சிறப்புக் களம்
கொள்ளையடிக்கும் சகோதரர்கள் கதையை கூறும் "ஹெல் ஆர் ஹை வாட்டர்"..!
கொள்ளையடிக்கும் சகோதரர்கள் கதையை கூறும் "ஹெல் ஆர் ஹை வாட்டர்"..!
தங்களது பண்ணையை கடனில் இருந்து மீட்பதற்காக வங்கிகளைக் கொள்ளையடிக்கும் இரு சகோதரர்களின் கதையைக் கூறும் திரைப்படம், “ஹெல் ஆர் ஹை வாட்டர்”. ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்ற திரைப்படம்..
நீண்ட காலமாகவே பயன்படுத்தப்படாமல் இருந்த இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை பல ஆண்டுகளுக்கு முன்னரே, மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனால் இந்த ஆண்டில் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது ஹெல் ஆர் ஹை வட்டார் திரைப்படத்துக்குக் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகர், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதுக்கு இந்தத் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.