ப்ரியா வாரியரை விடாமல் ‘ட்ரோல்’ ஆக்கிய நெட்டிசன்கள்: இயக்குநர் ஓமர் லுலு கதறல்

ப்ரியா வாரியரை விடாமல் ‘ட்ரோல்’ ஆக்கிய நெட்டிசன்கள்: இயக்குநர் ஓமர் லுலு கதறல்
ப்ரியா வாரியரை விடாமல் ‘ட்ரோல்’ ஆக்கிய நெட்டிசன்கள்: இயக்குநர் ஓமர் லுலு கதறல்

கடந்த செவ்வாய் கிழமை வெளியான ப்ரியா வாரியர் பாடலை வைத்து நெட்டின்கள் ‘ட்ரோல்’ செய்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி14 அன்று ப்ரியா வாரியரின் மலையாள படான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்க மலரய பூவி’ பாடல் சமூக வலைத்தளமான யுடியூப்பில் வெளியிடப்பட்டது. அந்தப் பாடல் வெளியான ஒரே நாளில் ப்ரியா வாரியரின் வாழ்க்கை உச்சத்திற்குச் சென்றது. உலகம் முழுவதும் அவர் மிகப் பிரபலமானார்.

சமீபத்தில் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கண் அடித்ததை கூட ப்ரியா வாரியரின் கண்ணசைவை காட்டியே ஒப்பீடு செய்தனர் நெட்டிசன்கள். எந்த சமூக வலைத்தளம் ப்ரியா வாரியரை உலகப் புகழுக்கு கொண்டு சென்றதோ அதே சோஷியல் மீடியாதான் இன்று அவரை கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறது. அன்று மகிழ்ச்சியின் உச்சத்தில் மூழ்கித்தவித்த இயக்குநர் இன்று சோகத்தின் அடி ஆழத்திற்கு சென்று அழுது கொண்டிருக்கிறார்.

ஏன்? என்ன ஆச்சு?

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று இதே படத்தின் இன்னொரு பாடலான ‘ப்ரேக் பெண்ணே’ பாடலை யுடியூப்பில் வெளியிட்டது படக்குழு. ஏற்கெனவே சமூக வலைத்தளத்தில் அதிக புகழை சம்பாதித்த படம் என்பதால் படக்குழுவினர் இதன் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஆசையில் பெருத்த அடியே காத்திருந்தது. வரவேற்பை அடைவதற்கு பதிலாக இந்தப் பாடல் வெறுப்பை அதிகம் சம்பாதித்திருக்கிறது. யுடியூப்பில் வெளியான ‘ப்ரேக் பெண்ணே’ பாடலை இதுவரை 3 லட்சம் பேர் ரசித்துள்ளனர் என்று நினைத்துவிடாதீர்கள். அப்படி நடந்திருந்தால் அது வழக்கமான செய்தி. 3லட்சம் பேர் டிஸ்லைக் செய்துள்ளனர். அதாவது வெறுத்துள்ளனர். இந்தப் பாடலை 50 ஆயிரம் பேர்தான் விரும்பி உள்ளனர். அதாவது ரசித்ததைவிட வெறுத்தவர் பட்டியல் பலமாகியுள்ளது. 

ஒரு படம், ஒரே பாடல் மூலம் உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் வைரலான வரலாற்றை அந்தப் படமே தனது இன்னொரு பாடல் மூலம் முறியடித்துள்ளது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  ‘ப்ரேக் பெண்ணே’ பாடல் வீடியோவை இதுவரை 2,757,339 பேர் கண்டுகளித்துள்ளனர். அதில் முக்கால்வாசியான ஆட்கள் அதற்கு டிஸ்லைக் இட்டு இருக்கிறார்கள் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தப் பாடல் கொஞ்சம் க்ளாசிக் கூடவே அதிக மாடர்ன் என்று அடிப்படையில் நடனம் அமைத்துள்ளார் இயக்குநர். முதலில் எந்தப் ப்ரியா வாரியரின் கண் அடிப்பை ரசித்தார்களோ அதே நெட்டிசன்கள் இப்போது இவரது நடனத்தால் வெறுத்திருக்கிறார்கள். இந்த வகைதொகையான வசைகளை கண்டு இயக்குநர் ஓமர் லுலு, “ப்ரியா வாரியர் என்ற பெயரால் எனது திரைப்படத்தை கொல்ல வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்து கூறியுள்ளார்.

மேலும் அவர், “சமூக ஊடகத்தினர்தான் ப்ரியா வாரியரை சூப்பர் ஸ்டார் ஆக்கினர். அவர்கள்தான் அவரை விரும்பினார்கள். அவர்கள்தான் அவரை வெறுக்கிறார்கள். தயவு செய்து எனது படத்தை ப்ரியா வாரியரை வைத்து தாக்காதீர்கள். ப்ரியா வாரியர் மட்டும் இதில் ஹீரோயின் இல்லை. இந்தப் படத்தில் இளம் நடிகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள்” என்றும் கூறியுள்ளார். 

லைக்ஸைவிட டிஸ்லைக்கை அதிகம் வாங்கிக் குவித்திருப்பதை பற்றியும் ஓமர் வாய் திறந்திருக்கிறார். “இந்த சமூக ஊடகம் என்பது தனித்துவமான பாதை. இது வேகமானது. அதேவேளை உணர்ச்சிகரமானது. மக்கள் இந்தப் பாடலை ரசிக்க கொஞ்ச காலம் எடுத்துக் கொள்வார்கள். ஒருமுறை அவர்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டால் அவ்வளவுதான். நான் உறுதியாக நம்புகிறேன். இந்த டிஸ்லைக் பட்டியல் அப்படியே தலைக்கீழாக மாறும் விரைவில்” என்று சமாளித்திருக்கிறார் ஓமர் லுலு. அதன் பிறகு ஓமர் சென்னதுதான் சிறப்பானது. “இந்தப் பாடலை ட்ரோலாக்கிய நெட்டிசன்களுக்கு நன்றி. ஏனென்றால் ‘மானிய மலரய பூவி’யைவிட ‘ப்ரேக் பெண்ணே’ பாடலின் பார்வையாளர்களை அதிகரிக்க செய்துவிட்டனர்” என்றார் கூலாக. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com