சிறப்புக் களம்
இனப் பாகுபாட்டைப் படம்பிடித்த "ஃபென்ஸஸ்"..!
இனப் பாகுபாட்டைப் படம்பிடித்த "ஃபென்ஸஸ்"..!
“மூன் லைட்” திரைப்படத்தை போன்றே கறுப்பினத்தவர் பிரச்னைகளைக் கூறும் கதைக்கருவுடன், வேறொரு களத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் “ஃபென்ஸஸ்”. இப்படமும் 89- வது ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் நிலவிய இனப் பாகுபாட்டைப் படம்பிடிக்கிறது இந்தத் திரைப்படம். குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டு வரும் ஒரு கறுப்பினத்தவரின் குடும்பத்தையும், அவரது கனவுகளையும் சுற்றி கதை பின்னப்பட்டிருக்கிறது. ஃபேஸ்பால் விளையாட்டில் கறுப்பினத்தவர் சேர்த்துக் கொள்ளப்படாத காலத்தில் நடந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை உள்ளிட்ட 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.