கர்ப்பிணி உயிரிழப்பு : பொதுமக்கள் மீது தடியடி
திருச்சியில் 2 சக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணி பெண் ஒருவரை காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் அவர் உயிழந்தார் ; அதனை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி
பலருக்கும் மண்டை உடைந்து இரத்தம் வெளியேறி வருகிறது
5க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீசார் ஹெல்மெட் சோதனையில் (07.03.2018) இரவு 7.30 மணியளவில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் புதுத்தெருவை தம்பதியர் ராஜா (என்ற) தர்மராஜ், உஷா (30) இருசக்கர வாகனத்தில் வந்தனர். உஷா 3 மாத காப்பிணி. போலீசார் கைகாட்டி நிறுத்தாததால், மற்றொரு வாகனத்தில் ஏட்டு காமராஜ் துரத்தி சென்று, தம்பதியர் சென்ற வாகனத்தை எட்டி உதைத்தார். இதனால், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். பின்னால் வந்த வேன் ஏறியதில் 3 மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். ராஜா பலத்த காயமடைந்தார். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் 3,000 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வாகனத்தை எட்டி உதைத்த ஏட்டு காமராஜ் தப்பியோடிய நிலையில், மக்களின் போராட்டத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்