குமாரசாமியை சந்திக்காதவங்க என்ன சாதிச்சிட்டாங்க ? கொதிக்கிறார் சினேகன்

குமாரசாமியை சந்திக்காதவங்க என்ன சாதிச்சிட்டாங்க ? கொதிக்கிறார் சினேகன்

குமாரசாமியை சந்திக்காதவங்க என்ன சாதிச்சிட்டாங்க ? கொதிக்கிறார் சினேகன்
Published on

(25.06.2018) சினேகன் பேட்டியின் தொடர்ச்சி.... 

நடிகர் கமல்ஹாசன் தொடங்கியிருக்கும் “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சி முதல் இன்று வரை அந்த கட்சியில் சுறுசுறுப்பாய் இயங்கி வருகிறார் கவிஞர் சினேகன். அவர் எழுதிய பாடல்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நேற்றுமுன் தினம் வெளியிட்டார். இந்நிலையில் புதியதலைமுறை இணையதளம் சார்பாக அவரை தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன் வைத்தோம்.

அப்படி இத்தனை நாளில் நீங்கள் கண்ட பலன் ஏதாவது ஒன்று சொல்ல முடியுமா..?

கிராம சபை ஒன்றே எங்களுக்கு மிகப் பெரிய ஆச்சர்யம். கிராம சபை என்ற ஒற்றை வார்த்தைதான் சொன்னோம். ஒவ்வொரு அதிகாரிகளும் அலறுகிறார்களே.. 30 வருடம் கழித்து இந்த வார்த்தையை கேட்கும்போது எல்லோருக்கும் புதிதாய் இருந்தது. வருகிற ஆகஸ்ட் மாதம் நடக்கிற கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக எங்கள் நிர்வாகிகள் கலந்து கொள்ள இருகிறார்கள். நானே என்னுடையை கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

அப்போது அவர்கள் முன் பத்து கேள்விகளை முன்வைத்தேன். அதுவே அடுத்த கூட்டத்தில் அதற்கான பதில் இல்லை என்றால் மக்கள் போராட்டமாக வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துட்டு வந்து இருக்கோம். இது தான் மாற்று அரசியல். இதையே போராட்டமா நினைச்சி பஸ்ச மறிச்சி போராட்டம் நடத்துவது வழக்கமான அரசியல். அதை தான் வேண்டாம் என்கிறோம் நாங்கள். ஒருவரை விசாரிக்க கூட ஒரு களம் கொடுக்கனும், இப்போதுதான் கேள்வி கேட்க தொடங்கி இருக்கோம். பதில் சொல்லும் வரை காத்து இருந்து பார்ப்போம். அதற்காக மற்ற கட்சிகளை போல நீண்ட தூரம் மக்கள் நீதி மய்யம் காத்திருக்காது. 

காவிரி விவகாரத்தில் உங்களின் நிலைப்பாட்டை எல்லோருமே எதிர்க்கிறாகள். அதுவும் உங்களுடன் ஆரம்பம் முதல் உடன் இருந்த பி.ஆர்.பாண்டியன் கூட கமலை விமர்சனம் செஞ்சிருக்காறே..?

சரி, கர்நாடக முதல்வரை சந்தித்தது தப்புனு சொல்றீங்க... சந்திக்காம இங்க இருக்கிறவங்க என்ன சாதிச்சிட்டாங்க.. இதை செய்து இருக்கலாம். அதை செய்து இருக்கலாம்னு பலர் யோசனை சொல்லலாம். தண்ணீரை பெறுகிறோமோ இலையோ அறிக்கை மூலமாகவோ, அரசாங்கம் மூலமாகவே, நீதிமன்றம் மூலமாகவோ பேசுவதை விட நேரடியாக சந்திக்கும் போது ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பு கனியுமா என்று எதிர்பார்த்து இருக்கலாம்.

அப்படியில்லையென்றால் இனி வரும் காலங்களிலாவது அது கனியும் என்ற நம்பிக்கைக்கு இது ஒரு விதையாக இருக்கலாம். எதையும் ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. மெல்ல மெல்ல நகர்த்துகிறோம். அந்த நகர்வு நல்ல இடத்திற்கு செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.  


நாங்கள் வலதும் இல்லை, இடதும் இல்லைனு சொல்லி தான் கட்சி ஆரம்பிச்சிங்க.. ஆனால் அண்மைகாலங்களில் கமல் சந்திப்பது எல்லாமே காங்கிரஸ் தலைவர்களா இருக்காங்க இல்லைனா இடதுசாரி தலைவர்களா இருக்காங்க... இது தான் உங்கள் மய்யமா...?

