ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்
Published on

தமிழகத்தில் இன்று அதிகம் பேசப்படும் இரண்டு விஷயங்கள்.. ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் கமலுடைய மக்கள் நீதி மய்யம் ஆகியவைதான்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை அறிமுகப்படுத்தி கமல்ஹாசன் முதல் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். இதில் ரஜினிகாந்த் சற்று வித்தியாசமாக செயல்படுகிறார் என சொல்லலாம். தன்னுடைய கட்சி குறித்து அறிவிப்பதற்கு முன்னால் தமிழகத்தில் இருக்கும் எல்லா மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். இதுவரைக்கும் வேலூர், தூத்துக்குடி, நெல்லை, தேனி, நீலகிரி, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்துக்குமான நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

இதில் வேலூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு சுதாகர், ராஜூ மகாலிங்கம் தலைமையிலானக் குழு அந்தந்த மாவட்டங்களுக்கே சென்று ரசிகர்களோடு ஆலோசனை நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்வதால் நேர விரயம் ஆகுமென்று ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களுக்கும் தேதி கொடுத்து சென்னை ராகவேந்திரா மண்டபவத்திற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி கடந்த நான்கு நாட்களாக காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி, மற்றும் புதுச்சேரிக்கான நிர்வாகிகள் ஆசோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 இந்தக் கூட்டங்களில் எதிலும் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை. சுதாகர் மற்றும் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் தலைமையிலானக் குழுதான் ஆலோசனையில ஈடுப்பட்டார்கள்.

இன்றும் நெல்லை மாவட்டத்தின் ஒன்றியம், நகராட்சி ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த மாவட்டத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள். ஆலோசனை ஒருபுறம் நடக்க.. அங்க வந்திருந்த பல ரசிகர்களுக்கு தங்களுடைய தலைவர் இந்தக் கூட்டத்துக்கு வரமாட்டார் என்றுதான் தெரியும். ஆனால் மண்டபத்திற்கு யாரும் எதிர்பாராதவிதமான வந்தார் என்றால் எப்படி இருக்கும்! 

இந்தநிலையிலதான் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபம் வருகிறார். உங்களிடம் பேசப்போகிறார் என மாநில பொறுப்பாளரான சுதாகரும், மாநில செயலாளரான ராஜூ மகாலிங்கமும் அறிவிக்கிறார்கள். உடனே அங்க வந்திருந்த ரசிகர்கள் எல்லோருக்கும் உற்சாகம். இந்த அறிவிப்பு வெளியாகி பத்து நிமிடம் கழித்து ரஜினிகாந்த் மண்டபம் வந்தார். அந்தப் பத்து நிமிடமும் ஒவ்வொரு ரசிகர்களுடைய முகத்தில் பல எதிர்பார்ப்புகளும் ஆர்வமும் இருந்தது. அதுவும் எல்லோரும் மிகுந்த எதிர்பார்ப்போடு மண்டபத்தின் முதல் மாடிக்கு வரும் வழியை பார்த்துக்கொண்டிருந்தார். சரியாக பத்து நிமிடத்தில் ரஜினிகாந்த் தனக்கே உரிய ஸ்டைலான  நடையோடு மேடை ஏறினார்.

ரஜினியை பார்த்த ரசிகர்கள் கரகோஷங்களோடு உற்சாக வரவேற்பு கொடுத்தாங்க. மேடையில் இருந்த இருக்கையில சில வினாடிகள் அமர்ந்த ரஜினிகாந்த் பேச தொடங்கினார். “அரசியல் என்பது சாதாரண விஷயம் கிடையாது, இதுக்கு சரியான கட்டமைப்பு தேவை. அதைதான் இப்ப நாம செஞ்சுக்கிட்டிருக்கோம். ஒரு குடும்ப தலைவன் நல்லா இருந்தா அந்தக் குடும்பம் நல்லா இருக்கும். அப்படிதான் நான் இருக்க ஆசைப்படுறேன். நாம நல்லது பண்ண வர்றோம். அதனால நல்லா திட்டமிட்டு கட்சிக்கான அனைத்து நிர்வாகிகளையும் நியமிப்பது அவசியம்” என்று கூறினார்.  
 
