மாதவிடாய் கேள்வியும், சர்ச்சையும் - விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித் துறை : விரிவான அலசல்

மாதவிடாய் கேள்வியும், சர்ச்சையும் - விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித் துறை : விரிவான அலசல்

மாதவிடாய் கேள்வியும், சர்ச்சையும் - விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித் துறை : விரிவான அலசல்

பள்ளி மாணவிகளிடையே மாதவிடாய் குறித்த கேள்விகள் கேட்கப்படுவதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மாதவிடாய் கேள்வி குறித்த சர்ச்சையும், அதற்கான விளக்கத்தையும் காண்போம்.

ஆசிரியைகள்தான் மாணவிகளிடம் கேள்விகள் கேட்பார்கள் - பள்ளிக்கல்வித் துறை எமிஸ் என்ற கல்வி மேலாண்மை செயலியை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, மாணவ, மாணவிகளின் உடல் நலன் குறித்த விவரங்களை அதில் பதிவேற்றுமாறு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, 8 வகையான 64 கேள்விகளுக்கு மாணவ-மாணவிகளிடமிருந்து பதில் பெற்று அதனை எமிஸ் செயலியில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த செயலியில் இடம்பெற்றிருந்த 64 வகையான கேள்விகளில் மாணவியருக்கான மாதவிடாய் பிரச்னைகள் குறித்த கேள்விகளும் இடம்பெற்றிருந்தது.

மாணவிகளிடம் கேட்பதற்காக மாதவிடாய் ஒழுங்காக வருகிறதா? மாதவிடாயின் போது உதிரப்போக்கு அதிகம் உள்ளதா? என்ற கேள்விகளும், மாணவர்களிடம் கேட்பதற்காக குட்கா பயன்படுத்தும் அறிகுறிகள் உள்ளதா? பல் சிதைவு, ஈறு நோய், பல் கரை போன்றவை உள்ளதா? என்ற கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. மாதவிடாய் தொடர்பான கேள்விகள் ஒரு தரப்பினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை, பள்ளி மாணவியரிடையே மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் உடல் நலன் மீதான அக்கறை காரணமாகவும் மாதவிடாய் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதில் சர்ச்சை என்றோ, தவறு என்றோ சுட்டிக்காட்ட எதுவுமில்லை என பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.

மேலும், மாணவியரிடம் ஆசிரியைகள் தான் மாதவிடாய் குறித்து கேள்விகளைக் கேட்டு, எமிஸ் தளத்தில் பதிவேற்றுவதாக தெரிவித்துள்ளது. மாதவிடாய் குறித்த அவரவரது ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடம் பேசுவீர்களா என்ற கேள்விக்கு புதிய தலைமுறையின் நியூஸ் 360 நிகழ்ச்சியில் மக்கள் அளித்த கருத்துக்களை கீழே உள்ள வீடியோவில் காண்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com