புழக்கத்தில் பிளாஸ்டிக் அரிசி: மக்கள் அச்சம்
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உண்மையான அரிசிகளுடன் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷாங்க்ஷி பகுதியில் பிளாஸ்டிக் அரிசி அதிகளவில் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனிக் கிழங்கு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சிந்தெடிக் பிளாஸ்டிக் பிசின் சேர்த்து உருவாக்கப்படுகிறதாம் இந்த பிளாஸ்டிக் அரிசி.
இப்படி உருவாக்கப்படும் பிளாஸ்டிக் முதலில் பேப்பர் ரோல் தயாரிக்கப்பட்டு பின்னர் அவை தொழிற்சாலையில் இயந்திரத்தில் அனுப்பபடுகிறது. இந்த இயந்திரமானது அரிசி போல் துண்டு துண்டாக வெட்டுகிறது. அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரிக்கின்றனர் பிளாஸ்டிக் அரிசி தயாரிப்பாளர்கள். பின்னர் இந்த பிளாஸ்டிக் அரிசியானது கள்ளச்சந்தை வழியாக இந்தியாவிற்குள் அனுப்பப்படுகிறது.
பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி?
பிளாஸ்டிக் அரிசி சமைத்த பின்னர் சாதரண அரசிச் சோறு போல் கையில் ஒட்டாது. பிளாஸ்டிக் அரிசி என சந்தேகம் வந்தால், அவற்றினை சோறாக்கிய பின்னர் பந்துபோல் உருவாக்கி தரையில் போட்டால், துள்ளி குதிக்கும். இவ்வளவு ஆபத்து வாய்ந்த அரிசி இந்தியாவிலும் புழக்கத்தில் வந்துவிட்டன என்ற அதிர்ச்சி தகவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.