மேலே உள்ள அதிகாரமும் கீழே உள்ள அதிகாரமும் மக்களுக்கு எதிராக உள்ளது. அப்படி இருக்கும்போது அதை எதிர்த்து யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ ( இடைமறித்த நாம், இப்படி சொல்லிதானே முந்தைய காலத்தில் பல கட்சிகள் கூட்டணி அமைத்திருகிறது. என்றோம்) கமல் சந்திப்பது நட்பு ரீதியான சந்திப்பு தான். சினிமாக்காரராக இருக்கும் வரை இவருக்கு யாரும் அரசியல் எதிரி இல்லை. இவர் மீது பொறாமை கொண்டவர்கள் இவரை எதிரியாக பார்க்கிறார்கள். இன்னும் சிலர், யார் யாரோ அரசியலுக்கு வருகிறாகள் இவரும் வரட்டும் என பார்க்கிறார்கள். நாம் யாருக்கும் எதிரி இல்லை. ஆனால் மக்களுக்கு எதிராக உள்ள அரசுகளுக்கு எதிராக குரல் கொடுப்பது நமது கடமையும், பொறுப்பும் என்று  அவர் கட்சி தொடங்கும் போது இதைதான் சொன்னார். அதில் இன்னமும் உறுதியாக இருகிறார். அவருடைய முதல் படி என்பது எல்லோரிடமும் நட்புறவு வைத்துக்கொள்வது அதைதான் அவர் செய்து வருகிறார். அப்படி என்றால் நீங்கள் எல்லோரையும் சந்திக்கலாமே பிறகு ஏன் காங்கிரஸ், இடதுசாரி மட்டும் ? அநீதி இழைக்கும் அரசை நாங்கள் எப்படி சந்திக்க முடியும்..மக்களுக்கு எதிராக உள்ள நபர்களை எப்படி சந்திக்க முடியும். அப்படி இருந்தும் நாங்கள் அரசாங்கத்தை சந்திக்க கேட்டப்போது, அதை எதோ ஒரு காரணம் சொல்லி எங்களை தவிர்க்கதானே பார்தார்கள். அப்படி என்றால் அவர்கள் எங்களை சந்திக்கவே பயப்படுகிறார்கள் என புரிஞ்சிக்க முடியுது. நாங்கள் தயராக இருந்தாலும் அவர்கள் தயராக இல்லை.   

கமல் அவர்களுடைய சினிமா போட்டியாளர் ரஜினி. இன்றைக்கு அரசியலிலும் போட்டியாளர். அவருடைய அரசியல் வருகை உங்கள் கட்சிக்கு பாதிப்பை உண்டாக்கும்னு நினைக்கிறீங்களா..? வருங்காலத்தில் அவருடன் இணைந்து பயணிக்க வாய்ப்பு உள்ளதா..?

ரஜினி அரசியலுக்கு வரட்டும் பிறகு அதைப்பற்றி பேசலாம். அவர் இன்னும் அரசியலுக்கு வரவில்லை.. வருவதாக சொல்லிக்கொண்டுயிருகிறார் அவ்வளவு தான். (ஒரு வேளை வந்தால் சேர்ந்து பயணிக்க வாய்ப்பு இருக்கா) அவர் கொள்கையோடு ஒத்து போனால் அதை கமல் முடிவு செய்வார். 

கமல் அவர்களுடைய அண்ணாவே கமல் அரசியலில் ஜொலிக்க முடியாது என்றும், ஆனால் ரஜினி முதல்வர் ஆக கூட வாய்ப்பு இருக்கு சொல்லி இருக்காறே..?

யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானலும் சொல்லலாம். அரசாங்கம் சொல்லலாம், எதிராளிகள் சொல்லலாம், உடன் பிறந்தவர்கள் சொல்லலாம், உடன் இருந்தவர்கள் சொல்லலாம், நண்பர்களே கூட சொல்லட்டும் இப்படி யார் வேண்டுமானாலும் சொல்லட்டும், எல்லாவற்றையும் தேர்தல் களம் தீர்மானிக்கும். விமர்சனங்கள் வரத்தான் செய்யும், அது அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும் !

சரி, அவர் உங்கள் கட்சி இல்லை விமர்சனம் வைக்கிறார். ஆனால் உங்கள் கட்சியில் இருந்த உயர்மட்ட குழு உறுப்பினரே கட்சியை விட்டு விலகியிருக்கார். அதுமட்டுமல்ல கமலையும் விமர்சனம் செஞ்சியிருக்கார் இது தான் நீங்கள் சொன்ன தலைமை பண்பா..? 

அதற்கான பதிலை ராஜசேகர் தான் சொல்லனும். அவர் எதை எதிர்பார்த்து கட்சிக்கு வந்தார்னு சொல்லட்டும். பிறகு நாங்கள் சொல்கிறோம் அது எங்கள் கட்சியில் இருக்கா இல்லையானு.. உடன்பாடு இல்லை என்றால் எதில் உடன்பாடு இல்லை என்று சொல்லி இருக்கனும்.கட்சி ஆரம்பிச்சு நான்கு மாதம் கூட ஆகாத ஒரு கட்சியில் இருந்து வெளியேருகிறார் என்றால் அவர் எதையோ எதிர்பார்த்து வந்து இருக்கிறார் அது நடக்கவில்லை என்றதும் அப்படி சொல்லிவிட்டு போயிருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com