கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்த கொடுமையான நாள் இன்று..!

கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்த கொடுமையான நாள் இன்று..!
கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்த கொடுமையான நாள் இன்று..!

அந்த கொடுமையான நாளை யாராலும் மறந்திருக்க முடியாது. கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 94 பிஞ்சுக் குழந்தைகள் தீயிற்கு இரையான தினம் இன்று. 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி கிருஷ்ணா தொடக்க பள்ளியின் சமையலறையில் ஏற்பட்ட தீவிபத்து பள்ளி முழுவதும் பரவி 94 மழலைகளை பலிகொண்டது. கீற்றுக்கொட்டகை மேற்தளத்துடன் பாதுகாப்பற்ற முறையில் இயங்கிவந்த அப்பள்ளியால் இத்தனை உயிர்கள் பலியானது, 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர நிகழ்வு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் துயரத்தை உருவாக்கியது.

இப்பள்ளி குழந்தைகளின் நினைவாக கும்பகோணம் காவிரிக்கரையில் நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 ஆம் தேதி குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், தங்கள் வீடுகள், குழந்தைகளின் சமாதி, தீவிபத்து ஏற்பட்ட பள்ளி ஆகிய இடங்களின் முன்பு தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த உணவு, உடைகளை வைத்து படையலிட்டு வணங்கும் காட்சி காண்போர் நெஞ்சை கலங்கசெய்யும்.

இந்த தீவிபத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளி கட்டுமானம், பாதுகாப்பு போன்றவற்றில் பெருமளவு விழிப்புணர்வு உருவாகியிருந்தாலும், இப்போதும் சில பள்ளிகள் உரிய பாதுகாப்பு இன்றி இயங்கத்தான் செய்கின்றன. கும்பகோணம் பள்ளி தீவிபத்திற்கு உரிய நீதியும், உரிய இழப்பீடும் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர் குழந்தைகளின் பெற்றோர்கள். தங்கள் குழந்தைகள் இப்போது உயிருடன் இருந்திருந்தால், அவர்கள் தற்போது கல்லூரிக்கு சென்றுகொண்டிருப்பார்கள் என கண்ணீரை உதிர்க்கிறார்கள் பிஞ்சுகளை இழந்த பெற்றோர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com