உதவி இயக்குனராக ஆர்ஜே ராஜவேலின் எனர்ஜியான 12 டிப்ஸ்

உதவி இயக்குனராக ஆர்ஜே ராஜவேலின் எனர்ஜியான 12 டிப்ஸ்

உதவி இயக்குனராக ஆர்ஜே ராஜவேலின் எனர்ஜியான 12 டிப்ஸ்
Published on

உதவி இயக்குனர் ஆகவேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு ஆர்ஜே ராஜவேல் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார். இயக்குனராக ஆசைப்படுபவர்கள் படித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏதோ ஒரு நம்பிக்கையிலோ, சும்மா கேட்டுதான் பார்ப்போமே என்ற எண்ணத்திலோ பலர் என்னிடம் இன்பாக்ஸில் வந்து உதவி இயக்குனர் ஆகவேண்டும், நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்கள். சமீபமாக அது கூடிக்கொண்டே போகிறது. நீங்க நினைக்கிற அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லை. ரெக்கமென்ட் பண்ணி எல்லாம் இங்கே யாரும் உதவி இயக்குனர்களை எடுப்பது கிடையாது. ரெக்கமென்ட் பண்ணுவதை யாரும் விரும்புவதும் கிடையாது. நல்லது நிலைக்கும், திறமைக்கு கிடைக்கும் !!! அவ்ளோதான்.

உண்மையாக சொல்லனும்னா, சினிமா உள்ள இருந்து கத்துகிட்டதை விட வெளியில இருந்துதான் நிறைய கத்துகிட்டேன். கத்துகிட்டு இருக்கேன். அந்த வகையில் நானும் ஒரு (உங்கள மாதிரி) கத்துகுட்டி தான். என்னையும் நம்பி வாய்ப்பு கேட்குற உங்களுக்கு என்னால ஒரே ஒரு விஷயம் பண்ண முடியும். நான் என்ன எல்லாம் செய்யாம விட்டேனோ அல்லது தவறாக செய்தேனோ, அதையெல்லாம் நீங்க தவிர்க்க அல்லது தெரிஞ்சிக்க, திருத்திக்க உதவி பண்ண முடியும்.

அந்த நம்பிக்கையிலதான் இந்தப் பதிவு...

1. எனக்கு எதுவுமே வரல, அதனால சினிமாவுக்கு வரேன்னு வராதீங்க. சின்சியரா சினிமாவை காதலிச்சீங்கனா மட்டும் வாங்க. 

2. சினிமாவை உங்களை சுத்தி இருக்கவங்ககிட்ட இருந்தே கத்துக்க ஆரம்பிங்க. ஒரு வித்தியாசமான கேரக்டரை உங்களோட லைஃப்ல கடந்து வந்தா உடனே குறிச்சு வச்சுக்கோங்க. எங்கயாவது அந்த கேரக்டரைசேஷன் உங்களுக்கு உதவும்.  

3. உதவி இயக்குனர் ஆகனும்னு  முடிவெடுத்துட்டா, வாசிப்பை அதிகம் ஆக்குங்க. உதவி இயக்குனரா கடுமையான கஷ்டத்துல இருந்தபோது கூட எங்க இயக்குனர் அவ்ளோ புக்ஸ் வாங்கி சேர்த்திருக்கார். அப்ப வாசிச்சது அவருக்கு இன்னைக்கு உதவுது. புத்தகங்களோட, மனுஷங்களையும் வாசிச்சு பழகுங்க.

4. தமிழ் டைப்பிங் பழகுங்க. கூகுள் இன்புட் செட்டப் பதிவிறக்கம் செய்து ஆங்கிலத்தில் டைப் பண்ண பண்ண தமிழ் வடிவம் பெறும் முறையையோ e-கலப்பை, அழகினு ஏதோ ஒரு மென்பொருளை நல்லா பழகிக்கோங்க. இது அடிப்படை தேவை. 

5. ஒரு குறும்படம் எடுத்து பாருங்க. அதுக்காக கண்டபடி செலவு பண்ணாம, உங்கள மாதிரி ஆர்வமான கேமராமேன் ஆகும் கனவில் இருக்கும் நபர், இசையமைப்பாளர் ஆகும் கனவில் இருக்கும் நபர்னு ஒரு டீம் ஃபார்ம் பண்ணுங்க. எழுதுவது வேறு, இயக்குவது வேறு. நல்ல எழுத்தாளர்கள் எல்லாம் இயக்குனர் ஆகிவிடமுடியாது. அதே போல, எல்லா இயக்குனர்களும் எழுத்தாளர்கள் அல்ல. அதை மனசுல வச்சிக்கிட்டு, நீங்க எழுதுறத, உங்களால காட்சி படுத்தி பார்க்க முடியுதான்னு பாருங்க. இது உங்களோட தன்னம்பிக்கையை கூட்டும்.

6. செய்திதாள்கள், வார இதழ்கள் வாசிங்க. செய்தித் தாள்களில் நாம் பார்த்து பார்த்து பழகிய விஷயங்களை கோர்த்துதான் சதுரங்க வேட்டை செய்திருந்தார்கள். பத்திரிகைகளில் எதாவது சுவாரசியாமான விஷயம் வந்திருந்தால், நறுக்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். 

