இரும்புச்சத்து குறைவால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள் - காரணங்களும் தீர்வுகளும்!

இரும்புச்சத்து குறைவால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள் - காரணங்களும் தீர்வுகளும்!
இரும்புச்சத்து குறைவால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள் - காரணங்களும் தீர்வுகளும்!

சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம், அடிக்கடி தலைவலி மற்றும் தலைசுற்றல் போன்றவை ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு இருப்பதற்கான அடிப்படை அறிகுறிகள் என்கின்றனர் மருத்துவர்கள். தேசிய குடும்பநல ஆணையத்தின் 2019-2020 சர்வேப்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 14 மாநிலங்களில் 50% பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கு சரியான மருத்துவம் எடுக்காவிட்டால் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக பெண்கள் இந்த பிரச்னைக்கு அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

  • அனைத்துப் பெண்களுக்கும் மாதவிடாய் காலத்தில் 30-50 மில்லி லிட்டர் ரத்த இழப்பு ஏற்படுகிறது. சில பெண்களுக்கு இதைவிட அதிகளவில் ரத்த இழப்பு ஏற்படும். இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் இதனால் மோசமான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் சீரான மாதவிடாய் இருக்காது.
  • ஹார்மோன் சமநிலையின்மை, கருப்பைக் கட்டிகள், பிறப்புறுப்பில் பலவிதமான புற்றுநோய்கள் மற்றும் சினைக்கட்டிகள் போன்றவையும் இரும்புச்சத்து குறைபாடால் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
  • சரிவிகித உணவுமுறையை பின்பற்றாததும் அனீமியா பிரச்னைக்கு ஒரு காரணம். பெண்கள் தங்கள் உணவுகளில் கவனம் செலுத்தாதும் இரும்புச்சத்து குறைபாடுக்கு முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
  • கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் போன்ற காலங்களில் பெண்களுக்கு அதிகப்படியான இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலான பெண்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாததும் இரும்புச்சத்து குறைபாட்டுக்கு வழிவகுப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.
  • அதிக கஃபைன் நிறைந்த பானங்கள் மற்றும் சில மருந்துகளும் இரும்புச்சத்து குறைபாட்டுக்கு வழிவகுக்கும்.
  • செரிமான உறுப்புகளில் பிரச்னை இருந்தாலும் உணவுகளிலுள்ள இரும்புச்சத்தை உடல் சரியாக உறிஞ்சமுடியாத நிலை ஏற்படும்.

இந்த குறைபாட்டை சரிசெய்வது எப்படி?

  • மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அளவுக்கதிகான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது அவசியம். இது உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கும்.
  • உடலில் உள்ள சத்துக் குறைபாடுகள் குறித்து டயட்டீஷியனை அணுகி ஆலோசனைபெற்று சரிவிகித உணவுமுறையை மேற்கொள்ள வேண்டும். உடல்நலம் குறித்த பரிசோதனைகளை குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை செய்வது சத்துக்குறைபாடுகளை எளிதில் கண்டறிந்து சரிசெய்ய உதவும்.
  • கர்ப்பம் உறுதியானவுடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்து மருந்து மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்வது இரும்புச்சத்து மற்றும் பிற சத்துக் குறைபாடுகளை தவிர்க்க உதவும்.
  • இந்தியப் பெண்களுக்கு குழந்தைப்பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இது பிரசவகாலத்தில் அதிகப்படியான ரத்த இழப்பை தடுக்க உதவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com