மனம் மயக்கும் மாலத்தீவுகள்

மனம் மயக்கும் மாலத்தீவுகள்

மனம் மயக்கும் மாலத்தீவுகள்
Published on

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளின் தொகுப்பு மாலத்தீவு. அழகழகான கடற்கரைகள், நெஞ்சம் அள்ளும் இயற்கை காட்சிகள், என சுற்றுலாப்பயணிகளை கவரும் இத்தீவில் முக்கியமானது மேல்.

மாலத்தீவின் தலைநகரான மேலில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம், ஹுல் ஹுமாலே தீவு ஆகியவை சுற்றுலா பயணிகள் அதிகம் சுற்றிப்பார்க்கும் முக்கிய இடங்கள். மேலில் இருக்கும் வெள்ளி தொழுகை மசூதி உலகில் இருக்கும் பழமையான மசூதிகளில் ஒன்று.

மாலத்தீவில் சுற்றுலாத்தலம் எல்லாமே தீவுகளை ஒட்டியவைதான். சன் ஐலேண்ட் மனதை கவரும் மலர்களையும், இயற்கைக் காட்சிகளையும் உடையது. அலிமதா தீவு குடும்பத்தோடு செல்பவர்களின் தேர்வாக இருக்கிறது.

வாழைப்பழ வடிவில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் பனானா ரீஃப் பகுதி கொள்ளை அழகு. மேலும் இங்கு ஸ்கூபா டைவிங் பிரபலமானது.

கடல் வாழ் உயிரினங்களின் அழகை பார்த்து ரசிக்க விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ப்ளூட்ரைப் மூஃப்ஷி தான். கடலுக்குள் அழகிய உலகை கண்முன் விரிய வைக்கிறது ப்ளுட்ரைப் முஃப்ஷி

மாலத்தீவிற்கு கொச்சியில் இருந்து கப்பல் மூலமாகவோ, சென்னையில் இருந்து விமானம் மூலமாகவோ செல்லலாம்.

கப்பல் மூலம் செல்வதற்கு ஒன்றில் இருந்து இரண்டு நாட்கள் ஆகும். விமானம் மூலம் செல்வதற்கு இரண்டு மணிநேரம் ஆகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com