கமல் அரசியல் மேடை: கேள்வியும், பதிலும் முழுத்தொகுப்பு!

கமல் அரசியல் மேடை: கேள்வியும், பதிலும் முழுத்தொகுப்பு!
கமல் அரசியல் மேடை: கேள்வியும், பதிலும் முழுத்தொகுப்பு!

நடிகர் கமல்ஹாசன் இன்று புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.  மதுரையில் நடைபெற்ற முதல் அரசியல் மாநாட்டில் கட்சிக் கொடியை ஏற்றிய அவர், கட்சிப் பெயரை அறிவித்தார். கட்சிப் பெயர் “மக்கள் நீதி மய்யம்”. அவரது கொடி வெள்ளை நிறத்தில் உள்ளது. அதில் 6 இணைந்த கைகள் உள்ளன. 3 கைகள் வெள்ளை நிறத்திலும், 3 கைகள் சிவப்பு நிறத்திலும் உள்ளது. அதற்குள் வெள்ளை நட்சத்திரத்தை சுற்றி கருப்பு நிற வளையம் இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மேடையில் உரையாற்றிய கமல்ஹாசனிடம், மக்கள் எழுதிய கேள்விகளாக பல கேட்கப்பட்டன. அதற்கு கமலும் உடனடியாக பதில் அளித்தார்.

கேள்வியும், பதில்களும்:

இத்தனை நாட்கள் எங்கு இருந்தீர்கள்?

இத்தனை நாட்கள் உங்கள் உள்ளத்தில் இருந்தேன். இனி உங்கள் இல்லத்தில் இருப்பேன்.

உங்களை பிடிக்கும், நம்பி வரலாமா, எத்தனை நாட்கள் தாக்குப்பிடிப்பீர்கள்?

என் மூச்சு உள்ளவரை தாக்குப்பிடிப்பேன். இங்கு யாரும் நிரந்தர முதல்வராக இருக்கமாட்டார்கள்.

உங்களுக்கு ஒரு கஷ்டம் என்பதால் தான் விஸ்வரூபம் எடுத்திருக்கிறீர்களா?

எனக்காக 2 விஸ்வரூபம் எடுத்துவிட்டேன். தற்போது மக்களுக்காக விஸ்வரூபம் எடுக்கப்போகிறேன்.

உங்கள் வழிகாட்டி யார்? காந்தியா? பெரியாரா? அம்பேத்கரா? காமராஜரா?

எனக்கு காந்தியையும் பிடிக்கும். அம்பேத்கரையும் பிடிக்கும். நேருவையையும் பிடிக்கும். கெஜ்ரிவாலையும் பிடிக்கும். சந்திரபாபு நாயுடுவையும் பிடிக்கும். பினராயி விஜயனையும் பிடிக்கும். ஏன் ஒபாமாவையும் பிடிக்கும்.

ஊழலை எப்படி ஒழிப்பீர்கள்?

நான் ஒழிக்க முடியாது. நாம் சேர்ந்து ஒழிப்போம்.

ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் கொடுப்பீர்களா?

அதைக்கொடுக்கமாட்டேன். வேலைவாய்ப்பை கொடுப்பேன். இலவசத்தையும், ஏழ்மையையும் ஒழிப்பேன்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு என்ன வழி?

நான் தான் வழி. பெண்களை அம்மா, சகோதரி, மகளாக நினைப்பேன். பெண்களுக்கு சமமான இடம் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ் சாகிறதே அதற்கு என்ன செய்வீர்கள்?

சந்தோசமாக தமிழ் பேசுங்கள் அது போதும். தமிழ் கல்வியை கொடுக்க வேண்டியது நமது கடமை.

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

எனக்கு 6 மொழிகள் அறைகுறையாக தெரியும். அதில் 4-இல் தற்குறி.

எதற்கு ராமேஸ்வரம்? எதற்கு கலாம் வீடு?

கலாம் வீடு ராமேஸ்வரத்தில் இருந்ததால் சென்றேன். எனக்கு பாவ, புன்னித்தியத்தில் நம்பிக்கை இல்லை. நியாய, தர்மத்தில் நம்பிக்கை உண்டு.

கால் வலி எப்படி இருக்கு?

கால்வாசி குறைந்துள்ளது. ஆனால் தமிழன் முன்னேறாமல் இருக்கும் வலி மாறும் வரை போகாது.

உங்கள் பிள்ளைகள் அரசியலுக்கு வருவார்களா?

என் பிள்ளைகள் (மக்கள்) அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.

ஒருவர் உங்களை போன்சாய்(விரைவில் விழும் மரம்) என்கிறார். ஒருவர் மரபனு மாற்றப்பட்ட விதை என்கிறார்? இதெற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?

அவர்கள் பேசட்டும். நாம் வேலையை செய்வோம். எங்கள் மீது கோபம் இருந்தால் அவர்கள் நல்லது செய்து காட்டட்டும். அவ்வாறு செய்தால் நாங்கள் வீட்டுக்கு போய்விடுகிறோம். ஆனால் அவர்களால் அது முடியாது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com