”இத நெனச்சு சிரிக்கவா அழறதா தெரில.. அரசியலுக்கு வராதது ஏன்னா..” - ரஜினி பரபரப்பு பேச்சு!

”இத நெனச்சு சிரிக்கவா அழறதா தெரில.. அரசியலுக்கு வராதது ஏன்னா..” - ரஜினி பரபரப்பு பேச்சு!
”இத நெனச்சு சிரிக்கவா அழறதா தெரில.. அரசியலுக்கு வராதது ஏன்னா..” - ரஜினி பரபரப்பு பேச்சு!

தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தன்னகத்தே வைத்திருக்கக் கூடியவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு உரிய நபர் ஒருவர் என்றால் அது ரஜினிதான் என இந்திய திரையுலகின் மூத்த, உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் சொல்லக் கூடிய அளவுக்கான ஒரு ஸ்டார்டம் வைத்திருப்பவர் ரஜினி.

பார்வையாளர்களை தங்களில் ஒருவராகவே பேசுகிறார் என ரஜினியை எண்ண வைக்கும் அளவுக்கு அவரது மேடை பேச்சுகள் எப்போதுமே அமைந்திருக்கும். அந்த வகையில்தான் தற்போது சேபியன்ஸ் ஹெல்த் ஃபவுண்டேஷனின் வெள்ளிவிழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று (மார்ச் 12) நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதும் வைரலாகி வருகிறது.

அதில் தான் எதனால் அரசியலுக்கு வரவில்லை, ஆரோக்கியம், உடல் நலம் உள்ளிட்டவற்றை பற்றி தனக்கே உரிய பாணியில் அந்த ஸ்டைல் மாறாமல் பேசியிருக்கிறார் ரஜினிகாந்த். அவரது இந்த பேச்சு குறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

அதன்படி, விழா மேடையில் ரஜினிகாந்த் பேசியதன் விவரத்தை காணலாம்:

“அறிவு சொல்லும் என்ன பேசனும்னு.. திறமை சொல்லும் எப்படி பேசனும்னு.. அரங்கம் சொல்லும் எவ்வளவு பேசனும்னு.. அனுபவம்தான் என்ன பேசனும் என்ன பேசக்கூடாதுனு. ஆனால் இங்கே வந்ததெல்லாம் ஓகே. பேசுறதுக்கு மட்டும் ஏன் ஒத்துக்கிட்டேனு என் அனுபவமும் அறிவும் சொல்கிறது.

ஆகையால் ரொம்பவே ஜாக்கிரதையா பேசு என்றும், வேறு கூட்டம் மாதிரியான நிகழ்வு இது இல்லை. இங்கே இருப்போரெல்லாம் ஜட்ஜ்ஸ், டாக்டர்ஸ் என பெரும் படித்தவர்கள். உன் அறிவை வெளிப்படுத்தனும்னு சமூக வலைதளங்களில் பார்த்ததையெல்லாம் இங்கே கொட்டிவிடவேண்டாம். அவங்களுக்கு தெரியும். இப்போ இருக்கும் நவீன உலகில் எல்லோருமே ஊடகம்தான். அறிஞர்கள். அறிவியலாளர்கள்தான். அதனால அளவா பேசனும்.” என்று சொல்லி தன்னுடைய பேச்சை தொடங்கியிருக்கிறார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து பேச்சை தொடர்ந்தவர், “அரசியலில் நுழைய வேண்டும் என அதற்கான எல்லா வேலைகளுக்குள் நுழையும் போதுதான் எதிர்பாராத விதமாக கொரோனா இரண்டாவது அலை பரவல் தொடங்கிவிட்டது. எதிர்ப்பு சக்திக்காக மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் அரசியலுக்கு வருவதாக அறிவித்தும் விட்டேன். பின்வாங்கவும் முடியாது. ஆனால் மருத்துவர் என்னிடம் ரொம்பவே கண்டிப்பாக சொல்லிவிட்டார்.

ஒரு மருத்துவராக என்னால் இதற்கு அனுமதிக்க முடியாது. அதையும் மீறி அரசியலுக்கு செல்வதாக இருந்தால் மக்களை சந்திக்கும் போது ஒரு 10 அடி தள்ளிதான் இருக்க வேண்டும். மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார். ஆனால் 10 அடிக்கு அப்பால்தான் கூட்டம் இருக்கனும் சொன்னதுலா வாய்ப்பே இல்லை. எப்படி இருக்க முடியும்? இதை எப்படி நான் வெளியே சொல்வேன்? அப்படியே சொன்னால் அரசியலுக்கு வர பயந்துட்டேன் என்றுதான் நினைப்பாங்க என மருத்துவரிடம் சொன்னேன்.

இதற்கு மருத்துவரோ, ‘எந்த மீடியா, ஃபேன்ஸ் என எல்லாரிடமும் நான் வந்து சொல்றேன். இதுதான் உண்மை. ஆரோக்கியம்தான் முக்கியம். இதில் பயப்பட எதுவுமே இல்லை’ என்றார். அதன் பிறகுதான் அரசியலுக்கு வரப்போவதில்லை என பொதுவெளியில் அறிவித்தேன்.” என அரசியல் குறித்த தன்னுடைய நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதை ரஜினிகாந்த் விளக்கியிருந்தார்.

அதன்பிறகு, ஆரோக்கியம் குறித்தும் உணவில் எந்த அளவுக்கு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் தனது அனுபவத்தில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டி அதனை ஒரு உதாரணமாகவே எடுத்துரைத்திருந்தார்.

அதில், “ஆல்கஹால் குடிப்பது, புகைப்பிடிப்பது கல்லீரல், நுரையீரலையே பெரும்பாலும் பாதிக்கும். ஆனால் உணவில் அளவுக்கு அதிகமான உப்பு எடுத்துக் கொள்வது உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கும்” என்றார். அதன்பிறகு, வெள்ளையாக இருக்கும் உணவுகளை மிகவும் அளவாக எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறியிருக்கிறார் ரஜினி.

அதாவது, சாதம், உப்பு, சர்க்கரை, நெய், பால் பொருட்கள் உள்ளிட்ட வெள்ளையாக இருக்கக் கூடிய உணவுப் பொருட்களை உட்கொள்வதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது என தனக்கு கூறப்பட்ட அறிவுரையை பகிர்ந்திருந்தார்.

மேலும், “பிறந்ததில் இருந்து 70, 80 வயது வரைக்கும் துடித்துக்கொண்டே இருக்கிறது இதயம். இதனை எந்த விஞ்ஞானத்தாலும் செய்ய முடியுமா? 10 வருஷம் கூட தாங்காது. என்ன மாதிரியான தொழில்நுட்பம் அது? உடலில் ஓடும் ஒரு ரத்தத்தை நம்மால் உருவாக்க முடியுமா? முடியாது. இதையெல்லாம் தெரிஞ்சும் சிலர் கடவுள் இல்லையென சொல்கிறார்கள். அதை பார்த்தா சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை.” என்று ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com