பட்டியலின குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் திட்டம்: தெலங்கானாவில் வலுக்கும் சர்ச்சை

பட்டியலின குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் திட்டம்: தெலங்கானாவில் வலுக்கும் சர்ச்சை

பட்டியலின குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் திட்டம்: தெலங்கானாவில் வலுக்கும் சர்ச்சை
Published on

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்த புதிய திட்டம் சர்ச்சைக்குள்ளான ஒன்றாக மாறி இருக்கிறது. பட்டியலின மக்களை கேசிஆர் ஏமாற்றுவதாக அம்மாநில எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

'தலித் பந்து' என்ற அந்தத் திட்டத்தின் கீழ் தலித் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்பது அத்திட்டத்தின் முக்கிய அம்சம். மாநிலம் முழுவதும் உள்ள பட்டியலின  குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.1,200 கோடி மாநில அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. ஆனால், விரைவாகவே இந்தத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள பட்டியலின மக்கள் என்பதை சுருக்கி, ஹுசுராபாத் தொகுதியில் மட்டும் பட்டியலின பந்து திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில், தெலங்கானா அரசு மாநிலத்தின் 119 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தலா 10 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து தலித் பந்து திட்டத்தின் மூலம் தலா ரூ.10 லட்சம் கொடுக்கும் என்று கூறிய நிலையில், அதனை மாற்றி கூடுதலாக ஹுசுராபாத் தொகுதி முழுவதும் கவரும் விதமாக கூடுதலாக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்தது. அதன்படி, தொகுதியில் உள்ள பல பட்டியலின குடும்பங்களுக்கு மாநில அரசிடமிருந்து நேரடியாக ரூ.10 லட்சம் நிதி உதவி பெறுவார்கள் என்பதே இதன் பொருள்.

இப்படி ஹுசுராபாத் தொகுதிக்கு மட்டும் திடீரென கருணை காட்டுவதன் பின்னணி, அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதுதான் காரணம். சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவிடம் வெற்றியை பறிகொடுத்தது சந்திரசேகர் ராவ்வின் தெலங்கானா ராஷ்ட்ரிய ஷமிதி கட்சி. மாநிலத்தில் பாஜக பெற்றுவரும் வளர்ச்சியை தடுக்க வேண்டும். அதேபோல் புதிதாக கட்சி துவங்கியுள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா வேறு புதிய குடைச்சலாக உருவெடுத்து இருக்கிறார். அவரும் இந்த இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ் கட்சிக்கு குடைச்சல் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால், அந்தக் கட்சியையும் ஆரம்ப கட்டத்திலயே அடக்கிவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவேதான் டி.ஆர்.எஸ் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சி.ஆர் எதிர்வரும் ஹுசுராபாத் இடைத்தேர்தலை தனது கௌரவமாக எடுத்துக்கொண்டுள்ளார். இதன் விளைவாகத்தான் 'தலித் பந்து' போன்று அதிரடி திட்டங்களை ஹுசுராபாத் தொகுதி மக்களை கவரும் வகையில் அவர் தீட்டி வருகிறார்.

பெரும்பாலும் பட்டியலின வாக்காளர்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியான ஹுசுராபாத். இதனாலேயே இந்த கரிசனம் என சொல்லப்படுகிறது. தற்போது இந்தத் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்கொடி தூக்கியுள்ளனர். தேர்தலுக்கு பின்பு இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு இப்படி செயல்பட கூடாது என போராட்ட மிரட்டல்கள் விடுத்து, நீதிமன்றங்களை அணுக முடிவெடுத்துவிட்டனர்.

இதையடுத்து, தற்போது அந்தத் திட்டத்தை கே.சி.ஆர். நிறுத்தி வைக்க முடிவெடுத்து இருப்பதாக அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கேற்ப, இந்தத் திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடக்க இருந்த நிலையில், அதனை ரத்து செய்திருக்கிறார் கே.சி.ஆர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com