எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. - கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம் இன்று.!

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. - கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம் இன்று.!
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. - கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம் இன்று.!
கலை ஆளுமையாக வாழ்ந்து மறைந்த கண்ணதாசனின் 39-வது நினைவுநாள் இன்று..

‘தமிழ்க் கவிதைச் சமூகத்தில் யாரோடும் ஒப்பிட முடியாத தனியொரு தமிழ் கவிஞன் கண்ணதாசன்’ என்று தனது ஆய்வுக் கட்டுரையில் சிலாகித்தார் கவிஞர் வைரமுத்து.
 
சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என்று இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் முத்திரை பதித்து, கலை ஆளுமையாக வாழ்ந்து மறைந்த கண்ணதாசனின் 39-வது நினைவுநாள் இன்று.
 
சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன். அந்தப் பெயரே நிரந்தரமாக நிலைத்துவிட்டது.
 
திரைப்படப் பாடல்கள் 7500-க்கும் மேல், தனிக் கவிதைகள் 5000-க்கும் மேல், மற்றும் 195 தனி நூல்கள் எழுதி ‘கவியரசு’ அழியாப்புகழ் பெற்றார்.
 
‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்; வாசல் தோறும் வேதனை இருக்கும்’ என கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்கள், துன்பங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள்.
 
‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் விதத்தில் வரும் பாடலை பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி பெறாத எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் திருப்தி அடைந்தார்.
 
‘’கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை;
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை;
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை;
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை..’’
 
என்ற வரிகளை கேட்டதும் மெய்சிலிர்த்து பாராட்டினார்.
 
கண்ணதாசன் எழுதிய வரிகள் அவருக்கே பொருந்தும்..
 
“நான் நிரந்தமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com