நவீன இந்தியாவின் சிற்பி.. கல்வி முதல் தொழில்துறை வரை வரலாறு பேசும் ’நேரு’வின் சாதனைகள்

நவீன இந்தியாவின் சிற்பி.. கல்வி முதல் தொழில்துறை வரை வரலாறு பேசும் ’நேரு’வின் சாதனைகள்
நவீன இந்தியாவின் சிற்பி.. கல்வி முதல் தொழில்துறை வரை வரலாறு பேசும் ’நேரு’வின் சாதனைகள்

இன்று நம் முதல் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாள்.

காந்தியை கொண்டாடிய நாடு நேருவை கைவிட்டது என்றால் மிகையாகாது. ஆனால் மற்ற தலைவர்களையும், சுதந்திர போராட்ட வீரர்களை அங்கீரத்த நாடு, நேருவை மறந்தது. ஆனால் உலக நாடுகள் அங்கீரிக்க தவறவில்லை. நேருவை ’நவீன இந்தியாவின் சிற்பி’ என்று நியூயார்க் டைம்ஸ் இதழ் கெளரவித்தது. நேரு இறந்து போது, ‘இந்த மாமனிதர் இல்லாத உலக அரங்கு களையிழந்து காட்சியளிக்கும்’ என வெளிநாட்டு இதழ்கள் கட்டுரை வெளியிட்டு அஞ்சலில் செலுத்தினர்.

இன்று நடக்கும் அரசியல் நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும், 58 வருடங்களுக்கு முன்பு இறந்த இந்திய இறையாண்மையின் தந்தை விமர்ச்சிக்கப்படுகிறார். இன்றைய பிழைகளுக்கு அன்றைய நேரு தான் காரணம் என நேருவின் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு முன்னாள் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் , நேருவை கிரிமினல் என விமர்ச்சித்தார். கடந்த 8 வருடங்களாகவே நேருவின் மீதான பொய்யான அர்த்தமில்லாத குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் அதிகரித்து வருவதை காண முடிகிறது.

அன்று இந்திய மக்களைக் கட்டிப்போடும் வசீகரமான ஆளுமைமிக்க தலைவர் என இந்திய மக்களிடம் நிலவிவந்த எண்ணம் தற்போது மாறிவிட்டது. அன்றைய இந்தியாவில் போற்றப்பட்டவர், அவர் செய்த மகத்தான பணிகள், இந்தியாவுக்கு அவரின் பங்களிப்புகளை மலுங்கடிக்க செய்யும் பணிகள் தொடர்ந்து நிகழ்கிறது. எந்த தலைவரும் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர் இல்லை தான். ஆனால் எவர் மீதும் விமர்சனம் வைக்கும் முன்பு, அதில் ஒரு அறம், உண்மை, அர்த்தம் இருக்க வேண்டும்.

சரி.. எல்லாத்துக்கு நேரு தான் காரணமா?

விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியின் தலைமையில் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு 3,259 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து, 1947-ல் இந்தியாவின் பிரதமராக நேரு பொறுப்பேற்று 17 ஆண்டுகாலம் ஆட்சி செய்துள்ளார். அந்த 17 ஆண்டுகளாம் , நேரு மோசமாக ஆட்சியையோ அல்லது கொடுங்கோல் ஆட்சியையோ செய்திருக்கவில்லை என்பதற்கு சான்று தான் வரலாறு அவரை ‘நவ இந்தியாவின் சிற்பி’ என அழைப்பதற்குக் காரணம். நேருவின் வாழ்க்கையை நினைவுகூர்வது முக்கியமானது. அதன்மூலம், அவரின் வாழ்நாளில் இந்தியாவிற்கு எப்படியெல்லாம் உழைத்தார் என்றும், இப்போதும் நேரு ஏன் தேவைப்படுகிறார் என்றும் உணர முடியும்..

200 ஆண்டுகால ஆங்கிலேயர்களின் சுரண்டல் ஆட்சிக்குப் பிறகு, 30 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நாடாகத் திக்கற்ற நிலையில், ஆதரவின்றி விடப்பட்டது இந்தியா. சுதந்திரம் பெற்றபோது, உலகத்தின் மிக ஏழை நாடுகளில் ஒன்றாக தர வரிசைப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது 30 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இருள் சூழ்ந்த தீவு போல திக்கற்ற நிலையில் தான் இந்தியா இருந்தது.

இப்படியான மோசமான நிலையில்தான் இந்தியாவின் பிரதமராக நேரு பொறுப்பேற்றார். வறுமையில் உழன்று கொண்டிருந்த இந்தியாவை சரியான திட்டமிட்ட பொருளாதாரத்தின் மூலம் வளர்ச்சியை நோக்கி முன்னேற தொடங்கியது. என்ன செய்தார் நேரு என்பதற்கு அன்றைய சுதந்திர இந்தியாவின் நிலையை அடிப்படையாக வைத்துத்தான் அவரது சாதனைகளைப் பார்க்க வேண்டும்.

இந்தியா இன்று இருக்கும் நிலைக்கு, நேருவின் ஆட்சிக்காலம் தான் நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருக்கிறது. இந்தியாவை விடுதலைக் குடியரசாக அறிவித்ததோடு, தனக்கான அதிகாரத்தை இந்தியா தன்னுடைய மக்களிடமிருந்தே பெறுகிறது என்று அறிவித்ததார்.

