UPI உருவானது எப்படி? பணப்பரிவர்த்தனை செய்வது பாதுகாப்பானதா? - நிபுணர் விளக்கம்

டிஜிட்டல் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை குறிப்பதில் பெரும் பங்கு வகிப்பது யுனிஃபைடு பேமெண்ட்ஸ் இண்டர்ஃபேஸ் (UPI) எனப்படும் பணப் பரிவர்த்தனை. இந்த UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது பாதுகாப்பானதா என்பது குறித்து இங்கு விரிவாக அறிவோம்.
UPI
UPIfile image

யுபிஐ உருவானது எப்படி?

இதுகுறித்து சைபர் கிரைம் நிபுணர் கார்த்திகேயன், ”பூக்கடை முதல் பழம், காய்கறி கடைகள் என சாலையோரத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகளிலும் தற்போது இடம்பெறும் கியூஆர் கோடுடன் அட்டையை ஸ்கேன் செய்யும்போது, யுபிஐ மூலம் பணம்தான் செலுத்தப்படுகிறது.

UPI
UPIfile image

யுபிஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அது பாதுகாப்பானதா என பலரிடமும் கேள்வி எழத்தான் செய்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒன்றிணைக்க ரிசர்வ் வங்கியும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பும் இணைந்து உருவாக்கியதுதான் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) என்ற அமைப்பு.

யுபிஐ
யுபிஐகூகுள்

இந்த அமைப்பு ஏற்படுத்தியதுதான் யுனிஃபைடு பேமெண்ட் இண்டர்ஃபேஸ் எனப்படும் யுபிஐ (UPI). இந்த யுபிஐ செயலியின்கீழ் தற்போது 399 வங்கிகள், நிதிச்சேவை நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 7 ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.

2016ஆம் ஆண்டு டிசம்பரில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை 707 கோடி ரூபாயாக இருந்தது. 2017ஆம் ஆண்டு 13 ஆயிரத்து 174 கோடி ரூபாயாகவும் 2018இல் ஒரு லட்சத்து 2ஆயிரம் கோடி ரூபாயாகவும், 2019ஆம் ஆண்டில் 2 லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாயாகவும் பரிவர்த்தனை வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வந்த நிலையில், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்தது 14 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏழே ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்ற யுபிஐ சேவையில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

அனைத்து வங்கிகளும் தங்கள் வங்கிச் செயலியில் யுபிஐ பரிவர்த்தனையை வழங்குகின்றன. சேமிப்பு கணக்கு உள்ள வங்கிச் செயலியில் உள்ள கியூஆர் கோடு அல்லது யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதே கூடுதல் பாதுகாப்பானது. சந்தையில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள THIRD PARTY UPI செயலிகள் உள்ளன. இவற்றில் பிரபலமான பல செயலிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் வருவதில்லை.

upi
upifile image

வளரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை. அதேநேரம், ஆபத்து இருப்பின் அதை, கவனமாகக் கையாள வேண்டும். அப்போதுதான் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை ஹேக்கர்ஸ் போன்றவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளமுடியும்” என்கிறார், கார்த்திகேயன்.

பணத்தைச் சம்பாதிப்பது என்பது பெரிய விஷயமல்ல, அதைப் பாதுகாப்பதும் முக்கியம்.

- கெளசல்யா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com