெண் சுதந்திரத்தை வெளிபடுத்தும் இந்த வீடியோ காட்சி சுமார் மூன்று மில்லியன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வீடியோவில் சவுதி அரேபிய இஸ்லாமிய பெண்கள் கார் ஒட்டுகின்றனர். கூடைப்பந்து விளையாடுகின்றனர். ஸ்கேட்டிங் செல்கின்றனர். ஆனந்தமாக நடனம் ஆடுகின்றனர். ஆண்களிடமிருந்து கடவுளால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும் (If only God would rid us of men) என தொடங்கும் பாடலின் பின்னணியில் அவர்கள் இஸ்லாமிய உடையுடன் உலா வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டில் சவூதியில் இத்தகைய பாடல்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com