7. உலக சினிமாக்கள் உங்களுக்குப் புரியும்னா பாருங்க. இல்லைனா, தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களை பாருங்க. குறைந்தபட்சம் தினம் ஒரு படமாவது பாருங்க. அதேபோல, என்னைக்கு உங்களுக்கு சினிமால இருக்கனும்னு ஆசை வந்திடுச்சோ, அதிலிருந்தாவது திருட்டு டிவிடில படம் பார்க்குறத நிறுத்திட்டு, தியேட்டர்ல மட்டும் படம் பாருங்க. பத்து ருபாய் டிக்கெட்டா இருந்தாகூட பரவாயில்லை. அது நம்ம தொழிலுக்கு நாம கொடுக்குற முதல் மரியாதை. 

9. சினிமாவை நம்புங்க. ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் வைக்கிறதுனு சொல்லுவாங்க. இன்னும் சரியா சொல்லனும்னா, என்னையே எடுத்துக்கோங்களேன்... ஒரு பக்கம் ரேடியோ, இன்னொரு பக்கம் சினிமான்னு ஓடுறேன். நடிக்கனும்னு நெனைக்கிறவங்க வேணும்னா, இப்படி ஒரே நேரத்துல இரட்டை குதிரை சவாரி செய்யலாம். அவங்க ஜெயிக்க கூட செய்யலாம். ஆனா உதவி இயக்குனர் ஆகனும்னு நெனைக்கிறவங்க, முழு மூச்சா இறங்கனும். சினிமாவை கத்துக்கனும். இந்த இரட்டை வேடம் எல்லாம் இங்க வேலைக்கு ஆகாது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் எப்போது வேண்டுமானலும் உங்கள் இயக்குனர் உங்களை அழைக்கலாம், வேலை சொல்லலாம். அதை தட்டாமல் செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

10. யார்கிட்ட கேட்டா வாய்ப்பு கிடைக்கும்னு கூட தெளிவில்லாம எல்லார்கிட்டயும் வாய்ப்பு கேட்காதீங்க. குறிப்பா, என்னை மாதிரி ஆளுங்ககிட்ட. நீங்களா களம் இறங்கிதான் தேடனும். இங்க தேடுனா கிடைக்காதது எதுவுமே கிடையாது. முறையா தேடனும்... அப்படினா அந்த முறை என்னனு கேட்டீங்கனா, முறையே கிடையாது.... ஆனா அதுதான் முறை. இப்போ ஐ.ஏ.எஸ். படிக்கனும்னா, டிகிரி படிக்கணும், பிரிலிம்ஸ் எழுதணும், மெயின்ஸ் எழுதணும், இன்டர்வியு கிளியர் பண்ணனும்னு ஒரு procedure இருக்குல... அந்த மாதிரி சினிமாவுக்கு எந்த procedure-ம் இல்லை. ஆனா, அதுதான் procedure. 

11. எந்த இயக்குனர் கிட்ட போனா நிறைய சம்பளம் கிடைக்கும்? புகழ் கிடைக்கும்? நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் பார்க்காதீர்க. எங்க வேணும்னாலும் கத்துக்கலாம், ஏன்னா சினிமா பாடம் ஒண்ணுதான். வாத்தியார்தான் வேறவேற. இது நான் கேட்ட விஷயம் தான். எஸ்.பி. முத்துராமன் சார் கிட்ட இருந்த உதவி இயக்குனர்கள் யாரும் பெருசா வரலை, ஆனா பாரதிராஜா ஸ்கூல்ல இருந்து வரிசையா நிறைய இயக்குனர்கள் உருவானாங்க. அதற்கு காரணம் என்ன சொல்லுவாங்கனா, எஸ்.பி.முத்துராமன் சார், அவர் அசிஸ்டென்ட் எல்லோருக்கும் நல்ல சம்பளம் கொடுத்து நல்லா வெச்சிக்குவாராம். ஒருத்தருக்கும் அடுத்து என்ன, நாம எப்போ படம் பண்றதுனு ஒரு ஃபயர் இருக்காதாம். கேஷுவலா தொழில் கத்துப்பாங்களாம். ஆனா பாரதிராஜா சார் அசிஸ்டென்ட் எல்லோரையும் விரட்டி விரட்டி வேலை வாங்குறதோட இல்லாம, சாப்பாட்டுக்கு கூட சம்பளம் பத்தாதுங்கிற அளவுக்கு ஓட ஓட விரட்டுவாராம். அந்த உத்வேகத்துலயே, நாம ஜெயிச்சே ஆகனும்டா என்று வெறி கொண்டு ஒடுவார்களாம். அதானால, கூடுமானவரைக்கும் உங்களோட சுகபோகங்களை ஒதுக்கி வச்சிட்டு, உதவி இயக்குனர் ஆக கனவு காணுங்கள். 

12. இறுதியா, எக்காரணம் கொண்டும் உங்களோட சுயமரியதைய இழக்காதீங்க...  சினிமா வாய்ப்பு கேட்கும்போது கூட !!!         

ஆல் தி பெஸ்ட் !!!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com