பெஸ்ட் கேமிங் எக்ஸ்பீரியன்ஸ் வேணுமா? - மீடியம் பட்ஜெட்டில் கலக்கலான 5 போன்கள்

பெஸ்ட் கேமிங் எக்ஸ்பீரியன்ஸ் வேணுமா? - மீடியம் பட்ஜெட்டில் கலக்கலான 5 போன்கள்
பெஸ்ட் கேமிங் எக்ஸ்பீரியன்ஸ் வேணுமா? - மீடியம் பட்ஜெட்டில் கலக்கலான 5 போன்கள்

இந்தியாவில் செல்போனில் கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கு காலங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டியிருந்ததால், செல்போன் கேம்களின் மீதான மோகம் அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது. 

விலை உயர்ந்த போன்களில் இருக்கும் நவீன வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு பெஸ்ட் கேமிங் எக்ஸ்பிரியன்ஸை கொடுக்கின்றன. ஆனால் இந்த போன்கள் எல்லோருக்கும் சாத்தியமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகையால் இந்தக்கட்டுரையில் மீடியம் பெட்ஜெட்டில்லும் அதே நேரத்தில் பெஸ்ட் கேமிங் எக்ஸ்பிரியன்ஸையும் கொடுக்க கூடிய மொபைல் போன்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம்.


Poco X3

கடந்த வருடம் சந்தைக்கு வந்த Poco X3 ரக மொபைல் Qualcomm Snapdragon 732 ப்ராசசரைக்கொண்டது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்ட இந்த மொபைல் போனில் 512 ஜிபி அளவிலான மெமரி கார்டை புகுத்திக்கொள்ள முடியும். இதில் லிக்யூடு கூலிங் டெக்னாலாஜி பொருத்தப்பட்டுள்ளதால், நெடுநேரம் கேம் விளையாடிக்கொண்டிருந்தாலும் போனின் வெப்பமடையும் தன்மை மிக குறைவாக இருக்கும்.

இவை தவிரபோனின் புதுப்பிக்கும் தன்மை 120 hz ஆகவும், டச் சேம்பளிங் ரேட் 240Hz வாடிக்கையாளர்களுக்கு நல்ல கேமிங் அனுபவம் கிடைக்கிறது. 6.67 இன்ச் அளவிலான ஹெச் டி டிஸ்ப்ளேயை கொண்ட இந்த போனின் பேட்டரி 6,000 mAh பவர் கொண்டது. டுயல் ஸ்பீக்கர் கொண்ட இந்த போன் எடை 225 கிராமாக உள்ளது. இதன் விலை 16,999 லிருந்து தொடங்கி 19,999 வரை கிடைக்கிறது. 64MP அளவிலான பின்பக்க கேமாராவும், 20 MP முன் பக்க கேமாராவும் Poco X3 இடம் பெற்றுள்ளது.

Moto G 5G

Snapdragon 750G ப்ராசசரைக் கொண்ட Moto G 5G 5g சேவையை உள்ளடக்கியது. கடந்த ஆண்டு நவம்பவர் மாதம் வெளியான இந்த போன் 6.7 இன்ச் எல்.டி.பி.எஸ் டிஸ்ப்ளேயுடன் புல் ஹெச் டி ரிசொலியுஷன் கொண்டது. 6 ஜிபி ரேம் கொண்ட இந்த மொபைலின் இண்டர்னல் ஸ்டோரேஜ் 128GB ஆகும்.

1டிபி அளவிலான மெமரி கார்டு புகுத்தும் வசதியை உள்ளடக்கிய போனில் 48 mp பின்பக்க கேமாராவும், 16 mp முன்பக்க கேமாரவும் இடம் பெற்றுள்ளது. மேலும் 5,000 mAh பேட்டரி பவர் கொண்ட இந்த போன் 20 w டர்போ பவர் சார்ஜிங் ஆகும் வசதியைக் கொண்டது. 20, 999 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த போனில், புதுப்பிக்கும் தன்மை மிக குறைவாக உள்ளது.


Mi 10i 5G

இந்த ஆண்டில் எம்.ஐ யின் முதல் போனாக Mi 10i 5G அறிமுகமாகியுள்ளது. 5g சேவையை உள்ளடக்கிய இந்த போன் 6.67 இன்ச் டிஸ்ப்ளே வசதி கொண்டது. Snapdragon 750G ப்ராசசரைக் கொண்ட இந்த போன் 8 ஜிபி ரேம் கொண்டது.

இதன் இண்டர்னல் ஸ்டோரேஜ் 128 ஜிபிகாவும் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் 512 ஜிபி ஆகவும் உள்ளது. 4,820 mAh பேட்டரி பவர் கொண்ட இந்த போனும் வேகமாக சார்ஜ் ஆகும் வசதியை பெற்றுள்ளது. iந்த வகையான போன்கள் விலை 21,990 தொடங்கி 23,990 வரை இருக்கிறது. இதில் வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்கொள்ளும் தன்மை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy F62

Exynos 9825 ப்ராசசரைக் கொண்ட இந்த போனில் 6.7-inch FHD+ AMOLED ப்ளஸ் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. 7,000 mAh பேட்டரி வசதிக்கொண்ட இந்த போனில், புதுப்பித்துக்கொள்ளும் வசதி சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. 23, 999 மற்றும்  25,999 விலைகளில் கிடைக்கும் இந்த போன் 32mp ப்ரண்ட் கேமாரா வசதி கொண்டது. 6GB ரேம் 128 ஜிபி, 8GB ரேம் 128 ஜிபி ஆகிய இரண்டு வகைகளில் இந்த போன் கிடைக்கிறது.

Realme X7

5 ஜி சேவையை உள்ளடக்கிய இந்த போன் MediaTek Dimensity 800U ப்ராசசரைக் கொண்டது. 6.4-inch Full HD+ Super AMOLED டிஸ்ப்ளே கொண்ட இந்த போன் மிக விரைவாக சார்ஜ் ஆகும் திறன் கொண்டது. 6GB ரேம் 128 ஜிபி, 8GB ரேம் 128 ஜிபி ஆகிய இரு வகைகளில் கிடைக்கும் இந்த போன் களின் விலை ரூ 23,999 மற்றும் ரூ25,999 ஆக உள்ளது.

தகவல் உதவி: https://indianexpress.com/article/technology/techook/gaming-smartphones-under-25000-mi-10i-5g-poco-x3-samsung-f62-moto-g-5g-realme-x7-7198022/

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com