இத்தோடு இன்னும் சில விஷயங்களையும் பேசினார் ரஜினி. அரசியல் பற்றி பேசின ரஜினிகாந்த் தான் நடிச்சுக்கிட்டிருக்கும் ‘காலா’ படம் குறித்தும் பேசினார். அதுவும்  நீங்க நெல்லை மாவட்டத்துல இருந்து வந்திருக்கீங்க. நான் நடிச்சிருக்கும் ‘காலா’ படமும் உங்கள் மாவட்டத்தின் கதைதான்னு சொன்னாரு. இத சொன்ன உடனே ரசிகர்களின் கொண்டாட்டம் அடுத்தக்கட்டத்துக்கு போயிடுச்சு.

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பேசிய ரஜினிகாந்த், மண்டபத்துக்கு வந்திருந்த ஒவ்வொரு ரசிகரின் பெயரைக் கேட்டு தெரிந்துகொண்டார். அதுவும் ரசிகர்கள் தங்களுடைய பெயரை சொன்ன விதத்தை தனக்கே உரிய ஸ்டையில்ல கேட்டு ரசிச்சாரு. இதனால ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போனாங்க. ரஜினி வருகை குறித்து நாம விசாரிச்ச வரைக்கும் இது திட்டமிட்டு நடந்த சந்திப்பு இல்ல. எதேட்சையா நடந்த சந்திப்புதான் என சொல்றாங்க. அதுவும் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்துக்கு வருவதற்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் தெரிஞ்சிருக்கு.

டிசம்பர் மாதம் ரசிகர்களை சந்திச்சு புகைப்படம் எடுத்துக்கிட்ட ரஜினிகாந்த் அதுக்குப் பின்னால் ரசிகர்களை சந்திக்கவில்லை. இன்னைக்கு திடீர்னு நடந்த சந்திப்பு நெல்லை ரசிகர்களுக்கு ரொம்பவே சர்ப்ரைசா இருந்திருக்கு. அதேபோல ரசிகர்களின் சந்திப்பை முடித்து செய்தியாளர்களையும் சந்திச்சாரு ரஜினிகாந்த். இதுவும் ரஜினிகாந்த்கிட்ட ஏற்பட்டிருக்கும் இன்னொரு மாற்றமா பார்க்கப்படுகிறது. அரசியல் அறிவிப்புக்கு பின்னால் சில நிகழ்ச்சிகளில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தெரிவித்திருக்கிறார் ரஜினி.. ஆனா இந்த முறையை பொறுப்பா அமர்ந்து ஒரு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினாரு.
 
மேலும் எந்த மாதிரியான கேள்வி கேட்டாலும் அதுக்கு முறையான பதில் சொல்லியபின் கிளம்பினார் ரஜினிகாந்த்.
இப்படி இரண்டு சர்பிரைஸால எல்லோரும் ஆச்சர்யப்பட்டாங்க. இந்த நிலையில மூணாவது சர்ப்ரைசையும் கொடுத்து ரசிகர்களைக் கொண்டாட வெச்சிட்டாரு. அதாவது ரஜினிகாந்துடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பும் இன்னைக்கு வெளியாகியிருக்கு. அந்தப் படத்தை இளம் இயக்குனரான கார்த்திக் சுப்ராஜ் இயக்குராரு. இவர் ரஜினியுடைய தீவிர ரசிகர். அதனால ஒவ்வொரு காட்சியையும் ரசிச்சு ரசிச்சு எழுத்தியிருக்காராம். மேலும் இந்தப் படத்தை குறைந்த நாட்கள்ல எடுக்க திட்டமிட்டிருக்காங்க. ஒரே நாள்ல அடுத்தடுத்த சர்ப்ரைஸ் ரஜினிக்கிட்ட இருந்து வர ரசிகர்கள் மகிழ்ச்சியில இருக்காங்க. ‘காலா’, ‘2.0’ கார்த்திக் சுப்ராஜின் புது படம் ஆகியவற்றோடு சினிமாவுக்கு படையப்பா ஸ்டையில்ல குட்பை சொல்லிட்டு முழு நேர அரசியல்வாதியாக தயாராகுறார் ரஜினிகாந்த்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com