குழந்தைகள் விரும்பும் எளிய உணவு.. ருசியான, ஹெல்தியான ’பட்டாணி புலாவ்’ செய்வது எப்படி?

குழந்தைகள் விரும்பும் எளிய உணவு.. ருசியான, ஹெல்தியான ’பட்டாணி புலாவ்’ செய்வது எப்படி?
குழந்தைகள் விரும்பும் எளிய உணவு.. ருசியான, ஹெல்தியான ’பட்டாணி புலாவ்’ செய்வது எப்படி?

“வைத்தியரிடம் கொடுப்பதை வாணிபரிடம் கொடு” என்ற பழமொழி நம் நடைமுறையில் உண்டு. இக்காலத்தில் குழந்தைகளின் சாப்பாட்டின் ருசியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தினமும் ஒரே வகையான உணவு பதார்த்தங்களை அவர்கள் விரும்புவதில்லை. ஆகையால் சமையல் வல்லுநர்கள் புது புது உணவு வகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அப்படி ஒரு உணவை தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். அது தான், பட்டாணி புல்லாவ்.

இது செய்வது மிகவும் எளிது. தவிரவும் மிகவும் சுவையானது. ஹெல்தியானது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்யலாம்?

  • தேங்காய் ஒரு மூடி துறுவி பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • உரித்த பச்சை பட்டாணி ஒரு கப்,
  • பாஸ்மதி அரிசி 250 கிராம்,
  • முந்திரி பருப்பு,
  • ஏலக்காய்,
  • உலர் திராட்சை,
  • வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒரு கப்,
  • பச்சைமிளகாய் 4 பட்டை லவங்கம்,
  • கிராம்பு,
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்,
  • மற்றும் நெய் தாளிப்பதற்கு.

முதலில் குக்கரில் நெய் விட்டு, அதில் மசாலா பொருட்களை போட்டு வதக்கி பின் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து, நன்கு வதக்கிக்கொள்ளவும், பிறகு பட்டாணி சேர்த்து வதக்கவும், அத்துடன், பாஸ்மதி அரிசி சேர்த்து அத்துடன் தேங்காய் பால் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும், மிதமான சூட்டில் குக்கரை 20 நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவேண்டும். 

பின் நெய்யில் முந்திரி உலர் திராச்சை வறுத்து புலாவுடன் சேர்க்கவேண்டும். அருமையான ருசியான ஹெல்தியான புலாவ் தயார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com