வீணடிக்கப்பட்ட நாடாளுமன்ற நேரம் – மாநிலங்களவை ஹைலைட்ஸ்

வீணடிக்கப்பட்ட நாடாளுமன்ற நேரம் – மாநிலங்களவை ஹைலைட்ஸ்

வீணடிக்கப்பட்ட நாடாளுமன்ற நேரம் – மாநிலங்களவை ஹைலைட்ஸ்
Published on

121 மணி நேர அவை நிகழ்வுகளில் 40 மணி நேரம் வீணாக்கப்பட்டது

·        தாமதமாக அவை கூடியதாலும், மதிய உணவு நேரத்துக்கு அருகில் கூடியதாலும் 10 மணி நேரம் அவை நிகழ்வுகள் வீணானது.

·        ஒரு மசோதா கூட அறிமுகம் செய்யப்படவில்லை; 1 மசோதா மட்டுமே நிறைவேற்றம் ; 1 மசோதா மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

·        60 உறுப்பினர்கள் பதவியேற்றுக்  கொண்டனர்.

·        மொத்தமாக 30 அமர்வுகள் இடம்பெற்றன.

·        காவிரி, ஆந்திரா சிறப்பு ஒதுக்கீடு,டெல்லி கட்டிட சீல் வைப்பு, வங்கி மோசடி,போலி என்கவுண்டர், சிலை விவகாரம் போன்றவை அவையை முடக்க காரணமாகின.

·        குடியரசு தலைவர் உரை மீது 14 மணி நேர விவாதம் நடைபெற்றது.

·        பட்ஜெட் மீதான் விவாதம் 10 மணி நேரம் நடைபெற்றது.

·        நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைகள் நடைமுறைபடுத்தப்பட்டது குறித்து 33 அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.

·        4472 கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வ பதிலளிக்கப்பட்டது.

·        5 கேள்விகளுக்கு அவையிலேயே வாய்மொழி பதில் வழங்கப்பட்டது.

·        419 கேள்விகள் அவையில் எழுப்பப்படுவதற்காக அவைத்தலைவரின் அனுமதி பெறப்பட்டிருந்தது.

·        ஊழல் ஒழிப்பு மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டும் தொடர் அமளியால் விவாதத்திற்கோ, நிறைவேற்றவோ முடியாமல் திரும்பியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com