‘ஆளத்தெரியாத உங்களுக்கு ஆட்சி ஒரு கேடு’: அனல் பறக்கும் மீம்ஸ்

‘ஆளத்தெரியாத உங்களுக்கு ஆட்சி ஒரு கேடு’: அனல் பறக்கும் மீம்ஸ்
‘ஆளத்தெரியாத உங்களுக்கு ஆட்சி ஒரு கேடு’: அனல் பறக்கும் மீம்ஸ்

பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள், அரசியல்வாதிகள் என பலரும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் நெட்டின்சன்களும் தங்கள் வேலையைக் காட்ட தொடங்கிவிட்டனர்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகரம் மற்றும்
 நகரங்களில் 1 முதல் 20 நிலைகளை கொண்ட வழித்தடத்தில் 3 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 5 ரூபாயாக
உயர்த்தப்பட்டுள்ளது. 12 ரூபாயாக இருந்த அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், திடீர் பேருந்து கட்டணம் உயர்வை ஏற்றுக்கொள்ள
முடியவில்லை என்று பொதுமக்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதள வாசிகள் பைக்ல போய்கிட்டு இருந்தோம் பெட்ரோல் விலைய ஏத்துனாங்க, சரி பஸ்ல போகலாம்னு பார்த்த டிக்கெட் விலைய ஏத்திட்டாங்க... நடந்து போலானு இருக்கோம் எதிரே குழியத் தோண்டி போட்டுராதிங்கடா...,

ஆளத் தெரியாத உங்களுக்கு ஆட்சி ஒரு கேடா? என தமிழக அரசை மீம்ஸ்களால் வருத்து எடுத்து வருகின்றனர்.

மேலும், பழைய இரும்பு சாமானுக்கு பேரிச்சம் பழம் என்கிற அளவுக்கு பேருந்துகளை வெச்சிட்டு பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி புதிய சாதனை படைத்த தமிழ்நாடு அரசு என்றும் ஏங்க எம்.எல்.ஏவுக்கு சம்பள உயர்வு... மக்களுக்கு பேருந்து கட்டணம் உயர்வா..? எனவும் தமிழக அரசுக்கு அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.

இந்தத்  திடீர் கட்டண உயர்வு பேருந்து கட்டணத்திற்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியா? என்றும் பலர் அதிருப்தியில் கொந்தளித்து வருகின்றனர். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாமல், மீதி எல்லாவற்றையும் உயர்த்துங்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.


  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com