2008ல் பறிமுதல்; 1628 வெடிகுண்டுகள்: கும்மிடிப்பூண்டியில் செயலிழக்க செய்யப்படுவது எப்படி?

2008ல் பறிமுதல்; 1628 வெடிகுண்டுகள்: கும்மிடிப்பூண்டியில் செயலிழக்க செய்யப்படுவது எப்படி?
2008ல் பறிமுதல்; 1628 வெடிகுண்டுகள்: கும்மிடிப்பூண்டியில் செயலிழக்க செய்யப்படுவது எப்படி?

கும்மிடிப்பூண்டியில் உள்ள இரும்பு உருக்கு ஆலைகளில் கடந்த 2008-ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் எடையுள்ள 1,628 வெடிகுண்டுகளை, நீதிமன்ற உத்தரவுப்படி ராணுவத்தினர் பலத்த பாதுகாப்போடு செயலிழக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். (புகைப்படத் தொகுப்பு - கீழே)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கடந்த 2008-ஆம் ஆண்டு கிணற்றில் கிடந்த துப்பாக்கித் தோட்டாக்களை கண்டெடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, துப்பாக்கி தோட்டாக்கள் வெடித்து சிதறியதில் இரு சிறுவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணை நடத்தினர். அதில், அப்பகுதியில் உள்ள இரும்பு உருக்கு ஆலைகள் இருந்து மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு வந்து கிணற்றில் குண்டுகள் போடப்பட்டதும், அப்போது கீழே விழுந்த தோட்டாக்களை சிறுவர்கள் எடுத்து விளையாடியபோது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து, அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செந்தாமரை கண்ணன் தலைமையிலான காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 22 இரும்பு உருக்கு ஆலைகளில் சுமார் 10 டன் எடையுள்ள வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள், துப்பாக்கிகள் ஆகியவை இருப்பதும், அவை இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தின்போது பயன்படுத்தப்பட்டவை என்பதும், வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு இரும்பு உருக்கு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து, பேரழிவு ஆயுதங்களை அனுமதி இன்றி வைத்திருந்ததாக சிப்காட் காவல் துறையினர், இரும்பு உருக்கு ஆலை நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வெடிகுண்டுகளுக்கும் வெடிக்கும் தன்மை உள்ளது என்பதை ராணுவப் பிரிவின் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் உறுதி செய்தனர்.

இது தொடர்பான வழக்கு பூவிருந்தவல்லி பொடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வெடிகுண்டுகளையும் உடனடியாக செயலிழக்கும் செய்யுமாறு கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் ராணுவ கர்னல் அணில் கபூர், கேப்டன் விக்ரம் ஆகியோர் தலைமையிலான ராணுவ வெடிகுண்டு செயலிழக்க பிரிவு நிபுணர்கள், தமிழ்நாடு வெடிகுண்டுகள் செயலிழக்கும் நிபுணர்கள், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான காவல் துறையினர், கடந்த 13 ஆண்டுகளாக தொழிற்சாலை வளாகம் ஒன்றில் பூமியில் புதைக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகளில் இன்று முதற்கட்டமாக 10 டன் எடையுள்ள 1,628 வெடிகுண்டுகளை தோண்டி எடுத்தனர்.

முதற்கட்டமாக 622 வெடிகுண்டுகளை 4 டிராக்டர்களில் மணல் பரப்பி வெடிகுண்டுகளை கொண்டு சென்று ராமசந்திராபுரம் என்ற வனப்பகுதியில் 15 அடி ஆழமுள்ள 20 குழிகளை தோண்டி, அதில் குண்டுகளை வைத்து ஜெனரேட்டர் எனப்படும் மின்கலன் மூலம் வெடிகுண்டுகளில் மின் இணைப்பு கம்பிகள் மூலம் மின்சார அதிர்வுகளை ஏற்படுத்தி, ஒன்றின் பின் ஒன்றாக வெடிகுண்டுகளை பலத்த பாதுகாப்புடன் செயலிழக்கும் நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக வெடிகுண்டு செயலிழக்கும் செய்யும் நேரத்தில், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வாகனங்கள் வந்து செல்லவும், மக்கள் நடமாட்டத்திற்கு காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 அவசர ஊர்திகள், ராணுவ மருத்துவ குழுவினரும், சுகாதாரத்துறை மூலம் நான்கு மருத்துவர்கள் தலைமையில் 20 செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும் 3 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 1620 வெடிகுண்டுகளும் இன்னும் 4 நாள்களில் முழுமையாக வெடித்து செயலிழக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

- எழில்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com