கேப்டன்சி நாக் ஆடிய கே.எல்.ராகுல்! கொல்கத்தாவை வென்றது பஞ்சாப்! மேட்ச் ரிவ்யூ!

கேப்டன்சி நாக் ஆடிய கே.எல்.ராகுல்! கொல்கத்தாவை வென்றது பஞ்சாப்! மேட்ச் ரிவ்யூ!

கேப்டன்சி நாக் ஆடிய கே.எல்.ராகுல்! கொல்கத்தாவை வென்றது பஞ்சாப்! மேட்ச் ரிவ்யூ!

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சீசனின் 45-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், பவுலிங் தேர்வு செய்தார். அதனால் கொல்கத்தா முதலில் பேட் செய்தது. 

சறுக்கலில் தொடங்கிய கொல்கத்தா!

கொல்கத்தா அணிக்காக ஷூப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கில், மூன்றாவது ஓவரில் 7 ரன்களில் க்ளீன் போல்டானார். அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசி இருந்தார். பவர் பிளே ஓவர் முடிவில் 48 ரன்களை எடுத்தது பஞ்சாப். 

வெங்கடேஷ் ஐயர் அசத்தல்!

கொல்கத்தா அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் 67 ரன்களை சேர்த்திருந்தார். அந்த அணிக்காக அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன் அவர் தான். நடப்பு சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 41, 53, 18, 14 மற்றும் 67 (இந்த இன்னிங்ஸ்) ரன்களை எடுத்துள்ளார்.

மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்!

பஞ்சாப் அணியின் 22 வயதான இளம் இடது கி மீடியம் பேச பவுலரான அர்ஷ்தீப் சிங் இந்த ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். கில், நித்திஷ் ராணா, தினேஷ் கார்த்திக் என மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தி இருந்தார். பவர் பிளேயிலும், டெத் ஓவர்களிலும் தலா இரண்டு ஓவர்களை வீசி இருந்தார் அவர். 

பஞ்சாப் அணி 180 ரன்களுக்கு மேல் எடுக்கும் நிலையில் இருந்தது. ஆனால் அந்த அணியை 165 ரன்களில் சுருட்ட பஞ்சாப் அணியின் பவுலர்கள் இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். 

கடைசி 6 ஓவர்களில் மொத்தம் 50 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது கொல்கத்தா. இருபது ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது. நித்திஷ் ராணா மற்றும் ராகுல் திரிபாதி தங்கள் ரோலை கொல்கத்தா அணிக்காக அற்புதமாக டெலிவர் செய்திருந்தனர். 

ராகுல் - மயங்க் சிறப்பான தொடக்கம்!

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது பஞ்சாப். அந்த அணிக்காக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் மீண்டும் ஒருமுறை நல்ல தொடக்கத்தை கொடுத்திருந்தனர். இருவரும் 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். பவர் பிளே ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்களை எடுத்திருந்தது. 

மயங்க் அகர்வால் 27 பந்துகளில் 40 ரன்களை குவித்து வருண் சக்கரவர்த்தி சுழலில் அவுட்டானார். 

கேப்டன்சி நாக் ஆடிய கே.எல்.ராகுல் அதிரடி!

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்தில் கேப்டன்சி நாக் ஆடி அசத்தியிருந்தார். 55 பந்துகளில் 67 ரன்களை எடுத்திருந்தார் அவர். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இந்த சீசனின் லீடிங் ரன் ஸ்கோரராகி உள்ளார் ராகுல். மொத்தம் 11 இன்னிங்ஸில் அவர் 489 ரன்களை எடுத்துள்ளார். இருப்பினும் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவர் அவுட்டானார். மேன் ஆப் தி மேட்ச் விருதை வென்றிருந்தார் அவர். 

பீல்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா!

இந்த ஆட்டத்தில் அபிஷியலாக மொத்தம் 5 கேட்ச்களை கோட்டை விட்டது கொல்கத்தா. அது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 19-வது ஓவரின் மூன்றாவது பந்தில் ராகுல் கொடுத்த கேட்ச்சை ராகுல் திரிபாதி பிடித்திருந்தார். இருப்பினும் டிவி அம்பயர் ரிவ்யூவில் பந்து தரையில் பட்டது போல இருந்தது. அதனால் ராகுல் நாட் அவுட் என சொல்லப்பட்டது. 

அதிரடியாக ஆடிய ஷாருக்கான்!

பஞ்சாப் அணிக்காக ஷாருக்கான் 9 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். பஞ்சாப் அணிக்கு தேவைப்பட்ட வெற்றி ரன்கள் ஷாருக் பேட்டில் இருந்து வந்திருந்தது. ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் அவரது இன்னிங்ஸில் அடங்கும். 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது பஞ்சாப். 

கொல்கத்தா அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

“நாங்கள் இந்த ஆட்டத்தில் நிறைய கேட்ச்களை தவறவிட்டது ஆட்டத்தை இழக்க முக்கியக் காரணம். இந்த விக்கெட்டில் நாங்கள் நிர்ணயித்த இலக்கு போதுமானதாக இல்லை. இருந்தாலும் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே விளையாடி இருந்தனர். 19-வது ஓவரில் அந்த நாட் அவுட் எங்களுக்கு சாதகமாக அமைந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கலாம். வலுவான தொடக்கம் கிடைத்தும் இறுதி ஓவர்களில் ரன் குவிக்க தவறிவிட்டோம். ரசல் விளையாடாதது பின்னடைவு” என தோல்விக்கு பிறகு தெரிவித்திருந்தார் கொல்கத்தா கேப்டன் மோர்கன்.  

இந்த ஆட்டத்திற்கு பிறகு புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா நான்காவது இடத்திலும், பஞ்சாப் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. பஞ்சாப் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற காரணத்தினால் டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com