கறுப்பினத்தவரின் உரிமைக்கு குரல் கொடுக்கும் "ஹிடன் ஃபிகர்ஸ்"..!
ஆஸ்கார் விருதின், 89ஆவது விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் “ஹிடன் ஃபிகர்ஸ்” திரைப்படமும் ஒன்று.
“ஹிடன் ஃபிகர்ஸ்” என்ற திரைப்படம் 1960-களில் அமெரிக்காவில் இருந்த கறுப்பினச் சிக்கலை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற திரைப்படங்களில் இருந்து சற்று மாறுபட்டிருக்கும் இந்தத் திரைப்படம், உலகின் மிகப்பெரிய விண்வெளி அமைப்பான நாசாவைக் கதைக்களமாகக் கொண்டிருக்கிறது.
ராக்கெட் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் மூன்று கறுப்பினப் பெண் விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் படத்தின் கரு. ரஷ்யாவுடன் விண்வெளிப்போட்டியில் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில், கறுப்பினத்தவருக்கு, கழிவறைகளைக் கூடத் தர மறுத்த நாசா அமைப்பின் இன்னொரு முகத்தை தெளிவாகக் காட்டியிருக்கிறது இந்தத் திரைப்படம். ஆஸ்கர் பட்டியிலில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த கதை ஆகிய மூன்று விருதுகளுக்கு இந்தத் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.