\
கூகுள் டூடூலில் கன்னட நடிகர் ராஜ்குமார்

கூகுள் டூடூலில் கன்னட நடிகர் ராஜ்குமார்

கூகுள் டூடூலில் கன்னட நடிகர் ராஜ்குமார்
Published on

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் 88வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

கடந்த 1929, ஏப்ரல் 24ஆம் தேதி சிங்கநல்லூரு புத்தஸ்வாமய்யா முத்துராஜுவாக பழம்பெரும் நடிகர் ராஜ்குமார் பிறந்தார். அவரது 88வது அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுளின் முன்பக்கம், திரையரங்கில் ரசிகர்கள் அமர்ந்து, இளம் வயது ராஜ்குமாரின் படத்தை கண்டு ரசிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 220 திரைப்படங்களில் நடித்துள்ள ராஜ்குமார் 2 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் உள்பட 11 கர்நாடக மாநில ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், 10 தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், 2 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com