38 ஆண்டுகளுக்கு பின் பூமியில் விழும் நாசாவின் பழமையான செயற்கைகோள்! எங்கே விழுகிறது?

38 ஆண்டுகளுக்கு பின் பூமியில் விழும் நாசாவின் பழமையான செயற்கைகோள்! எங்கே விழுகிறது?
38 ஆண்டுகளுக்கு பின் பூமியில் விழும் நாசாவின் பழமையான செயற்கைகோள்! எங்கே விழுகிறது?

நாசாவின் 38 வயதான ஓய்வு பெற்ற, (ERBS) புவி கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைக்கோளானது நாளை அதிகாலை பூமியில் விழவிருப்பதாகவும், அது எந்த இடத்தில் விழப்போகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

5,400-பவுண்டு அதாவது 2450-கிலோகிராம் எடையுள்ள (ERBS) புவி கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைக்கோளானது, நாசாவின் சேட்லைட்டில் 38 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது அதன் ஆயுட்காலம் முடிவடைந்து, அது பூமியை நோக்கி விழவிருப்பதாக 3 நாட்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமை நாசா அறிவித்தது.

நாசாவின் இந்த இஆர்பிஎஸ் செயற்கைக்கோளானது மீண்டும் பூமிக்குள் நுழைந்தவுடன் முழுவதுமாக எரிந்துவிடும் என்றும், ஆனால் சில துண்டுகள் மட்டும் உயிர்வாழும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் செயற்கைக்கோளின் இடிபாடுகள் யார் மீதும் விழும் வாய்ப்பு "மிகக் குறைவு" என்று நாசா தெரிவித்தது.

இந்த அறிவியல் செயற்கைக்கோளானது ஞாயிற்றுக்கிழமை இரவு கீழே விழுந்து, பூமியை வந்தடைய 17 மணிநேரத்திற்கும் மேலாகும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்தது. ஆனால் கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனமானது, அந்த செயற்கைக்கோள் திங்கள்கிழமை காலை தான் பூமியை அடையும் என்று இலக்காக நிர்ணயித்தது. மேலும் ஆப்பிரிக்கா, ஆசிய மத்திய கிழக்கு மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளைக் கடந்து செல்லும் பாதையில் 13 மணிநேரம் எடுத்துக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

1984ல் அனுப்பி வைக்கப்பட்ட செயற்கைக்கோள்!

இஆர்பிஎஸ் எனப்படும் புவி கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைக்கோள், 1984 ஆம் ஆண்டு சேலஞ்சர் என்ற விண்கலத்தில் ஏவப்பட்டது. அதன் எதிர்பார்க்கப்பட்ட வேலை ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள் என்று நிர்ணயம் செய்யப்பட்டாலும், இந்த செயற்கைக்கோளானது 2005இல் ஓய்வு பெறும் வரை ஓசோன் மற்றும் பிற வளிமண்டல அளவீடுகளை சரியாக செய்து கொண்டே இருந்தது. முக்கிய அம்சமாக பூமியானது, சூரியனிலிருந்து ஆற்றலை எவ்வாறு உறிஞ்சி கதிர்வீச்சு செய்கிறது என்பதை செயற்கைக்கோள் ஆய்வு செய்தது.

ERBS செயற்கைக்கோளுடன் நிகழ்ந்த வரலாற்று சம்பவங்கள்!

மேலும் இந்த ERBS செயற்கைக்கோளானது சேலஞ்சர் விண்கலத்திலிருந்து சிறப்பான முறையில் அனுப்பிவைக்கப்பட்டது. ஏனென்றால் முதல் முதலாக விண்வெளிக்கு சென்ற அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனையான சாலி ரைடு கைகளால் தான் இந்த செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது இரண்டாவது முறையாக விண்வெளிக்கு சென்ற அமெரிக்காவின் முதல் பெண்ணான சாலி ரைடு, விண்கலத்தின் ரோபோ கையைப் பயன்படுத்தி இந்த ERBS செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் அனுப்பிவைத்தார்.

மற்றும் அதே பயணத்தில் தான் இன்னொரு அமெரிக்கப் பெண்மணியான கேத்ரின் சல்லிவனின், முதல் விண்வெளி நடைப்பயணமும் இடம்பெற்றது. இரண்டு பெண் விண்வெளி வீரர்கள், ஒன்றாக விண்வெளியில் பறந்தது அதுவே முதல் முறையாகும். 2012ல் இறந்த முதல் அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சாலி ரைடுக்கு, இது இரண்டாவது மற்றும் கடைசி விண்வெளிப் பயணமாக இருந்தது.

கொரிய தீபகற்பம் அருகே விழவிருக்கிறது!

இந்நிலையில் இன்றுகாலையில், 38 வயதான நாசாவின் ஓய்வுபெற்ற (ERBS)புவி கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைக்கோளின் சிதைவுகள் கொரிய தீபகற்பம் அருகே விழுந்து நொறுங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேல் நேரப்படி அதிகாலை 5:20-6:20 மணிக்குள் இந்த செயற்கைக்கோள் விபத்துக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரிய தீபகற்பத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com