அனைவருக்கும், "சமூக, பொருளாதார, அரசியல் நீதி கிடைப்பதையும்; சம அந்தஸ்து, வாய்ப்புகளை உறுதி செய்வதையும்; சிந்திக்கவும், விரும்பிய மதத்தைப் பின்பற்ற உரிமையும் மேலும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினப் பகுதிகளுக்குப் பாதுகாப்பும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டது. இவையனைத்தும் அதற்கு முன்புவரை தரப்படவில்லை. 1937-ம் ஆண்டு தேர்தலில் சொத்துரிமையைக் கொண்டு வாக்களிக்கும் உரிமை மூன்று கோடி இந்தியர்களுக்கு மட்டுமே தரப்பட்டது. ஆனால், விடுதலை இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் 17.3 கோடி இந்தியர்களுக்கு வாக்குரிமை தரப்பட்டது.

தொழில் துறையைப் பொறுத்தவரை நேருவுக்குப் பெருங்கனவு இருந்தது. 1948-ல் தொழிற்கொள்கைத் தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. ஒழுங்குமுறைச் சட்டம் 1951-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1952-ல் சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை (ICF) நிறுவப்பட்டது.
1953-ல் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (ஹெச்எம்டி) உருவாக்கப்பட்டுப் பலவிதமான தொழில் உபகரணங்களை உற்பத்திசெய்யத் தொடங்கியது. 1954-ல் அரசாங்கத்துக்குச் சொந்தமான பிம்ப்ரி ஆலையிலிருந்து பென்சிலின் மருந்து தயாரிக்கப்பட்டது.

போன்ற பல விசயங்கள் நேருவால் நிகழ்ந்தது தான். அதே நேரத்தில் சமூக நலன் மீதும் அவர் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். இதன் விளைவாக, பல முக்கியமான சட்டங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டன. 1947-ல் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் நல நிதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1956-ல் ஆயுள் காப்பீட்டுக் கழகம் தேசியமயமாக்கப்பட்டது நேரு அரசு எடுத்துவைத்த முக்கியமான முன்னெடுப்பு இது.

1954 அன்று உலகின் மிகப் பெரிய பக்ரா நங்கல் கால்வாய் கட்டமைப்பைத் தொடங்கிவைத்த நேரு, ‘அணைகள், வழிபட வேண்டிய ஆலயங்கள்’ என்று குறிப்பிட்டார். மேலும், கொனார் அணை, கிருஷ்ணா நதி மீது நாகார்ஜுனா சாகர் அணை, பக்ரா நங்கல் அணை, ரிஹந்த் அணை என்று ஏராளமான அணைகள் நேருவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன. 1960-ல் சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகின் மிகப் பெரிய நீர்ப்பாசன அமைப்பைக் கட்டமைக்க இது உதவியது.

வறுமையில் ஆழ்ந்துகிடந்த இந்தியாவைக் கல்வியில் கரையேற்றுவது அவ்வளவு சாதாரணமான விஷயமா? இந்த அசாதாரண விசயத்தை நிகழ்த்தி காட்டினார். நேருவின் ஆட்சிக் காலத்தில் நாடெங்கும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் என சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்திலும் நாடு வளர்ச்சியும், சமூக அக்கறையும் இருக்கும்.

அன்றும்.. இன்றும்.. வெளியுறவுக் கொள்கை

இறுதியாக "இந்தியாவிற்கென்று தனித்த, சுயமான சர்வதேச அடையாளத்தை" உருவாக்கிய வெளியுறவு துறை ! இது நேரு இந்தியாவுக்கு செய்த மகத்தான பங்களிப்புகளில் ஒன்று. சர்வதேச விவகாரங்களிலும் இந்தியா தனது அண்டை நாடுகளிடம் கொண்டிருந்த உறவின் அடிப்படையிலும் இந்த நற்பெயரை நேரு பெற்றிருந்தார். 1949-ல் காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா நீடித்திருக்க முடிவெடுத்தது. அன்று நேரு எடுத்த முக்கிய முடிவுகளில் இதுவும் ஒன்று.

யுகோஸ்லேவியாவின் ப்ரியோனி நகரில் இருந்தபடி நேரு, நாசர், டிட்டோ ஆகிய மூவரும் ஒரு கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டதன் மூலம் அணிசேரா இயக்கத்தின் தொடக்கமாக அது அமைந்தது. ‘சமாதானப் புறா’ என்ற பெயரை நேரு சர்வதேச நாடுகளிடையே பெற்றிருந்தார். இந்தியாவுக்கு 17 ஆண்டுகள் பிரதமராக இருந்த நேருவின் பங்களிப்பை வரலாற்றிலிருந்து மறைத்துவிட முடியாது. நேரு தன்னுடைய முழு வாழ்க்கையையும் இந்தியாவிற்காக அர்ப்பணித்தார்.

நேருவின் சறுக்கள் மூலம் அவரை விமர்ச்சிக்கவும் காரணங்கள் உண்டு தான். இந்தியாவை சரியான திட்டங்களால் வகுத்து செதுக்கிய நேருவின் மகத்தான சாதனைகளை வரலாற்றிலிருந்து நீக்கிவிட முடியாது. பண்டித ஜவஹர்லால் நேரு, தன்னுடைய அழுத்தமான முத்திரையை இந்தியாவின் மீதும், உலகத்தின் மீதும் விட்டுச் சென்றிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com