"என்னால் முடிந்ததை செய்கிறேன், உங்களால் முடிந்தால் கொடுங்கள்" - தள்ளுவண்டி கடை தன்னார்வலர்

"என்னால் முடிந்ததை செய்கிறேன், உங்களால் முடிந்தால் கொடுங்கள்" - தள்ளுவண்டி கடை தன்னார்வலர்
"என்னால் முடிந்ததை செய்கிறேன், உங்களால் முடிந்தால் கொடுங்கள்" - தள்ளுவண்டி கடை தன்னார்வலர்

தற்போது முழு ஊரடங்கு, காரணமாக பல்வேறு மக்கள் உணவுக்காக தவிக்கும் சூழலில் அவர்களுக்கு தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் சென்னை மேற்கு மாம்பலம் பக்தவச்சலம் தெருவில் பல ஆண்டுகளாக தள்ளுவண்டி கடையில் மாலை நேரத்தில் பஜ்ஜி வடை போன்ற பலகாரங்களை விற்பனை செய்து வரும் கல்யாணசுந்தரம்(56) என்பவரும் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு இதே போன்ற ஊரடிங்கின் போது தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் கல்யாண சுந்தரமும் அவரது மனைவி பத்மாவதியும் அந்த பகுதியில் இருக்கக்கூடிய ஏழைகளுக்கு உணவை தங்கள் வீடுகளிலேயே சமைத்து மதிய மற்றும் இரவு வேளையில் வழங்கி வந்தனர். தற்போது இந்த ஆண்டு முழு ஊரடங்கு இருக்கும் இந்த சூழ்நிலையில் தான் சேமித்து வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாய் பணத்தை சேமிப்பிலிருந்து எடுத்து தங்கள் பகுதியில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு உணவை சமைத்து விநியோகம் செய்து வருகிறார்கள்.

தற்போது தான் சேமித்து வைத்திருந்த பணம் முதல் 5 நாட்களிலேயே செலவாக தனது வாடிக்கையாளர்கள் சட்டமன்ற உறுப்பினர், தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நிதியுதவி தருவதால், தான் தொடர்ந்து இந்தப் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார் கல்யாணசுந்தரம்.

முதல் நாள் மதிய உணவில் நூறு பேருடன் ஆரம்பித்த இந்த உணவு சேவை தற்போது 12வது நாளாக மதியம் மற்றும் இரவு வேலையை சேர்ந்து சுமார் நூறுக்கும் மேற்பட்டோருக்கு உணவுகளை வழங்கி வருகிறார்கள்.

இவர்களுக்கு உதவ நினைத்தால் 9344732640 - Gpay முலம் உதவலாம்


- சுபாஷ் பிரபு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com